TN 4th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3 – ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 3 – ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - Elu Irakai Kuruviyum Thenaliramanum

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

நீ சாதுரியமாக நடந்து கொண்ட நிகழ்வுகளைக் கூறுக

நிகழ்வு – 1

என் வகுப்பில் படிக்கும் மாணவன் நோட்டு வாங்குவதற்காக நூறு ரூபாய் கொண்டு வந்திருந்தான். அவன் வைத்திருந்த நூறு ரூபாயை ஏதோ ஒரு மாணவன் திருவிட்டான். பணத்தை இழந்த மாணவன் மிகவும் வருத்தப்பட்டு அழுவதைக் கண்ட வகுப்பாசிரியர் திருடிய மாணவனை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று மிகவும் கோபத்துடன் இருந்தார். மாணவர்களிடம் பலமுறை கேட்டும் எந்த மாணவனும் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் திருடியது தான் என்று தெரிந்தால் எல்லோரும் தன்னைத் திருடன் என்று அழைப்பார்களே என்ற காரணமாக அமைந்தது. ஆசிரியரிடம் நான் கூறினேன், இப்படி ஒரு காரணம் இருப்பதால  திருடியவன் தயங்குகிறன் என்று நினைக்கிறேன். அதனால்அனைவரும் வகுப்பறைக்கு வெளிேய சென்று நிற்போம். பிறகு ஒவ்வொரு மாணவனாக  உள்ளே சென்று வரச் சொல்வோம். திருடியவன் எடுத்தப் புத்தகப் பையிலேய வைத்து விட வேண்டும் என்று கட்டளை பிற்ப்பியுங்கள் என்றேன். ஆசிரியரும் எனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். இறுதியில் நூறு ரூபாய் அந்த மாணவனுக்கு கிடைத்தது. திருடியவனும் பழியிலிருந்து தப்பித்துக் கொண்டான்.

நிகழ்வு – 2

பள்ளியில் என்னை எல்லா ஆசியர்களுக்கும் பிடிக்கும். காரணம், நான் நன்றாக படிப்பேன். ஆசிரியர் தரும் வீட்டுப் பாடங்களை சிறப்பாகச் செய்வேன். எல்லா ஆசிரியர்களுக்கும் உரிய மரியாதை கொடுப்பேன். அதனால் எல்லா ஆசியர்களும் என்னை விரும்புவார்கள். இதைக் கண்டு பொறாமைப்பட்ட என் நண்பன் என்னிடம் வந்து, “உன்னை எல்லா ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர். அந்த இரகசியத்தை எனக்கு மட்டும் கூறு, அது எனக்கு பயன் மிகுந்ததாக இருக்கும்” என்றான், “அந்த இரகசியத்தை உன்னிடம் நான் கூறினால் அதனை நீ எவரிடம் கூறக்கூடாது” என்று கூறினேன். அதற்கு அவன் “இரகசியத்தை யாரிடமும் கூறமாட்டேன்” என்றான். அப்படியா மிக்க மகிழ்ச்சி. ஒரு இரகசியத்தை காப்பாற்றும் ஆற்றல் உனக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு. ஆதலால் இந்த இரகசியத்தை யாரிடம் எந்தச் சூழ்நிலையிலும் சொல்லமாட்டேன்”, என்று கூறினேன். என்னிடம் அவன் தந்திரம் பலிக்காததால் ஏமாற்றத்துடன் சென்று விட்டான்.

சிந்திக்கலாமா!

நீ தெனாலிராமனாக இருந்திருந்தால் விஜயவர்த்தன அரசின் எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்திருப்பாய்?

நான் தெனாலிராமனாக இருந்திருந்தால், உன் கூண்டைக் கொண்டு வந்து அவையில் உள்ள விஜயவர்த்தனிடம் கொடுத்திருப்பேன். தாங்கள் கேட்ட அப்பறவை இக்கூண்டிற்குள் தான் இருக்கிறது. ஆனால் இப்பறவை எல்லோர் கண்களுக்கும் தெரியாது. ஒழுக்க நெறியில் வாழும் மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கு இப்பறவை தெரியும் என்று நான் நம்புகிறேன் என்று அரசரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பேன்.

வினாக்களுக்கு விடையளி

1. விஜயநகர அரசின் அவைப்புலவர் யார்?

விஜயநகர அரசின் அவைப்புலவர் தெனாலிராமன் ஆவார்.

2. விஜயவர்த்தன அரசர் எப்படிப்பட்ட குருவியைக் கொண்டு வரும்படி கேட்டார்?

விஜயவர்த்தனர் தெனாலிராமனிடம், ‘எனக்குக் காலையில் தங்க மஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலும் உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரவேண்டும்’ என்றார். ‘மேலும் அது சிலசமயம் மூன்று கால்களாலும், சில சமயம் இரண்டு கால்களாலும் நடக்க வேண்டும், பிறகு ஏழு இறக்கைகளைக் கொண்டு வானில் பறக்ககூடிய குருவியைக் கொண்டு வரும்படி கேட்டார்

3. குருவி கூறியதாக தெனாலிராமன் அரசவையில் சொன்னது என்ன?

காலைப் பொழுதாகவும் இருக்கக்கூடாது, நடுப்பகல் பொழுதாகவும் இருக்கக்கூடாது, மாலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, வெளிச்சமாகவும் இருக்கக்கூடாது, இருளாகவும் இருக்கக் கூடாது அந்த நேரத்தில் நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து திரும்ப வந்துவிடுவேன் என்றது என்றார்

குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடி! மணிமகுடம் சூட்டிக்கொள்

1. மணக்கும் எழுத்து.

விடை : பூ

2. அரசரும், அமைச்சர்களும் கூடும் இடம்.

விடை : அரசவை

3. நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம்.

விடை : இரவு

4. நவரசங்களில் ஆச்சரியத்தைக் குறிக்கும்.

விடை : வியப்பு

5. சிக்கலைத் தீர்க்க உதவும் குணம்.

விடை : சாந்தம்

சொல்லின் இடையில் ஓர் எழுத்தைச் சேர்த்துப் புதிய செல்லை உருவாக்குக.

1. கதை – (எ. கா) கவிதை

2. படு – __________

விடை : பட்டு

3. குவி – __________

விடை : குழவி

4. பகு – __________

விடை : படகு

5. வசை – __________

விடை : வலசை

6. பாவை – __________

விடை : பார்வை

7. எது – __________

விடை : எழுது

8. அவை – __________

விடை : அவ்வை

9. ஆம் – __________

விடை : ஆரம், ஆழம்

10. கவி – __________

விடை : கல்வி

மீண்டும் மீண்டும் சொல்வோம்

  • மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை.
  • பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது.
  • குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
  • ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை
    தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.
  • மெய்த்தும் பொய்க்கும்
    பொய்த்தும் மெய்க்கும்
    பொய்யா மெய்யா மழை

அறிந்து கொள்வோம்

  • தெனாலிராமன் அரசர் கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த விகடகவி ஆவார்.
  • விகடகவி என்றால் நகைச்சுவையாகப் பேசுபவரைக் குறிக்கும்.
  • தெனாலிராமன் சிரிக்க வைத்து சிந்தனையைத் தூண்டும் வகையில் பேசுவார்.

செயல் திட்டம்

1. உங்கள் பள்ளியிலுள்ள நூலகத்தில் இருந்து தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பீர்பால் கதைகள், அப்பாஜி கதைகள் முதலிய புத்தகங்களைத் தேடிப் படித்து ஒவ்வொரு நூலிலும் உனக்குப் பிடித்த ஒரு கதையை எழுதி வருக.

தெனாலிராமன் கதை

ஆஸ்தான விகடவியானான்

தெனாலி ராமன் அரசவைக்கு சென்றார். அப்போது தத்துவஞானி தத்துவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். “கண்காளால் பார்ப்பது; நாக்கினால் ருசிப்பது போன்றவையும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெறும் மனப்பிரம்மையே அன்றி உண்மையல்ல” என்று சொன்னார். அவர் கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். ஒருவர் கூட எதிர்த்துப் பேசவில்லை.

தெனாலிராமன் அவர் முன் வந்தான். “ஞானியே! நாம் பார்ப்பது, சாப்பிடுவது எல்லாமே பிரம்மையா?” என்று கேட்டார். “ஆம்” என்றார் தத்துவஞானி

அப்படியானால் நாம் சாப்பிடுவதாக நினைப்பதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை?” என்று வினவினார். நிச்சயமாக இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என் ஆணித்தரமாக கூறினார்.

தெனாலிராமன் அவையோரைப் பார்த்து “இன்று அரண்மனையில் அளிக்கும் விருந்தில் நாம் அனைவரும் நன்றாக சாப்பிட்டலாம். ஆனால் இந்த தத்துவஞானி சாப்பிடுவதாக நினைத்து திருப்தி அடையட்டும்” என்றதும் மன்னன் உட்பட அனைவரும் கொல்லென்று நகைத்தனர்.

தத்துவஞானி தலைகுனிந்தார். மன்னன் தெனாலிராமனின் ஆற்றலை புகழ்ந்து தன் ஆஸ்தான விகடகவியாக நியமித்தார்.

பீர்பால் கதை

சிக்கலான கேள்விகள் சிறப்பான பதில்கள்

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவர் அக்பரை பணிவுடன் வணங்கியபோது அக்பர் அவனை நோக்கி “நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில்  வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!” என்றான் அவன்.

“உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?” என்று அக்பர் கேட்டார்.

“என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கொண்டு கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் நான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்தில் இருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்து இருக்கிறேன்” என்றான் மகேஷ்

“எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!” என்றார் அக்பர்

“பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!” என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.

“அப்படியானல், அதை நிரூபித்துக் காட்டு! என்றார் அக்பர்.

“பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா? என்று மகேஷ் கேட்டான்.

“முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு! என்றார் அக்பர்.

“நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!”என்றார் மகேஷ்.

“அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு? என்றார் அக்பர்.

“முப்பது சவுக்கடி கொடுங்கள்!” என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்து அனைவரும் திடுக்கிட்டனர்,

“உனக்கென்ன பைத்தியமா?” என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.

அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்! என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலரைச் சாட்டை எடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில்” அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்! என்றார்.

மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை “நீ அடிக்கத் தொடங்கு!” என்றார். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாக அடித்தான் பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் “நிறுத்து!” என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி “பிரபு! பரிசு எனக்கு கிடைத்து விட்டது மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!” என்றான் அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், “என்ன உளறுகிறார்?” என்று கோபத்துடன் கேட்டார்.

அவர்களையே கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றார் உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, “தோழர்களே! சக்கரவரத்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்” என்றான்.

இரு காவலர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்தை சாட்டை அடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவருமம் கதற, அக்பர் அவர்களை நோக்கி “இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!” என்று உத்தரவிட்டு பிறகு, மகேஷிடம், “நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிருபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நிமிக்கிறேன்” என்றார்.

மரியாதை இராமன் கதை

யாருடைய முத்து?

நீதிமன்றத்தில் ஒரு ஏழை தன் பணக்காரன் நண்பன் மீது வழக்குத் தொடுத்தான். “நீதிபதி அவர்களே என்னிடம் விலைமதிப்பற்ற நல்ல முத்துக்கள் இரண்டு உள்ளன. அவற்றை எனது நண்பனிடம் கொடுத்துவிட்டு வியாபார விசயமாக வெளியூர் சென்றுவிட்டேன்.

திரும்பி வந்து நான் கேட்கும் பொழுது அவ்விரு முத்துகளையும் திரும்பி தராமால் நான் கொடுக்கவே இல்லை என்று மோசம் செய்தான்” என் நண்பர் புகார் கூறினான்.

அதற்கு நண்பனே “நான் அம்முத்துகளை வாங்கியதும் இல்லை, பார்த்ததும் இல்லை. இவை போன்ற முத்துக்கள் எதுவும் என்னிடம் இல்லை. நான் பணக்காரன் என்பதால் என்னிடம் பணம் பறக்க பொய் சொல்லுகிறான்” என்றான்.

அவனுடைய மோச கருத்தை முகக்குறிப்பினால் உணரந்த மரியாதை இராமன் “போதிய சாட்சியம் இல்லாததால் இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறினான். ஏழை அழுதடியே வீட்டிற்கு சென்றான். இருவரையும் அனுப்பி விட்டு சில நாட்கள் கடந்தததும் ஏழையின் முத்துகளைப் போன்று 98 முத்துக்களைப் அரண்மனையிலிருந்து வரவழைத்து, அவற்றை ஒரு நைந்த சரத்தில் கோர்த்து முத்து மாலையாக்கி அதை மாலை நேரத்தில் மோசக்காரனிடம் கொடுத்து, “நண்பனே நீ முத்துக்களைக் கோர்பதில் கைதேர்ந்தவன் என்று கேள்விப்பட்டேன். என்னிடம் உள்ள இந்த முத்துமாலையில் நூறு முத்துக்கள் இருக்கின்றன. சரடு நைந்து போய் விட்டதால், புதிய சரடில் கோர்த்து அழகான முத்துமாலையாக கட்டிக் கொண்டு வந்து தா” எனச் சொல்லி அனுப்பினான் இராமன்.

அதை வாங்கிச் சென்றவன் மறுநாள் பிரித்து எண்ணிப் பார்க்கும் போது 98 முத்துக்கள் இருப்பதை கண்டு திடுக்கிட்டான். “தான் தான் அவற்றை கை தவறுதலாக காணாமாற் போக்கடித்து விட்டோமோ” என்று குழம்பி திகிலுற்றான். பிறகு குறையும் இரண்டு முத்துக்களுக்கு பதிலாக ஏற்கனவே தான் நண்பனிடம் மோசடி செய்து வைத்திருந்த இரண்டு முத்துகளையும் சேர்த்து மாலையாக கட்டி நீபதியிடம் கொண்டு போய் கொடுத்தான்.

அந்த மாலையில் 100 முத்துகள் ஈரப்பதை எண்ணிப் பாரத்த மரியாதை இராமன் அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி கோபத்துடன் “நண்பனே நான் கொடுத்தது 98 முத்துக்கள் தான். அவற்றோடு நீ சேர்த்திருக்கும் இரண்டு முத்துக்களும் உனது சிநேகிதனிடமிருந்து சில காலத்திற்கு முன் நீ அபகரித்தவையாகும்” என்றான்.

மேசாடிகாரனுக்கு வேறு வழி தோன்றவில்லை. தனது திருட்டை ஒப்புக் கொண்டபின், பின்பு இராமன் அவ்விரு முத்துகளையும் உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு மோசடி செய்தவனுக்கு 10 பவுன் அபதாரம் விதித்தான்.

2. நூலகத்தைப் பயன்படுத்தி எவையேனும் ஐந்து கதைகளின் பெயர்களையும், அந்தக் கதைகளின் ஆசிரியர் பெயர்களையும் பட்டியலிடுக.

கதையின் பெயர் ஆசிரியர் பெயர் குறிப்பு
1. பராமார்த்த குரு கதைகள் வீரமா முனிவர் தமிழில் வந்த முதல் தளன நூல்
2. குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு. ஐயர் தமிழின் முதல் சிறுகதை
3. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் புதுமைப்பித்தன் மனித வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பு
4. செவ்வாழை அறிஞர் அண்ணா ஏழையின் நிலைமையைக் கூறும் கதை
5. குற்றம் பார்க்கில் சூ. சமுத்திரம் நிறைவானதைக் காண வேண்டும்

கூடுதல் வினாக்கள்

1. விகடகவி என்றால் என்ன?

விகடகவி என்றால் நகைச்சுவை தோன்ற பாடுபவர் என்பது பொருள்.

2. யாரெல்லாம் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர்?

அரசர கிருஷ்ணதேவராயரும் அண்டை நாட்டு  மன்னர் விஜயவர்த்தனரும் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர்.

3. தெனாலிராமன் அரசவைக்கு எதனை கொண்டு வந்தார்?

தெனாலிராமன் அரசவைக்கு காலி பறவைக் கூண்டு ஒன்றைக் கொண்டு வந்தார்

4. தெனாலிராமன் அரசர் யார்?

தெனாலிராமன் அரசர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.

5. தெனாலிராமன் கூறிய பறவைக்கு எத்தனை இறக்கைகள் இருந்தன?

தெனாலிராமன் கூறிய பறவைக்கு ஏழு இறக்கைகள் இருந்தன?

6. விஜயவர்தனர் தெனாலிராமன் எவ்வாறு பாராட்டினார்?

விஜயவர்தனர் “தெனாலியின் சாதுரியம் பற்றி இதுவரை கேள்விப்பட்டுள்ளேன் இப்போதுதான் நேரில் பார்த்தேன்” என்று பாராட்டினார்.

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment