TN 5th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3.4 – மரபுத்தொடர்கள்

3.4 மரபுத்தொடர்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 3.4 – மரபுத்தொடர்கள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

 

5th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நாங்கள் ___________ உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/ விடிவெள்ளியாக)

  • வாழையடி வாழையாக

2. அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும்கிடையாது. அவன் ஒரு ___________ (அவசரக்குடுக்கை/புத்தகப்பூச்சி)

  • புத்தகப்பூச்சி

3. பாரதிதாசன் கவிதை உலகில் ___________ ப் பறந்தார். (பற்றுக்கோடாக/ கொடி கட்டி)

  • கொடி கட்டி

பொருத்துக.

1. கயிறு திரித்தல் அ. பொய் அழுகை
2. ஓலை கிழிந்தது ஆ. விடாப்பிடி
3. முதலைக் கண்ணீர் இ. இல்லாததைச் சொல்லல்
4. குரங்குப்பிடி ஈ. மறைந்து போதல்
5. நீர் மேல் எழுத்து உ. வேலை போய்விட்டது
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

‘காலை வாரிவிடுகிறது‘ – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத்தொடருக்குப் பொருத்தமாக அமையும்?

  1. காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக்———————-.
  2. காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைக்———————-.
  3. மறதி நம்மை அடிக்கடி ———————-
  4. இளமைக்காலம் நம்மை அடிக்கடி———————-.

விடை : மறதி நம்மை அடிக்கடி

மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க

  1. மாயச்செயல்
  2. கதை விடுதல்
  3. மாற்றம் பெறுதல்
  4. பயனில்லாது இருத்தல்

விடை : மாற்றம் பெறுதல்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. மரபுத்தொடர் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

நம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்தும் சொற்கள் மரபுத்தொடர்கள் எனப்படும். இவை இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்டவை..

2. பின்வரும் மரபுத்தொடர்களைக்கொண்டு தொடரமைத்து எழுதுக.

அ) தோலிருக்கச் சுளை விழுங்கி

  • எளிய  வழியை பின்பற்றி வாழ்பவனின் வாழ்க்கை தோலிருக்கச் சுளை விழுங்கி போல் புத்தியுள்ளவனாவான்.

ஆ) மதில் மேல் பூனை

  • சரியான நிலைப்பாடு இல்லாதவர் வாழ்க்கை மதில் மேல் பூனை போன்ற செயலாகும்.

மொழியை ஆள்வோம்

சொல்லக் கேட்டு எழுதுக.

  • பெண்ணின் பெருமையைப் பாடியவர் பாரதிதாசன்.
  • பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது.
  • கவிஞர் வாணிதாசன் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
  • வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர், பிரபஞ்சன்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுது

1. பொறுமை 

  • வாழ்வில் முன்னேற பொறுமை அவசியம்

2. நூல்கள்

  • தமிழ் நூல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை

3. தமிழ்மொழி 

  • செம்மொழிகளுள் தமிழ் மொழி ஒன்று

4. அன்பு 

  • அம்மா என் மீது அன்பாக இருப்பார்

5. கவிஞர் 

  • பாரதியார் ஒரு தேசியக் கவிஞர் ஆவார்

பொருத்துக

1. பாரதியார் அ. என் தமிழ் இயக்கம்
2. பாரதிதாசன் ஆ. கொடி முல்லை
3. வாணிதாசன் இ. குயில் பாட்டு
4. திருமுருகன் ஈ. வானம் வசப்படும்
5. பிரபஞ்சன் உ. தமிழியக்கம்
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 -அ , 5 – ஈ

அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த குஜராத்திய பாடலின் தமிழாக்கம்

தீமை செய்தவர்க்கும் நன்மை செய், எல்லாரும் ஒன்று என்பதைக் கூறும் மனிதநேயப் பாடலைப் படித்து உணர்க.

உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்!
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்!
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்!
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்!
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி!
வையத்தார் எல்லாரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பாடின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண
நன்னயம்செய்துவிடுவர் இந்த நானிலத்தே!

பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.

அழகன், பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால், அவன் மிகவும் டையர்டாக இருந்தான்.

விடை:-

  • அழகன், நண்பர்களோடு விளையாட்டு திடலுக்கு சென்றான். அங்கு அனைவருடனும் சந்தோஷமாகக் மட்டைபந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் களைப்பாக இருந்தான்.

விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளி

கபடி விளையாட்டு மன்றம்

அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கும் ஒரு நற்செய்தி

5th Standard - Marpuththodargal - Vinagaluku Vidaiallika

இடம்: அண்ணா விளையாட்டு மைதானம், சென்னை.
காலம்: மாணவர் – காலை 9 மணிமுதல் 11 மணிவரை
மாணவியர் – காலை 11 மணிமுதல் 12 மணிவரை

1. நீங்கள் மேலே படித்தது என்ன?

  1. பாடல்
  2. கதை
  3. விளம்பரம்

விடை : விளம்பரம்

2. பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?

  1. மட்டைப்பந்து
  2. கபடி
  3. சதுரங்கம்

விடை : கபடி

3. மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?

  1. 1 மணி
  2. 2 மணி
  3. 3 மணி

விடை: 2 மணி

4. மைதானம் – இந்தச்சொல்லுக்குரிய பொருள் எது?

  1. பூங்கா
  2. அரங்கம்
  3. திடல்

விடை : திடல்

5. விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?

  1. கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
  2. கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
  3. கபடிவிளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம

விடை : கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

5th Standard - Marpuththodargal - Kurukeluthu puthir

இடமிருந்து வலம்

1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்

  • பாரதியார்

2. இது வெண்ணிறப் பறவை 

  • புறா

3. தூக்கத்தில் வருவது 

  • கனவு

கீழிருந்து மேல்

1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்

  • நூல்

வலமிருந்து இடம்

1. பாராட்டி வழங்கப்படுவது

  • விருது

2. மக்கள் பேசுவதற்கு உதவுவது

  • மொழி

3. சுதந்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்

  • விடுதலை

குறுக்கும் நெடுக்குமாக

1. முத்தமிழுள் ஒன்று

விடை : நாடகம்

குறிப்புகள் கொண்டு விடை எழுதுக

5th Standard - Marpuththodargal - Kuripugalai Kondu vidai Eluthuga

1. தலைகீழாய் என் வீடு 

  • தூக்கணாங்குருவி

2. என் பார்வை கூர்நோக்கு 

  • கழுகு

3. நானும் ஒரு தையல்காரி 

  • சிட்டுக்குருவி

4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன் 

  • கொக்கு

5. எனக்கு வீடு கட்டத் தெரியாது 

  • குயில்

சொல்லிருந்து புதிய சொல் உருவாக்கு

1. பாரதியார் 

  • பாரதி
  • யார்
  • பார்
  • ரதி

2. மணிக்கொடி 

  • மணி
  • கொடி
  • மடி

3. பாவேந்தர்

  • பார்
  • வேந்தர்
  • வேர்
  • பா

4. நாடகம் 

  • நாகம்
  • கடம்
  • நாம்

5. விடுதலை

  • விடு
  • தலை
  • விலை
  • தவிடு

புதிய தொடர் உருவாக்குக.

(எ.கா.) உண்மை

  • நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்

1. பெருமை

  • தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்

2. பாடல்

  • பாரதிதாசனின் பாடல் வரிகள் புரட்சி மிகுந்ததாக உள்ளது.

3. நாடகம்

  • இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்ததே முத்தமிழ் ஆகும்

4. தோட்டம்

  • எங்கள் தோட்டத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகமாக உள்ளது

5. பரிசு

  • விளையாட்டடில் வெற்றி பெற்றவரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்துக

1. பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.

  • பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

2. பறவை அழகான புறா

  • புறா அழகான பறவை

3. தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்

  • தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது

4. போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த

  • உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்

அறிந்து கொள்வோம்

மனிதநேயம்

அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை அத பேரும் நிகராம்

இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்றுக

5th Standard - Marpuththodargal - Arinthukolvom

அறிந்து கொள்வோம்

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய கவிஞர்கள் ஐவரின் படத்தை ஒட்டி, ஒவ்வொருவரையும் பற்றி 5 வரிகள் எழுதி வருக.

பாரதியார்

5th Standard - Marpuththodargal - Bharathidasan

  • டிசம்பர் 11, 1882-ல் பிறந்தார்.
  • தேசியக்கவிஞர், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, மகாகவி என பாராட்டப்படுகிறார்
  • இவர் எழுதிய நூல்கள் – பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு குயில் பாட்டு, விடுதலைப் பாடல்கள்.
  • சுதேசிமித்திரன் நாளிதழில் உதவி ஆசிரியர், சக்கரவரத்தின் மாத இதழ், இந்தியா வார இதழில் ஆசிரியர்

பாரதிதாசன்

5th Standard - Marpuththodargal - Bharathidasan

  • எப்ரல் 29, 1891-ல் புதுச்சேரியில் பிறந்தார்
  • சிறப்பு பெயர் – புரட்சிக்கவிஞர், பாவேந்தர்
    பாண்டியன் பரிசு, குடும்பவிளக்கு, அழகின் கிரிப்பு, இருண்ட வீடு, தமிழியக்கம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்
  • , குயில், பொன்னி இதழ்களை நடத்தினார்

நாமக்கல் கவிஞர்

5th Standard - Marpuththodargal - Namakkal Kavignar

  • பிறப்பு – அக்டோபர் 19, 1888
  • காந்தியக்கவிஞர் என பாரட்டப்பட்டார்.
  • எழுதிய நூல்கள் – மலைக்கள்ளன், என் கதை, அவனும் அவளும், சங்கொலி நூல்கள்
  • தமிழக அரசவை கவிஞராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்

திரு.வி.க

5th Standard - Marpuththodargal - Thiru V. ka

  • பிறப்பு – ஆகஸ்ட் 26, 1883
  • சிறப்பு பெயர் – தமிழ்த்தென்றல்
  • எழுதிய நூல்கள் – பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்த்தென்றல், உன்னொளி, முருகன் அல்லது அழகு
  • தொழிலாளர் நலன், தமிழ் மொழிக்காகப் போராடியவர்.

பாவாணர்

5th Standard - Marpuththodargal - Pavanar

  • பிறப்பு – பிப்ரவரி 7, 1902
  • தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவர்.
  • மொழியாராய்ச்சி, இசைத்தமிழ், ஒப்பியல் இலக்கணம் – நூல்கள்
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியாற்றியவர்

நிற்க அதற்குத் தக

5th Standard - Marpuththodargal - Nirka Atharku thaga

  • உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவேன்
  • நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிப்பேன்
  • மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment