TN 4th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 9 – கரிகாலன் கட்டிய கல்லணை

கரிகாலன் கட்டிய கல்லணை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 9 – கரிகாலன் கட்டிய கல்லணை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - karikalan kattiya kallanai

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

கல்லணை பற்றி உனக்கு தெரிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறுக.

 • கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி உயிரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.
 • கல்லும் களிமண்ணும் மட்டுமே நேர்ந்த ஓர் அமைப்பு. 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது அதியம் ஆகும். 1839-ல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.
 • பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
 • இந்த அணையைக் கரிகாலன் என்ற சோழமன்னன் கட்டினான். தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது, தற்போது புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இது உலகில் மிகப் பழமையான நீர் பாசனத்திட்டம் என்றும் கூறப்படுகிறது.
 • இவ்வணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டது. கல்லணையைப் பற்றிய செய்தி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

உமது ஊரில் உள்ள மிகப் பழைமையான இடம் எது? அதுபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.

குமார் சங்கர்! நமது ஊரில் உள்ள மிகப் பழமையான இடம் என்று எதை நினைக்கிறாய்
சங்கர் மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தான் என்று நினைக்கிறேன்.
குமார்  சரி கோவிலைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
சங்கர்  தெரியுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர், சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
குமார் ஆமாம், இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலகோயிலாக உள்ளது.
சங்கர்  இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாவும் விளங்குகிறது. 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.
குமார் தேவலோகத்தின் அரசனான இந்திரனால் கட்டப்பட்டது என்பது நம்பிக்கையாக உள்ளது.
சங்கர் இக்கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவை விமானங்களைத் தாங்குகிறன்றன.
குமார்  இக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோயிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.
சங்கர்  அவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக உள்ளது.
குமார்  உண்மையிலே இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றி சங்கர்!
சங்கர் நன்றி குமார்!

சிந்திக்கலாமா?

கோடைக்காலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன? நீர்ப் பற்றாக்குறையைப் போக்க என்ன செய்வாய்?

கோடைக் காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக் காரணம், கோடைக் காலங்களில் மழைபொழிவது இல்லை. அதனால் நீர் நிலைகளில் நீர வற்றி விடுகிறது. வறண்டும் போய் விடுகிறது. இந்த நேரங்களில் தான் அதிகமாக நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மனிதனின் பேராசையாலும் நீர் சுரண்டப்படுவதாலும் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பெரும்பாலான ஆறுகள், குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதும் காரணமாகும். இங்கு அதிகமான நீர்நிலைகள் இல்லாததும் இருப்பதை முறையாக பராமரிக்காமல் விட்டதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீர் பற்றாக்குறையைப் போக்க பல அணைகள் கட்டலாம். ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டாலம். நீர்நிலைகளை கோடைக்காலங்களில் முறையாக தூர்வாரி பராமரித்து, மழைக்காலங்களில் அதிக நீரை சேகரித்து வைக்கலாம். புதிய புதிய நீர்நிலைகளை உருவாக்கி நீரைச் சேமித்து நிலத்தடி நீரையும் உயர்த்தலாம். இருக்கின்ற நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க

4th standard - karikalan kattiya kallanai - Sariyana palakam Therntheduka

1. “துயரம்” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………. (மகிழ்ச்சி/துன்பம்)

விடை : துன்பம்

2. “வியத்தகு” இச்சொல் குறிக்கும் பொருள் ………………….. (மகிழ்வூட்டும்/ஆச்சரியம் தரும்)

விடை : ஆச்சரியம் தரும்

3. “முறியடித்து” இச்சொல் குறிக்கும் பொருள் ………………….. (தகர்த்து/பயந்து)

விடை : தகர்த்து

4. “சூழ்ச்சி” இச்சொல் குறிக்கும் பொருள் ………………….. (துன்பம்/தந்திரம்)

விடை : தந்திரம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “பெருவெள்ளம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________

 1. பெருமை + வெள்ளம்
 2. பெரு + வெள்ளம்
 3. பெரு + வுள்ளம்
 4. பெரிய + வெள்ளம்

விடை : பெருமை + வெள்ளம்

2. “தங்கியிருந்த” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

 1. தங்கி + இருந்த
 2. தங்கி + யிருந்த
 3. தங்கியி + ருந்த
 4. தங்கு + இருந்த

விடை : தங்கி + இருந்த

3. “அமைந்துள்ளது” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________

 1. அமைந் + துள்ளது
 2. அமைந்து + உள்ளது
 3. அமைந்து + ள்ளது
 4. அமைந் + உள்ளது

விடை : அமைந்து + உள்ளது

4. “அரசு + ஆட்சி” என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் _________________

 1. அரசஆட்சி
 2. அரசாட்சி
 3. அரசுசாட்சி
 4. அரசுஆட்சி

விடை : அரசாட்சி

5. “நீர் + பாசனம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

 1. நீர்பாசனம்
 2. நீர்ப்பாசனம்
 3. நீரப்பசனம்
 4. நீரபாசனம்

விடை : நீர்ப்பாசனம்

பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?

4th standard - karikalan kattiya kallanai - Panthai Athan ethirsol Kudail Podalama

தொலைவில்  x அருகில்
எதிரிகள் x நண்பர்கள்
பழைமை x புதுமை
அடித்தளம் x மேல்தளம்
பெரிய x சிறிய

சரியானதை எடுத்து எழுது

1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் ______________ (திருச்சி/ தஞ்சாவூர்)

விடை : தஞ்சாவூர்

2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு _____________ (வைகை / கொள்ளிடம்)

விடை : கொள்ளிடம்

3. கல்லணையைக் கட்டிய அரசன் ___________ (கரிகாலன் / இராசராசன்)

விடை : கரிகாலன்

4. கல்லணை _______________ தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத்திகழ்கிறது. (பழந்தமிழர் / இன்றைய)

விடை : பழந்தமிழர்

5. வினாவிற்கு ஏற்ற விடையளிக்க.

1. கரிகாலனின் இயற்பெயர் என்ன?

கரிகாலனின் இயற்பெயர் வளவன்

2. கரிகாலன் என்று பெயர் வரக் காரணம் என்ன?

கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

3. கரிகாலன் கல்லணையைக் கட்ட காரணம் யாது?

காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும், ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு கல்லணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகாலன்.

4. கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.

தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப் பழைமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப் பழைமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் கட்டுமாைத் திறனுக்குச் சான்றாகும். இது இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.

ஓர் எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்

4th standard - karikalan kattiya kallanai - Oru Eluthai Kandupidi Nangu Solai Peralam

ம், ரம், னம், ருந்து
நீம், வம், காம், விக்கு
கு குளம், தொகுதி, குடம், பழகு
வி மாவிலை, விகுதி, விறகு, கருவி

அறிந்து கொள்வோம்

4th standard - karikalan kattiya kallanai - Arinthu kolvom

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. கரிகாலன் …………….யின் மகன் ஆவான்

 1. இளஞ்சேட்சென்னி
 2. இராஜராஜன்
 3. பொம்முநாயக்கர்
 4. வீரய்யன்

விடை : இளஞ்சேட்சென்னி

2. உலகின் பழமையான அணை ……………

 1. மேட்டூர் அணை
 2. கல்லணை
 3. பவானிசாகர் அணை
 4. வைகை அணை

விடை : கல்லணை

3. கல்லணை கட்டப்பட்டது …………………. நூற்றாண்டு

 1. 8
 2. 6
 3. 4
 4. 2

விடை : 2

4. கல்லணையில் வளம்பெரும் மாவட்டங்கள் ……………., ……………..

 1. கரூர், சேலம்
 2. திருச்சி, தஞ்சாவூர்
 3. வேலூர், மதுரை
 4. தர்மபுரி, நெல்லை

விடை : திருச்சி, தஞ்சாவூர்

5. காவிரி ஆறு ………………… ஆகப் பிரிகிறிது.

 1. மூன்றாக
 2. ஐந்தாக
 3. ஆறாக
 4. நான்காக

விடை : நான்காக

6. கல்லணை ………………… ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

 1. காவிரி
 2. வைகை
 3. தாமிரபரணி
 4. சிற்றாறு

விடை : காவிரி

வினாக்களுக்கு விடையளி

1. காவிரி ஆறிலிருந்து பிரியும் ஆறுகள் யாவை?

 • கொள்ளிடம்
 • காவிரி
 • வெண்ணாறு
 • புது ஆறு

என நான்காகப் பிரிகிறது.

2. கரிகாலன் எப்படிப்பட்ட அரசன்?

சங்க காலத்தைச் சேர்ந்த சோழ அரசர்களில் மிக முக்கியமான சிறப்புமிக்க அரசன் கரிகாலன் ஆவான்.

3. கல்லணை கட்டப்பட்ட முறையினை கூறுக?

பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி கட்டப்பட்டது

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment