TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 7.4 – புறநானூறு

7.4 புறநானூறு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 7.4 – புறநானூறு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Purananuru

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • இப்பாடப்பகுதி புறநானூற்றின் 184ஆவது பாடல் ஆகும். புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது;
  • பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
  • முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உ.வே.சா. அச்சில் பதிப்பித்தார்.
  • இதன் சிறப்புக் கருதி இதனைப் பலரும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
  • கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • இப்பாடலின் ஆசிரியர் பிசிராந்தையார்.
  • பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
  • ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்.
  • இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி.
  • பிசிராந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்.

சொல்லும் பொருளும்

  • காய்நெல் – விளைந்த நெல்
  • மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு).
  • செறு – வயல்
  • தமித்து – தனித்து
  • புக்கு – புகுந்து
  • யாத்து – சேர்த்து
  • நந்தும் – தழைக்கும்
  • வரிசை – முறைமை
  • கல் – ஒலிக்குறிப்பு
  • பரிவு – அன்பு
  • தப – கெட
  • பிண்டம் – வரி
  • நச்சின் – விரும்பினால்

இலக்கணக்குறிப்பு

  • காய்நெல் – வினைத்தொகை
  • புக்க – பெயரெச்சம்
  • அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

உறுப்பிலக்கணம்

1. அறிந்து = அறி + த் (ந்) + த் + உ

  • அறி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த்கால இடைநிலை;
  • உ –  வினையெச்ச விகுதி.

2. அறுத்து = அறு + த் + த் + உ

  • அறு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த்கால இடைநிலை;
  • உ –  வினையெச்ச விகுதி.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

யானை புக்க புலம்போல இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்

  1. தனக்குப் பயன்படும் , பிறருக்குப் பயன்படாது
  2. தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
  3. பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது
  4. தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்

விடை : தனக்குப் பயன்படும் , பிறருக்குப் பயன்படாது

குறு வினா

1. அறிவுடை வேந்தனின்நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?

  • அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
  • அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் யானை புகுந்த நிலம் போ் ஆகிவிடும்

2. செவியறிவுறூஉ துறையை விளக்குக.

அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.

சிறு வினா

யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.

உவமை:-

சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.

பொருள்:-

அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.

உவமை:-

பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லை விட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்

பொருள்:-

அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும். அரசன் தானும் பயன்பட மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

கூடுதல் வினாக்கள்

சிறந்த அரசு நிருவாகத்திற்கு நீவிர் அளிக்கும் பரிந்துரைகளை நாளிதழ்த் தலையங்கமாக எழுதுக.

  • நாடோறும் நாடி முறை செய்யா மன்னன் நாள்தோறும் நாடு கெடும்.
  • நாள்தோறும் மக்களின் தேவையைப் புரிந்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லேனல் மீக்கூகூறும் மன்னன் நிலம்.
  • காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் பேசாதவனாக மன்னன் இருக்க வேண்டும்.
  • அரசின் எல்லாத் துறைகளும் போர்க்கால அடிப்படையில் இயக்க வேண்டும்.
  • தண்ணீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி போன்றவற்றில் அதிகக் கவனம் செலத்த வேண்டும்.
  • கல்வியில் காமராசராக விளங்க வேண்டும்.
  • நியாய விலைக் கடைகளில் முறையான வர்த்தகம் நடைபெற வேண்டும்.
  • எரிபொருட்கள் விலையைப் போல ஒரே விலை ஒரு நாளைக்கு என எல்லா பொருள்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • விலையெல்லாம் பொருட்கள் தவிர்த்து வரி விதிப்பில் குறைவாக வசூலிக்க வேண்டும்.
  • தொழில், தொழில் நுட்பக் கல்லூரிகளில் பாடத்திறனை வெளிநாட்டினர் போல் மேம்படுத்த வேண்டும்.
  • விவசாயத்திற்குத் தட்டுபாடில்லாமல் பாசனத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  • சிறுபான்மையினருக்கும், மகளிருக்கும் உரிய நலன்களைப் பெற்றுத்தர வேண்டும்.
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததே என்பதை மறத்தல் கூடாது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • செழிக்கும் – “செய்யும்” என்னும் வினைமுற்று
  • உண்ணான் – படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று

உறுப்பிலக்கணம்

புக்கு = புகு (புக்கு) + உ

  • புகு – பகுதி. புக்கு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது
  • உ –  வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

நாட்கு = நாள் + கு

  • “ளல வல்லினம் வரட்டற வும் ஆகும்” என்ற விதிப்படி “நாட்கு” என்றாயிற்று.

பலவுள் தெரிக

4. 1894 உ.வே.சா. அச்சில் பதிப்பித்த நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. சீவகசிந்தாமணி
  3. புறநானூறு
  4. பத்துப்பாட்டு

விடை : புறநானூறு

2. புறநானூற்றை முழுவதுமக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

  1. உ.வே.சா
  2. ஜார்ஜ். எல். ஹார்ட்
  3. மீனாட்சி சுந்தரனார்
  4. ஜி.யு.போப்

விடை : ஜார்ஜ். எல். ஹார்ட்

3. அறிவுடை நம்பி ஆண்ட நாடு

  1. சேர நாடு
  2. பாண்டிய நாடு
  3. சோழ நாடு
  4. பல்லவ நாடு

விடை : பாண்டிய நாடு

4. பொருந்தாதவற்றை தேர்க

  1. மா –  ஒருநில அளவு
  2. கல் – ஒலிக்குறிப்பு
  3. பிண்டம் – வயல்
  4. வரிசை – முறைமை

விடை : பிண்டம் – வயல்

5. பொருந்தாதவற்றை தேர்க

  1. காய்நெல் – வினைத்தொகை
  2. புக்க – வினையெச்சம்
  3. அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  4. அறுத்து – வினையெச்சம்

விடை : புக்க – வினையெச்சம்

குறு வினா

1. பிசிராந்தையார் குறிப்பு வரைக

  • பிசிராந்தையார் பெயரில் பிசிர் என்பது பாண்டிய நாட்டில் உள்ள ஓர் ஊர் ஆகும். ஆந்தையார் என்பது இயற்பெயர் ஆகும்.
  • இவர் பாண்டிய  மன்னர் அறிவுடை நம்பியின் அரசவைச் சான்றோர்.

2. பாடாண் திணை என்பது என்ன?

ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

3. செவியறிவுறூஉ துறை என்றால் என்ன?

அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.

4. புறநானூறு குறிப்பு வரைக

  • புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
  • 400 பாடல்களை கொண்டது.
  • புறம், புறப்பாடு எனவும் அழைக்கப்பெறுகிறது.
  • பண்டையத் தமிழர்களின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்து கருவூலமாகத் திகழ்கிறது.
  • முடியுடை மூவேந்தர், குறுநில மன்ர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பெருண்மைகள் வெளிப்படுத்துகிறது.
  • இந்நூலை 1894-ல் உ.வே.சா. அச்சில் பதிப்பித்தார்.
  • கலிபோர்னியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஜார்ஜ். எல். ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் புறநானூற்றை 1999 ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment