TN 4th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 5 – பனிமலைப் பயணம்

பனிமலைப் பயணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 5 – பனிமலைப் பயணம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - panimalai payanam

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

உமது நண்பரிடம் உமக்குப் பிடித்த, பிடிக்காத பண்புகளைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.

ராமு எனது நண்பன் கிருஷ்ணன். அவனிடம் எனக்குப் பிடித்தவை நிறை குணங்கள் உள்ளன.
சோமு பிடிக்காதவையென்று ஏதேனும் உள்ளதா?
ராமு ஏன் இல்லை? பிடிக்காத அக்குணத்தை மாற்றிக் கொள்ளும்படி நான் கூறுகிறேன். அவர் சரி என்று கூறுவான். ஆனாலும் சில நேரங்களில் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சோமு பிடிக்காத குணம் என்ன? பிடித்த குணங்கள் எவை?
ராமு பிடித்த குணங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவை பிறர் மனம் புண்படாதபடிப் பேசுவான். யாரிடமும் சண்டை போட மாட்டான். தன்னை விடச் சிறியவருக்கும் மரியாதை கொடுப்பான். பெற்றோர், ஆசிரியர் கூறும் வார்த்தைகளை மீற மாட்டான்.
சோமு இவ்வாறு இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது?
ராமு சரியாகச் சொன்னாய்! அவனைப் பிடிக்காதவர் எவருமில்லை. ஆனால் தன்னை யாரவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் பேசவே மாட்டான். கோபம் வந்தால் உச்சக்கட்டத்திற்கு சென்று விடுவான். அவனை அடக்குவது எல்லோருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். அவனை அப்படி கோபம் கொள்வது எனக்கு பிடிக்காத ஒன்று.
சோமு பரவாயில்லையே, உன் நண்பனைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டுள்ளாயே?

சிந்திக்கலாமா!

பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம்., பேருந்திலும் செல்லலாம்….எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?

நான் படகில் தான் பயணம் செய்ய விரும்புவேன்.

பேருந்தில் அடிக்கடி பஸ் பயணம் செய்துள்ளேன். படகில் பயணத்தின் போது குளிர்ச்சியாக இருக்கும். பயணம் செய்த களைப்பும் தெரியாது. மேலும் பேருந்தில் பயணம் செய்தால் மாசு காற்றை மட்டுமே சுவாசிக்க முடியும். படகு பயணத்தில் சுத்தமான காற்று கிடைக்கும்.

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது?

  1. மெதுவாக
  2. எளிதாக
  3. கடினமாக
  4. வேகமாக

விடை : மெதுவாக

2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

  1. என்னஎன்று
  2. என்னென்று
  3. என்னவென்று
  4. என்னவ்வென்று

விடை : என்னவென்று

3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. அந்த + காட்டில்
  2. அ + காட்டில்
  3. அக் + காட்டில்
  4. அந்தக் + காட்டில்

விடை : அ + காட்டில்

4. ”என்னவாயிற்று“ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. என்ன + ஆயிற்று
  2. என்னவா + ஆயிற்று
  3. என்ன + வாயிற்று
  4. என்னவோ + ஆயிற்று

விடை : என்ன + ஆயிற்று

வினாக்களுக்கு விடையளிக்க.

1. படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின?

திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது படகு ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. எனவே படகில் செல்லும்போது, விலங்குகள் திடீரென அலறின

2. நரி, முதலையிடம் என்ன கூறியது?

முன்பு ஒரு முதலை எங்களைப் போன்ற விலங்குகளை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்தே போய்விட்டது.

நாங்கள் விஷ முறிவுச் செடிகளைத் தின்று வந்துள்ளதால் எங்களை யார் கடித்தாலும் அல்லது நாங்கள் யாரைக் கடித்தாலும் அவர்கள் இறப்பது உறுதி என முதலையிடம் நரி கூறியது.

3. இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்?

தன் தந்திரத்தான் அனைவரையும் காப்பாற்றிய நரிதான் இக்கதையில் பிடித்த விலங்கு ஆகும்.

உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?

4th standard - panimalai payanam - uriya pettiudan Parasutai innipoma

1. திடீரென்று நுட்பமான உத்தி
2. தந்திரம் கூச்சலிடுதல்
3. பேணுதல் சற்றும் எதிர்பாராமல்
4. அலறுதல் பாதுகாத்தல்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ 4 -ஆ

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக

1. _____________ நண்பன் = __________________________

விடை : நல்ல நண்பன்

2. _____________ தூரம் = __________________________

விடை : அதிக தூரம்

3. _____________ மான் = __________________________

விடை : அழகிய மான்

_____________ பயணம் = __________________________

விடை : தரைவழி பயணம்

_____________ காடு = __________________________

விடை : அடர்ந்த காடு

_____________ குதிரை = __________________________

விடை : கருப்பு குதிரை

கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.

1. வரிக்குதிரை 2.பாம்பு
3. குதிரை 4. முதலை
5. அத்தை 6.வலை
7. படகு 8. தலை
9. வாய் 10. நாள்
11.பாய் 12. இலை
நான் பெற்ற மொத்த விண்மீன்கள் : பன்னிரண்டு

சொல்லக் கேட்டு எழுதுக

  • அடர்ந்த காடு
  • பயணம்
  • பனிமலைக்காடு
  • விலங்குகள்
  • திருவிழா

அகரவரிசைப்படுத்துக.

மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மெளவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்

4th standard - panimalai payanam - agaravarisai paduthuga

மகிழ்ச்சி, மாதம், மிளகுமீன், முறுக்கு, மூட்டை, மெத்தை, மேகம், மைதானம், மொழி, மோப்பம், மௌவல்

கலையும் கைவண்ணமும்

காகிதப் பூ செய்வோமா!

4th standard - panimalai payanam - Kalaium Kaivannamum

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment