TN 4th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3 – காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி

காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 2 – மாசில்லாத உலகம் படைப்போம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - Kattukulle Pattu Potti

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

கதையில் நடுவர் மயில் கூறும் தீர்ப்பு சரியானதா? உம் கருத்தைச் சொந்தநடையில் கூறுக.

காக்கா பாட வந்தபோது எல்லோரும் அதைக் கேலி செய்தார்கள். ஆனால், காகம் நிறைய பயிற்சி எடுத்திருந்தால் புதுப்புது இராகத்தில் நிறைய நேரம் விடாமல் பாடி அனைவரையும் கவரந்த்து. எனவே, முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதை காகம் நிரூபித்தது. அதனால் மயிலக்கா கூறிய தீர்ப்பு சரிதான்.

உன் பள்ளியில் நடைபெற்ற பாட்டுப் போட்டி நிகழ்வுகள் குறித்துப் பேசுக.

எங்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழாவிற்கான பாட்டுப்போட்டி நடைபெற்றது. அதில் அதிக மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நானும் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். முயற்சியும் பயிற்சியும், வாழ்த்துக்களையும் பெற்றனர்.

சிந்திக்கலாமா!

போட்டியில் வெற்றி பெறுவதைக்காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையாதது என்று உன் தந்தை கூறுகிறார். ஏன் தெரியுமா?

 • போட்டியில் முதலில் பார்வையாளர் நிலையில் இருந்து பங்கேற்பவர் நிலைக்கு மாற வேண்டும்.
 • போட்டியில் வெற்றி பெறுவது என்பது முதலில் பங்கேற்பதில் தொடங்குகிறது.
 • தொடர்ந்த விருப்பமும், முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வெற்றி பெற முடியும்.
 • போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பது தான் நிறைய மாணவர்களுக்கு சவாலாக அமைகிறது.

வினாக்களுக்கு விடையளிக்க

1. காட்டில் நடந்த போட்டியின் பெயர் என்ன?

காட்டில் பறவைகளுக்கான பாட்டு போட்டி நடந்தது

2. காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா என்ன கூறினார்?

“ஆகா… என்ன சுருதி சத்தம். அற்புதம்…!” என்று தலையாட்டி இரசித்தது சிங்க ராஜா.

3. ‘பாட்டு ராணி‘ பட்டம் பெற்ற பறவை எது?

‘பாட்டு ராணி‘ பட்டம் பெற்ற பறவை காகம் ஆகும்.

புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!

4th standard - Kattukulle Pattu Potti - Puthirgali padipom vidai kanpom Padathudan poruthuvom

1. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்? அ. மயில்
2. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்? ஆ. கொக்கு
3. பச்சை நிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்? இ. வெளவால்
4. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்? ஈ. காகம்
5. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்? உ. கிளி
விடை : 1 – இ, 2 – ஈ, 3 -உ, 4 – அ, 5 – ஆ

மீண்டும் மீண்டும் சொல்வோம்

1. ஒரு குடம் எடுத்து அரைக்குடம் இறைத்துக் குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.

2. துள்ளி எழுந்து பள்ளி சென்றாள் வள்ளி. அவளுடன் மெள்ள மெள்ள வந்து சேர்ந்து கொண்டாள் அல்லி

கலையும் கைவண்ணமும்

காகிதத்தில் கரடி செய்வோம்

4th standard - Kattukulle Pattu Potti - kalaiyum Kaivannamum

அறிந்து கொள்வோம்

4th standard - Kattukulle Pattu Potti - Arinthu kolvom

 • ஆண்மயிலுக்குத்தான் தோகை உண்டு.
 • ஆண் சிங்கத்துக்குத்தான் பிடரிமயிர் உண்டு.
 • மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.
 • புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.

செயல் திட்டம்

எவையேனும் ஐந்து பறவைகளின் படங்களை ஒட்டி, அவற்றைப்பற்றி ஐந்து வரிகள் எழுதி வருக

வாத்து

4th standard - kattukulle pattupotti

 1. வாத்து ஒரு நீர்வாழ் கோழி இனமாகும்.
 2. நீண்ட கழுத்துடன் பெரும்பாலும் வெண்மை நிறம் கொண்டது.
 3. இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கபடுகிறது.
 4. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை.
 5. நத்தை, புழுக்கள், எலிகள், கோதுமை, பிற தானியங்களை உண்கின்னறன.
 6. இதன் வாழ்நாள் 15 முதல் 25 ஆண்டுகள்.

புறா

4th standard - kattukulle pattupotti

 1. மாடப்புறா உலகிலன் பழமையான் வளர்ப்பு பறவையாகும்.
 2. புறாக்கள் பல நேரங்களில் பயனுள்ளவையாக இருக்கின்றன.
 3. போர்க்காலங்களில் முக்கியச் செய்திகளை புறாக்கள் மூலம் அனுப்பப்பட்டன.
 4. உணவுக்காகவும் புறாக்கள் கொல்லப்படுகின்றன.

கிளி

4th standard - kattukulle pattupotti

 1.  கிளி சித்தேசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை.
 2. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன.
 3. கிளியின் சராசரி ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகள் ஆகும்.
 4. பொதுவாக இவை மரப்பொந்துகளினல் வாழும் பறவை.
 5. விதைகள், பழங்கள், கொட்டைகள், தானிய வகைகளையும் உணவாக உண்ணும்.

பூநாரை

4th standard - kattukulle pattupotti

 1. பூநாரை அல்லது செங்கல் நாரை என்பது நாரை வகைப் பறைவயாகும்.
 2. அகலமான வளைந்த அலகுகள் இருக்கும்.
 3. சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவைத் தேடும்.
 4. மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை உண்ணும்.
 5. நீண்ட முடியுற்ற சிவந்த கால்கள் இவற்றிற்கு உண்டு.

கூழைக்கடா

4th standard - kattukulle pattupotti

 1. கூழைக்கடா பெலிக்கனிடே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பறவை.
 2. இது பறக்கும் பறவைகளில் மிகப்பெரிய நீர் பறவை.
 3. இது 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை.
 4. இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும்.
 5. கூழகை்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையது.

கூடுதல் வினாக்கள்

1. முதல் நாள் காட்டிற்கு வந்து பாட்டுப் பாடியது எது?

முதல் நாள் காட்டிற்கு வந்து பாட்டுப் பாடியது சேவல்

2. சேவல் காட்டில் பாடியபோது முதலில் கேட்ட விலங்கு எது?

சேவல் காட்டில் பாடியபோது முதலில் கேட்ட விலங்கு குரங்கு ஆகும்.

3. காட்டில் நடந்த பாட்டுப் போட்டியின் நடுவர் யார்?

காட்டில் நடந்த பாட்டுப் போட்டியின் நடுவர் மயில்

4. பாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பறவைகள் எவை எவை?

மைனா, கிளி, சேவல், கழுகு, கொக்கு, குயில், காகம் போன்ற பறவைகள் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.

5. எந்த பறவைக்கு காட்டில் அதிகம் இரசிகர்கள் இருந்தன?

குயிலுக்கு நிறைய விலங்குகள் இரசிகர்களாய் இருந்தன

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment