ஆனந்தம் விளையும் பூமியடி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 4 – ஆனந்தம் விளையும் பூமியடி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.
- நமது நாட்டில் அதிக இயற்கை வளம் நிறைந்துள்ளது.
- நமது நாடு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூழந்து இயற்கை அரணாக விளங்குகிறது (தீபகற்பம்).
- பலமொழி, இனம், மதம், சாதி போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் இந்திய மக்கள் என்ற பெருமை உண்டு (வேற்றுமையில் ஒற்றுமை)
- இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும்.
உங்கள் ஊரிலுள்ள சிறப்புவாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக..
- எமது ஊரில் வற்றாத நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி பாய்ந்து வளம் சேர்க்கிறது.
- அதிகமாக இலக்கியவாதிகள் நிறைந்த பூமி எங்கள் ஊர்.
- பாபநாசம், மாஞ்சோலை, மணிமுத்தாறு போன்ற இயற்கை செழிப்புமிக்க ஊர் எங்கள் ஊர்.
- மூன்று மதத்தினரும் ஓரே இடத்தில் வாழும் ஊர் என் ஊர்.
சிந்திக்கலாமா!
கண்ணைப்போல காக்கவேண்டும் எவ்வாறு?
- நம் கண்ணைப்போல் காக்கப்பட வேண்டுவது இந்த மண் ஆகும்.
- மனிதனுக்கு கண் இல்லை என்றால் முகத்தில் அழகிருக்காது.
- அதுபோல, பூமியல் வளமான மண் இல்லையென்றால் அதன் அழகே கெட்டுவிடும்.
- மனிதன் வாழவும் அவனை வாழ வைக்கும் தாயாகவும் விளங்குவது இந்த மண். எனவே, இந்த மண்ணை நம் கண்ணைப்போல் காக்க வேண்டும்.
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘இன்னல் ‘ – இச்சொல்லின் பொருள்?
- மகிழ்ச்சி
- கன்னல்
- துன்பம்
- இன்பம்
விடை : துன்பம்
2. “கும்மியடி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- கும்மி + யடி
- கும் + மியடி
- கும் + மடி
- கும்மி + அடி
விடை : கும்மி + அடி
3. “ஆனந்தம்” – இச்சொல்லின் எதிர்ச்சொல்?
- மகிழ்ச்சி
- வருத்தம்
- அன்பு
- கோபம்
விடை : வருத்தம்
4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்?
- தேசமடி – பூமியடி
- போற்றிடடி – காத்திடடி
- கும்மியடி – கோடி
- போனதடி – போற்றிடவே
விடை : போனதடி – போற்றிடவே
5. கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம் …………………….
A. | B. |
C. | D. |
விடை : D
மொழியோடு விளையாடு
படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.
பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.
|
|
பொருத்துக
1. பாரதம், தேசம் | இன்னல் |
2. ஆனந்தம், சந்தோஷம் | அன்னை |
3. நெஞ்சம், உள்ளம் | மகிழ்ச்சி |
4. துன்பம், துயர் | நாடு |
5. தாய், அம்மா | மனம் |
விடை:- 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ |
அறிந்து கொள்வோம்
நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன. |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…