TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 7.1 – இலக்கியத்தில் மேலாண்மை

7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 7.1 – இலக்கியத்தில் மேலாண்மை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Ilakiyathil Melanmai

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • இப்பாடப்பகுதி வெ. இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.
  • 1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.
  • தமிழ் இலக்கியப் பற்றுடைய இவர், தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்;
  • பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகங்களிலும் பங்களிப்பைச் செய்து வருபவர்.
  • இவர் எழுதிய ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல், 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
  • சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவர் படைப்புக்களம் விரிவானது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

பலர் துஞ்சவும் தாம் துஞ்சான் விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்

  1. சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
  2. சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
  3. கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
  4. கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்

விடை : சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்

குறு வினா

1. பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.

  • சரியான காலத்தில் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.
  • “பருவத்தே பயிர் செய்” என்பது அனுபவச் சொல்.
  • ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும்.
  • பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.

2.எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக

  • நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை “நா” அறியாது.
  • ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை “நா” உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற்று நம்மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
  • அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

குறு வினா

வேளாண்மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.

  • வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
  • ஒசரியான பயிர்த் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடைக்குப் பின் பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல்
  • ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால் தான் வேளாண்மை செழிக்கும்.
  • மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை.

நெடு வினா

நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

நாலடியார் கூறும் நிருவாக மேலாண்மை:-

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

இதையே நாலடியார்

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

என்று பக்குவமாய் கூறுகிறது.

  • நிருவாகத்தில் வரவே செலவை த் தீர்மானிக்க வேண்டும்.
  • வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நிதி மேலாண்மை:-

  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது.
  • அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேச வருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் நெரித்தது. ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை.
  • அவன் தான் அளித்த விருந்தை உ ண்டவர்கள் , உதவி செய்வார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டான்.
  • அவனுடைய சேவகரர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும் வெளிறிய முகத்தோடும் திரும்புகிறாரர்கள்.
  • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.

ஒளவையாரின் நிருவாக மேலாண்மை:-

தாம் ஈட்டும் பொருளினை விட அதிகமாகச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும் இழப்பார்கள்.

அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவார்கள்.

எத்துணைப் பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போலவே நடத்தப்படுவர்.

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

என்ற பாடல் மூலம் ஒளவையார் நிதி நிருவாக மேலாண்மையை விளக்குகிறார்.

கற்பவை கற்றபின்…

புறச்சூழல்களுக்கு ஏற்ப உங்கள் நேர மேலாண்மையைப் பயன்படுத்திக் கல்வியில் கவனம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடுக.

(கந்தனும், கபிலனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கபிலன் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்குவான். கந்தன் குறைந்த மதிப்பெண்களே வாங்குவான் ஒருநாள் கல்வி பற்றி இருவரும் உரையாடுகின்றனர்)

கந்தன் கபிலன் நீ எப்படியோ நல்ல மதிப்பெண் பெற்று விடுகிறாய். என்னால் அது முடியவில்லையே என்ன காரணம் கூற முடியுமா?
கபிலன் வகுப்பில் ஆசிரியர் பாடத்தை நடத்தம் போது நன்றாகப் படிப்பேன். வீட்டிற்கு வந்த பின் இரண்டு முறை படிப்பேன்.
கந்தன் வீட்டிற்கு வந்து இரண்டு முறை படிப்பாயா? எப்படி உனக்கு நேரம் கிடைக்கிறது!
கபிலன் ஏன் நேரம் கிடைக்காது. மாலை 5 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு தேநீர் அருந்துவேன். அறை மணி நேரம் ஓய்வெடுப்பேன். சரியாக 6 மணிக்கு படிக்க ஆரம்பித்து விடுவேன்.
கந்தன் அப்படியா 5 – பளளியிலே கிரிக்கெட் விளையாடுவேன். 6 – 8 தொலைக்காட்சி பார்பேன். 9 மணிக்கு சாப்பிடவேன். 9 – 10க்குள் தூங்க ஆரம்பித்து விடுவேன்.
கபிலன் தயவு செய்து நான் சொல்வதைக்கேள். இனிமேல் என்னைப் பின்பற்று. என் அறிவுரைகளைக் கேள்.
கந்தன் சரி அப்படியே செய்கிறேன் சொல்.
கபிலன் காலை 5 மணிக்குள் எழுந்திரு
முகம் கழுவி பல் துலக்கி 5.15-க்குள் புத்தகத்தை கையில் எடு
1.30 மணி நேரம் தொடர்ந்து படி.
7.30-க்குள் குளி, பள்ளிக்கு தயாராகு
8 மணிக்கு சாப்பாடு
8.30 மணிக்கு பள்ளி
5 – 6 மணிக்கு வீடு திரும்பு
6 – 8 வரை தொலைக்காட்சி, விளையாட்டுகளைத் தவிர்த்துப் படி. நிச்சயம் முன்னேற்றம் கிட்டும்.
கந்தன் நன்றி நண்பா, நிச்சயம் உன் பேச்சைக் கேட்பேன். வெற்றி பெறுவேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான் – என்று தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்த யாரைப் பற்றி யார் எந்நூலில் பாடியுள்ளார்

  1. தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்
  2. நெடுஞ்செழியனைப், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் – மதுரை காண்டத்தில்
  3. நல்லங்கிள்ளியைப், கோவூர்கிழார் – புறநானூற்றில்
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்

2. உரோபுரிச் சிப்பாய்கள் பாணடியப் போர்படையில் இடம் பெற்றிருந்தர்கள் என்ற குறிப்பினை உடைய நூல்

  1. மூதுரை
  2. சிலப்பதிகாரம்
  3. நளவெண்பா
  4. அறநெறிச்சாரம்

விடை : சிலப்பதிகாரம்

3. இன்சொல் விளைநிலனோ ஈதலே வித்தாக… – என்று கூறுவது

  1. அறநெறிச்சாரம்
  2. பரிபாடல்
  3. மூதுரை
  4. புறநானூறு

விடை : அறநெறிச்சாரம்

4. காவிப்பூம்பட்டினத்துக்கு வந்த பொருள்களுக்கு சுங்கம் வசூலித்தபின் அவற்றின் மீது அதிகாரி பொறித்த சின்னம்

  1. வில்
  2. புலி
  3. மீன்
  4. சிங்கம்

விடை : புலி

5. சங்க இலக்கியங்களின் வாயிலாக மிகப்பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கும் இடமாகவும் அறியப்படுவது

  1. கொற்கை
  2. தொண்டி
  3. வஞ்சி
  4. முசிறி

விடை : முசிறி

6. “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்…” – எனக் காவிரிப்பூம்பட்டினத்தில் மாரிகாலத்து மழைமேகம் போல கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதனைக் குறிப்பிடும் நூல்

  1. பட்டினப்பாலை
  2. பரிபாடல்
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : பட்டினப்பாலை

7. “உடைத்தும் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
       இடைக்கன் முரிந்தார் பலர் – என்ற குறட்பா உணர்த்தும் செய்தி

  1. தன்னுடைய வலிமையின் அளவை மீறிச் செயல்படுவோர் அழிவர்
  2. எந்தச் செயலையும் முடிக்க இயலும் என்பதை நம்ப வேண்டும்
  3. முடியாதது என்ற ஒன்ற எவருக்குமே இல்லை
  4. தான் என்ற சர்வம் வெற்றியுடையவனாக்கும்

விடை : தன்னுடைய வலிமையின் அளவை மீறிச் செயல்படுவோர் அழிவர்

8. “ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்… – என நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் கவிஞர்

  1. கோவூர்கிழார்
  2. ஒக்கூர் மாசாத்தியார்
  3. ஒளவையார்
  4. கபிலர்

விடை : ஒளவையார்

9. “ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது” என்று கூறியவர்

  1. ஹிராக்ளிடஸ்
  2. ஷேக்ஸ்பியர்
  3. பெர்னாட்ஷா
  4. அரிஸ்டாட்டில்

விடை : ஹிராக்ளிடஸ்

10. இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலை எழுதியவர்

  1. சகாயம்
  2. வெ.இறையன்பு
  3. இந்திரா பார்த்தசாரதி
  4. மேலாண்மை பொன்னுசாமி

விடை : வெ.இறையன்பு

11. வெ.இறையன்புவின் வாய்க்கால் மீன்கள் நூல் எந்த ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலிற்கான பரிசை பெற்றது.

  1. 1996
  2. 1998
  3. 1997
  4. 1995

விடை : 1995

குறு வினா

1. கடலைக் குறிக்கும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக

அரலை அரி
அழுவம் அளம்
ஆர்கலி ஆழி
உவரி திரை
பெருநீர் சுழி
புணர்ப்பு தென்நீர்
முந்நீர் வரி
வலயம் ஈண்டுநீர்
அலை பானல்
அளக்கர் நீராழி
ஓதம் பெளவம்

2. சங்க இலக்கியங்கள் காட்டும் மிகப்பெரிய துறைமுகம் எது?

சங்க இலக்கியங்கள் காட்டும் மிகப்பெரிய துறைமுகம் முசிறி ஆகும்.

3. நாலடியார் கூறும் நிர்வாக மேலாண்மையை விளக்குக

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்… – என்கிறார் நாலடியார்

4. வெ. இறையன்புவின் படைப்புக்களம் எதனை அடிப்படையாகக் கொண்டது?

சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல்

5. வெ. இறையன்பு குறிப்பு வரைக.

  • தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்ணி அலுவராகப் பணியாற்றி வருகிறார்.
  • ஐ.ஏ.எஸ் தேர்வினை தமிழில் எழுதி வெற்றிப் பெற்றவர்.
  • தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
  • இவர் எழுதிய “வாய்க்கால் மீன்கள்” என்ற நூல் 1995-ல் தழிக வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான சிறந்த விருதினை பெற்றது.
  • சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவருடைய படைப்புக்களம் விரிவானது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment