TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 7.2 – அதிசய மலர்

7.2 அதிசய மலர்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 7.2 – அதிசய மலர். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Athisaya Malar

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • இக்கவிதை ‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
  • இதைப் படைத்த தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்.
  • தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்), ஈழம் : கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார்.
  • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது 

  1. கடந்தகாலத் துயரங்களை
  2. ஆட்களற்ற பொழுதை
  3. பச்சையம் இழந்த நிலத்தை
  4. அனைத்தையும்

விடை : அனைத்தையும்

சிறு வினா

1. அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக, தமிழ்நதி கூறுகிறார்?

  • புலம் பெயர்ந்த மக்களின் எண்ணத்தில் மீதமிருக்கும் மரங்களில், நீரில்லா பொட்டல் வெளிப் பகுதியில், போருக்கு பின் பிறந்த குழந்தை போல முகை (மொட்டு) அவிழ்ந்து மலர்ந்து சிரிக்கிறது அதிசய மலர் ஒன்று.
  • ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தல், உலாவிய யானையின் எச்சத்த்திலிருந்து வளர்ந்திருக்கலாம் இச்செடி.
  • எவரோ ஒருவருடைய கால் சப்பாத்தின் (காலுறை) பின்புறம் விதை ஒட்டிக்கொண்டு இங்கு வந்து உயிர் பெற்றிருக்கலாம் – என்று தமிழ்நதி கூறுகிறார்.

2. எங்கிருந்தோ வருகிறது
   வண்ணத்துப்பூச்சியொன்று
   பறவைகளும் வரக் கூடும் நாளை – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:-

தமிழ்நதியின் “அதன் பிறகு எஞ்சும்” கவிதை தொகுப்பில் “அதிசய மலர்” என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளன.

பொருள்:-

மலரைத்தேடி வண்ணத்துப்பூச்சியும், பறவையும் வரக்கூடும் என்பது பொருள்.

விளக்கம்:-

மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் உலவிய யானையின் எச்சத்திலோ அல்லது காலனியின் பின்புறம் ஒட்டிக்கிடந்து முளைத்தது அதிசயமலர். அப்பூச்செடியின் அடையாளத்தைக் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சியும், பறவையும் நாளை வரக்கூடும் என்று தமிழ்நதி கூறுகிறார்.

கற்பவை கற்றபின்…

போர்களுக்கு எதிரான குரல்கள் வெளிப்படும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படிக்க.

போருக்கு எதிராக குரல்கள்…

இன்று காலையும் போர் விமானங்கள் எங்கள் கிராமத்தில் மேல் சுற்றின. சிலர் பதுங்கு குழிக்குள் அடைக்கலம் சிலர் வெளியே நின்ற வெறுத்துப் பார்த்தனர்.
குண்டுகள் வீழ்ந்தன
கிராமத்தின் மத்தியில் புகை மண்டலம்
சிலருக்கு காயம்; சிலர் மாயம்
எத்தனை பேர் மாண்டனர்
பலருக்கு அந்தக் கண்களுக்குத்தான் தேவை
பாழும் உலகம் பரிதாப்படவில்லை
எங்கள் மேல விழுமோ கிழக்கில் வெள்ளி வருமோ!

மனிதம் விற்று மதி போற்றும்
மக்கள் வேடத்தில் மாக்கள் கூட்டம்
மதம் தன்னை ஆயுதமாய் ஏந்தி
பகுத்தறியாமல் பகை கொள்வதா
படைகொண்டு தாக்கினால் பாவம்
நாங்கள் என்ன செய்வோம்
பாதிபேர் கைது பாதி பேர் காணோம்
பக்கத்து வீட்டில் அப்பா இல்லை
என் வீட்டில் என் அண்ணன் இல்லை
எதிர் வீட்டில் என் நண்பன் இல்லை
எங்கே போனர்கள் ஆண்டு
இரண்டாயிற்று சேதி இல்லை
இறைவனும் எங்கள் முன் வரவில்லை
ஏதேனும் கேட்கலாம் என்றால்
எதைக் கேட்பது எதை விடுவது
மீண்டு வருமா மாண்ட உயிர்கள்
மறு பிறவியிலாது ஆண்டவா
என்னை படைப்பதை மறந்து விடு.

கூடுதல் வினாக்கள்

புணர்ச்சி விதி

புன்னகை=  புன்மை + நகை

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “புன் + நகை” என்றாயிற்று.
  • “னல முன்றன ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “புன்னகை” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. தமிழ்நதி எழுதிய கவிதை

  1. புன்னகை
  2. அதிசய மலர்
  3. பனிக்கூழ்
  4. தென்றல்

விடை : அதிசய மலர்

2. கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்

  1. கலைவாணி
  2. கலைச்செல்வி
  3. கலையரசி
  4. கலையமுதா

விடை : கலைவாணி

குறு வினா

1. தமிழ் நதியின் மொழிநடை எதனை அடிப்படையாகக் கொண்டது?

புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும், வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

2. அதிசய மலரின் புன்னகை எங்கிருந்து தொடங்குகிறது?

அதிசய மலரின் புன்னகை இதழ்களிலிருந்து தொடங்குகிறது

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment