2.1 திருக்குறள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 2.1 – திருக்குறள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
சொல் பொருள்
- ஆன்ற – உயர்ந்த
- நயன் – நேர்மை
- நன்றி – நன்மை
- புக்கு – புகுந்து
- மாய்வது – அழிவது
- அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
- போல்வர் – போன்றவர்
- பெருஞ்செல்வம் – மிகுந்த செல்வம்
- நன்பால் – நல்ல பால்
நூல் குறிப்பு
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, திருக்குறள்.
- இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளை உடையது.
- இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன.
- உலகிலுள்ள அனைவரும் பின்பற்றத்தக்க சிறந்த அறநெறிக் கருத்துகள் இந்நூலில் உள்ளதால், இது உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுகிறது.
- இந்நூலை இயற்றியவர், திருவள்ளுவர்.
கற்பவை கற்றபின்
நம்மிடம் இருக்கவேண்டிய நற்பண்புகளைப் பட்டியலிடுக.
இரக்கம், ஈகை, நடுவுநிலை, கருணை, நெறி பிறழாமை (சான்றாண்மை)
மதிப்பீடு
சரியான சொல்லைத் தெரிவு செய்
1. ‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள் …………………………
- உயர்ந்த
- பொலிந்த
- அணிந்த
- அயர
விடை : உயர்ந்த
2. “பெருஞ்செல்வம்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
- பெருஞ் + செல்வம்
- பெரும் + செல்வம்
- பெருமை + செல்வம்
- பெரு + செல்வம்
விடை : பெருமை + செல்வம்
3. “பண்புடைமை” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. …………………………
- பண் + புடைமை
- பண்பு + புடைமை
- பண்பு + உடைமை
- பண் + உடைமை
விடை : பண்பு + உடைமை
4. “அது + இன்றேல்” – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………..
- அதுஇன்றேல்
- அதுயின்றேல்
- அதுவின்றேல்
- அதுவன்றேல்
விடை : அதுவின்றேல்
5. பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் …………………………
- நயன்
- நன்றி
- பயன்
- பண்பு
விடை : நயன்
சொற்களைப் பிரித்து எழுதுக.
- இவ்விரண்டும் = இ + இரண்டும்
- மக்கட்பண்பு = மக்கள் + பண்பு
உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.
|
|
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
|
ஈற்றில் ‘மை‘ என முடியும்படி நான்கு சொற்கள் எழுதுக.
- சொல்லாமை
- பொல்லாமை
- கேளாமை
- அறிவுடைமை
வினாக்களுக்கு விடையளிக்க.
1. பண்புடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் யாவை?
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்கு உரிய நல்ல வழியாகும்.
2. ‘மரம் போன்றவர்‘ எனத் திருக்குறள் யாரைக் குறிப்பிடுகிறது?
அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவரே ஆவர்.
3. பண்பில்லாதவன் பெற்ற செல்வம் எவ்வாறு பயனிலாது போகும்?
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்றதாகும்.
சிந்தனை வினா
ஒருவரின் பண்புகளைக்கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
ஒருவரின் பண்புகளைக்கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது என்பது உண்மையே. பெரிய செல்வந்தரின் மகனான ஈ.வெ.ரா. பெரியார் தன்னைப் பொதுநல் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள முன் வந்தபோது, அவரிடம் எவ்விதப் பதவி ஆசை இருக்கவில்லை. மாறாக, அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதை நோக்கமாக கொண்ட அரசியல்வாதிகளின் மத்தியில் தனக்கிருந்த பதவிகளையும், பணத்தையும் துறந்த பின் அரசியலில் நுழைந்த அவர் ஒரு விசித்திர மனிதர். தனக்குத் கிடைத்த இருபத்தொன்று பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். அவர் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அதனால் தான் மக்கள் அவரை இன்றளவும் போற்றிப் புகழ்கின்ற இதற்குக் காரணம் அவரது பண்பு நலன்களே. ஆகவே ஒருவரின் பண்புகளைக் கொண்டு தான், இந்த உலகம் அவரை மதிக்கிறது என்பது நான்றாகப் புலனாகிறது.
கூடுதல் வினாக்கள்
சரியான சொல்லைத் தெரிவு செய்
1. “பதினெண்கீழ்க்கணக்கு” நூல்களுள் ஒன்று ………………….
- சிலப்பதிகாரம்
- கம்பராமாயணம்
- புறநானூறு
- திருக்குறள்
விடை : திருக்குறள்
2. “உலகப்பொதுமறை” எனப் போற்றப்படுவது ………………………….
- சிலப்பதிகாரம்
- திருக்குறள்
- கம்பராமாயணம்
- புறநானூறு
விடை : திருக்குறள்
வினாக்களுக்கு விடையளிக்க
1. திருக்குறளின் பிரிவுகளை கூறுக
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளை உடையது.
2. திருக்குறளில் அதிகாரங்களும், குறட்பாக்களும் எத்தனை உள்ளன?.
திருக்குறளில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன.
3. திருக்குறள் உலகப்பொதுமறை என ஏன் போற்ப்படுகிறது?
உலகிலுள்ள அனைவரும் பின்பற்றத்தக்க சிறந்த அறநெறிக் கருத்துகள் இந்நூலில் உள்ளதால், இது உலகப்பொதுமறை என போற்ப்படுகிறது.
4. யாரை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்?
நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
5. எவை இல்லையெனில் இவ்வுலகம் மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும்?
நற்பண்பு உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. இல்லையெனில், அது மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…