வாலு போயி கத்தி வந்தது! டும்… டும்… டும்… டும்….
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 5 – திருக்குறள் கதைகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
‘டும் டும் டும் டும்’ படக்கதையை உமது சொந்த நடையில் கூறுக.
ஒருநாள், ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன்வாலில் முள் குத்தி மாட்டிக் கொண்டது. குத்திய முள்ளை எடுத்துவிட ஊருக்குள் நுழைந்து உதவி கேட்க நினைத்தது. ஐயா, உழவரே! என் வாலில் முள் குத்திவிட்டது. கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.
ஓணானின் வாலிலுள்ள முள்ளை எடுக்கும்போது வால் அறுந்துவிட்டது. ஏ… உழவரே! என் வாலைத் தருகிறாயா? இல்லை, உன் கத்தியைத் தருகிறாயா? இந்தா! கத்தியை வைத்துக் கொள், ஆளை விடு.
கத்தியைப் பெற்றுக் கொண்டு காட்டின் வழியாக சென்றது. மரத்தை வெட்டும்போது கத்தி உடைந்து விட்டது. ரொம்ப சிரமப்படுகிறாய். இந்தா கத்தி, இதனால் வெட்டு. மரத்தை வெட்டும்போது கத்தி உடைந்துவிட்டது. விறகு வெட்டியே… என் கத்தியைத் தருகிறாயா? இல்லை விறகைத் தருகிறாயா? இந்தா… விறகை நீயே வைத்துக்கொள் என கொடுத்து விட்டான்.
பிறகு, வழியில் தோசை சுடும் பாட்டியைப் பார்த்தது பாட்டி! இந்த விறகை வைத்துக்கொள். தோசையைச் சுடு. அடடா! எல்லா விறகையும் எரித்துவிட்டாயா? இதப்பாரு பாட்டி, என் விறகைத் தருகிறாயா? இல்லை தோசையைத் தருகிறாயா? சரி ! சரி! இந்தா தோசையை எடுத்துக்கொள் எனக் கூறினார்.
பிறகு ஓணான், மோர் விற்கும் பெண்ணை வழியில் பார்த்தது. பெண்ணே பசியா? இந்தா, தோசையைச் சாப்பிடு. மோர் விற்கும் பெண் தோசையைச் சாப்பிட்டு முடித்தாள். ஓ… தோசை முழுவதையும் சாப்பிட்டு விட்டாயா? பெண்ணே என் தோசையைத் தருகிறாயா? இல்லை, பானையைத் தருகிறாயா? பெண்ணே என் தோசையைத் தருகிறாயா? இல்லை, பானையைத் தருகிறாயா? பானையை ஓணான் பெற்றுக் கொண்டது.
வழியில் தோட்டக்காரரைப் பார்த்த ஓணான், தோட்டக்காரரே, தண்ணீர் எடுத்து ஊற்றுவதற்கு இந்தப் பானையை வைத்துக்கொள்… தோட்டக்காரர் செடிகளுக்கு நீரூற்றும்போது பானை உடைந்துவிட்டது. ஆ! என் பானை உடைந்து போயிற்றே! என் பானையைத் தருகிறாயா? இல்லை, பூவைத் தருகிறாயா? இந்தா … பூக்களைத் தருகிறேன், எடுத்துக்கொள்.
பூக்களை பெற்றுக் கொண்டு செல்லும் போது வழியில் மேளம் வாசிக்கும் பெண்ணை ஓணான் பார்த்தது இந்தா.. பெண்ணே! பூக்களைத் வைத்துக்கொள், அழகாக இருப்பாய். அந்தப் பெண் பூக்களைத் தலையில் வைக்கும்போது, அவை உதிர்ந்தன. அடடே! என் பூக்கள் உதிர்ந்து போயிற்றே. பெண்ணே! பூக்களைத் தருகிறாயா? இல்லை, மேளத்தைத் தருகிறாயா? அந்தப் பெண் பயந்தவாறுரி சரி இந்த மேளத்தை வைத்துக்கொள்…
ஓணான் அந்த மேளத்தை அடித்தவாறே மகிழ்ச்சியோடு பாடியது
வாலு போயி கத்தி வந்தது டும்….டும்…டும்…டும்
கத்தி போயி விறகு வந்தது டும்… டும்… டும்…டும்
விறகு போயி தோசை வந்தது டும்…டும்… டும்…டும்
தோசை போயி பானை வந்தது டும்…டும்…டும்…டும்
பானை போயி பூவு வந்தது டும்…டும்…டும்…டும்
பூவு போயி மேளம் வந்தது டும்…டும்…டும்…டும
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “விறகெல்லாம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- விறகு + எல்லாம்
- விறகு + கெல்லாம்
- விற + கெல்லாம்
- விறகு + எலாம்
விடை : விறகு + எல்லாம்
2. ‘படம் + கதை’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- படம்கதை
- படக்கதை
- படகதை
- படகாதை
விடை : படக்கதை
3. – இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக
- ஓனான்
- ஓநான்
- ஓணான்
- ஓணன்
விடை : ஓணான்
4. “தோசை” இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது?
- ஆசை
- மேசை
- பூசை
- இசை
விடை : இசை
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
1. ஊர்கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன்- நான் யார்? | மரம் |
2. இடிஇடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது. – அது என்ன? | கடல் |
3. நிழல் தருவேன், காய் தருவேன், பழம் தருவேன். -நான் யார்? | பட்டாது |
4. ‘கலை’ என்ற சொல்லில் முதல் எழுத்து ‘படம்’ என்ற சொல்லில் இடை எழுத்து ‘மடல்’ என்ற சொல்லில் இறுதி எழுத்து- நான் யார்? | தேர் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
சொல் விளையாட்டு
ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.
இதே போன்று “ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை” போன்ற சொற்களைத் தொடக்கமாக வைத்துச் சொற்களை உருவாக்குக.
அறிந்து கொள்வோம்
உலக கதைசொல்லல் நாள் – மார்ச் 20
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…