TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 7.3 – தேயிலைத் தோட்டப் பாட்டு

7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 7.3 – தேயிலைத் தோட்டப் பாட்டு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Theyilai Thotta pattu

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கும்மிப் பாடல்கள் ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற ‘தேயிலைத் தோட்டப் பாட்டு’ என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை.
  • மக்கள் இயல்பாகத் தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர்.
  • பல்வேறு பொருள்கள் பற்றிய இவ்வெளிப்பாடுகள் மெல்லிய தாளில், பெரிய எழுத்தில், மலிவான அச்சில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறு சிறு நூல்களாக வெளியிடப்பட்டன.
  • வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், தெருப்பாடல்கள் என்று இந்நூல்கள் பலவாறாக அழைக்கப்பட்டன.
  • செவ்வியல் இலக்கிய மரபு பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை எல்லாம் இத்தகைய நூல்கள் பாடுபொருள்களாக்கின.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1) முச்சந்தி இலக்கியம் என்பது

கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது

கூற்று 2 : பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 1, 2 சரி
  3. கூற்று 1, 2 தவறு
  4. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

விடை : கூற்று 1, 2 சரி

2) உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் இத்தொடரில் பெயரெச்சம்

  1. உண்டு
  2. பிறந்து
  3. வளர்ந்த
  4. இடந்தனில்

விடை : வளர்ந்த

சிறு வினா

எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.

  • நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை “நா” அறியாது.
  • ஆனால்  தேநீரைப் பருகும்போது அதன் சுவையை “நா” உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற்று நம் மனதை சிந்திக்கத் தூண்டுகிறது.
  • அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்கு தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

நெடு வினா

எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக

முன்னுரை:-

நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் கதைப் பாடல்கள் வாயிலாக விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை எதார்த்தமாக வடிக்கின்றனர். அந்த வகையில் “தேயிலைத் தோட்டப் பாட்டு” என்ற பாடல்களின் வாயிலாக மக்களின் வலிகளை இங்குப் பதிவு செய்யப்படுகிறது.

துயரங்கள்:-

  • விளிம்புநிலை மக்களின் வாழ்வு துயரம் தோய்ந்தது.
  • அவர்களின் விம்மி விம்மி அழுதக் குரலைக் காற்று கேட்டிருக்கலாம்.
  • அவை வெகுசனங்களிடையே நாட்டுப்புற இலக்கிய வடிவில் கும்மிப்பாடலாக அவர்களின் துயரம் போக்கின. அப்பாடல்களுள் தேயிலைத் தோட்டப்பாட்டு வாயிலாக அறியலாம்.
  • பழங்காலத்தில் நம் தேசத்தில் பலவிதக் கைத்தொழில்கள் சிறப்புப் பெற்று விளங்கியது.
  • நாகரீகத்திலும், ராஜரீகத்திலும் நாடெங்கும் எந்நாளும் கொண்டாடினர்.
  • இத்தகு சீரும் சிறப்பும் கொண்ட நம் தேசத்தில் அன்னியர்கள் புகுந்தனர்.
  • நம் பண்பாட்டையும், நாகரிகத்தையும், கைத்தொழிலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை அடித்து நம்மை அற்ப பிராணி போல் செய்தனர்.
  • உண்டு பிறந்து வளர்ந்த இடங்களில் பலவேலை செய்த நாம் இன்று மனைவி குழந்தைகளோடு நாயினும் கீழாகினோம்.

கங்கானியின் செயல்:-

  • விளம்பர சுவரொட்டி ஒட்டி வேலைக்கு அழைத்தனர்.
  • ஆலைக் கரும்பு போல நம் உழைப்பைப் பிழிந்தும் குரங்கைப் போல் நம்மை ஆட்டிப் படைத்தும் ஒன்றுக்குப் பத்தாக பொய் கணக்கெழுதினர்.
  • தயவு ஏதுமில்லாமல் கூலித்தொழிலாளர்களைக் கப்பலில் ஏற்றி இலங்கை, அந்தமான தீவுக்கு கொண்டு சென்றனர்.
  • உண்ண உணவுக்கும், கைப்பிடிச் செலவுக்கும் துன்பப்பட்டு மண்ணுளிப் பாம்புப் போல மனைவி மக்களோடு வாழ்ந்தனர்.
  • சகோதர, சகோதரிகளே கண்காணிப்பவர் கூறும் பொய்யுரைகளைக் கண்டு மயங்காதீர்.

முடிவுரை:-

வறுமை, பிணி, ஏமாற்றம் போன்றவை எளிய மக்களின் வாழ்க்கை வழிகளை பிரதிபலிக்கின்றன. இப்படியே இவர்கள் கூலித் தொழிலாளியாய்த் தேயிலைத் தோட்டத்தில் (இந்தியர்) நாம் துன்பப்படுவதற்கு கல்வி, ஒழுக்கம், நாகரீகம் இல்லாத குறையே. இன்றே உணருங்கள் நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கற்றுக் கொடுத்து, குறையில்லாமல் ஒற்றுமையாய் ஊரில் கட்டுப்பாட்டோடு வாழ்வோம்.

கற்பவை கற்றபின்…

உங்கள் பகுதியில் உள்ள வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்து, சிறப்பு மலர் உருவாக்குக.

தாலாட்டுப் பாட்டு

மாமன் அடிச்சாரோ மல்லிகப்பூச் செண்டால
மன்னவனே அழலாமோ தேம்பித் தேம்பி அழலாமோ
ஆராரோ ஆராரோ…
அம்மா அடிச்சாளோ அல்லிபூ செண்டால
ஆனந்த பொன்மணியே தேம்பித் தேம்பி அழலாமோ
பாட்டி அடிச்சாளோ பாலுட்டும் சங்கால
பாராளும் மன்னவனே தேம்பித் தேம்பி அழலாமோ
அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டால
ஆடிவரும் மயிலழகே தேம்பித் தேம்பி அழலாமோ
ஆராரோ ஆராரோ
நீ அழுத கண்ணீரு நெல்லுக்கும் இஞ்சிக்கும்
நீராய்ப் பாயுதடா
ஆராரோ ஆராரோ

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. தமிழர்கள் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாகவும் தேயிலைத் தோட்டக் கூலிகளாகவும் புலம்பெயரக் காரணம் யாது?

19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் வெள்ளையர் வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாகவும் தேயிலைத் தோட்டக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்தனர்.

2. யாரின் நிலையை பாரதி பாடியுள்ளார்?

தஞ்சமுமில்லாத புலம்பெயர்ந்த தமிழர்கள் நிலையைப் பாரதி பாடினார்.

3. நாட்டுப்புற இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

  • வெகுசன இலக்கியம்
  • முச்சந்தி இலக்கியம்
  • தெருப்பாடல்கள்
  • காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள்
  • குஜிலி நூல்கள்
  • பெரிய பாட்டுப் புத்தங்கள்

4. நாட்டுப்புற இலக்கியங்கள் எவற்றையெல்லாம் பாடுபொருள்களாக்கின?

செவ்வியல் இலக்கிய மரபு பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை எல்லாம் இத்தகைய நூல்கள் பாடுபொருள்களாக்கின.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment