TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 7.4 – மதுரைக்காஞ்சி

7.4 மதுரைக்காஞ்சி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 7.4 – மதுரைக்காஞ்சி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - maduriaikanchi

9th Std Tamil Text Book – Download

மனப்பாடல் பகுதி

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

சொல்லும் பொருளும்

 • புரிசை – மதில்
 • அணங்கு – தெய்வம்
 • சில்காற்று – தென்றல்
 • புழை – சாளரம்
 • மாகால் – பெருங்காற்று
 • முந்நீர் – கடல்
 • பணை – முரசு
 • கயம் – நீர்நிலை
 • ஓவு – ஓவியம்
 • நியமம் – அங்காடி.

இலக்கணக்குறிப்பு

 • ஓங்கிய – பெயரெச்சம்
 • நிலைஇய – சொல்லிசை அளபெடை
 • குழாஅத்து – செய்யுளிசை அளபெடை
 • வாயில் – இலக்கணப் போலி
 • மா கால் – உரிச்சொல் தொடர்
 • முழங்கிசை, இமிழிசை – வினைத் தொகை
 • நெடுநிலை, முந்நீர் – பண்புத் தொகை
 • மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. ஆழ்ந்த = ஆழ் + த்(ந்) + த் + அ

 • ஆழ் – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ – பெயரெச்ச விகுதி

2. ஓங்கிய = ஓங்கு + இ(ன்) + ய் + அ

 • ஓங்கு – பகுதி
 • இ(ன்) – இறந்தகால இடைநிலை
 • ய் – உடம்படுமெய்
 • அ – பெயரெச்ச விகுதி

3. மகிழ்ந்தோர் – மகிழ் + த்(ந்) + த் + ஓர்

 • மகிழ் – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

பாடநூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

மதுரைக்காஞ்சி –  பெயர்க்காரணத்தை குறிப்பிடுக

காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.

சிறு வினா

“மாகால் எடுத்த முந்நீர்போல” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் சுட்டல் :-

இவ்வடி மாங்குடிமருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி நூலில் இடம் பெற்றுள்ளன.

விளக்கம் :-

விழாவைப் பற்றிய முரசறைவாேர் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடல் ஒலி போல் ஒலிக்கின்றது. பெருங்காற்று புகுந்தவுடன் கடல் பேரொலி எழுப்பும். அதனைப் போல மிகுதியான ஓசையுடன் முரசறைவோர் விழா பற்றி முழக்கம் செய்தனர்.

கற்பவை கற்றபின்

1. உங்கள் ஊரின் பெயர்க்காரணத்தை எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக

எங்கள் ஊர் ஈரோடு. இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப் பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது.

பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரன தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை கூப்பிடவே இல்லை. அவரது மனைவி தாட்சாயினி தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு வந்தாள். யாகத்தில் தமது கணவரைத் தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினார். மேலும் அவள் சிவனிடம் திரும்பிய பின் சிவன் கோபமுற்று தாட்சாயினை எரித்தார் எனக் கூறுகிறது. அதைக் கேட்ட பிரம்மா தன் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக் கொண்டு பிரம்மதோஷம் பிடித்தது. பிரம்மதோஷத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதம் சுற்றினார். அப்போது ஈரோடு வந்தபோது இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டினை சுற்றியுள்ள வெள்ளோடு (வெள்ளை மண்டை), பேரோடு (பெரிய மண்டை) மற்றும் சித்தோடு (சிறிய மண்டை) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறுகிறது. ஈர் (இறுதி) ஓடு என்பதால் ‘ஈரோடு’ என்பர்.

2. தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட உலகின் தொன்மை நகரங்களில் ஒன்று மதுரை. அந்நகரத்தில் இயலும் இசையும் நாடகமு் பொங்கிப் பெருகின –  இத்தொடர்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கருத்துக்களைத் திரட்டி ஐந்து மணித்துளிகள் பேசுக

சங்கத்தமிழே! சரித்திரத் தமிழே வணக்கம். மதுரையின் மாண்பைப் பேசுகின்றேன். பாண்டியன் வளர்த்த சங்கம் உருவான இடம் மதுரை. தமிழாய்ந்த தமிழ்மகனார்கள் குழுமி தமிழ் வளர்த்த இடம் மதுரை. சிறந்த நூல்கள் அரங்கேற்றம் செய்த நம் மூத்தகுடிப் புலவர்கள் தவழ்ந்த இடம் மதுரை மாநகர் ஆகும். அதனால்தான் என்னவோ? முத்தமிழ் வளர்த்த ‘மதுரை’ இனிமை என்ற பொருளில் இனிக்கிறது. இயல், இசை, நாடகத்தையும் வளர்த்து, அறநெறி நூல்கள் வழி ஒழுக்கத்தையும் பக்தி இலக்கியங்கள் வழி மறுமை வாழ்க்கையும் பல பயனுள்ளவற்றை மண்ணுலகிற்கு வழங்கிய பெருமை எல்லாம் மதுரையையேச் சாரும் என்று சொல்லி நிறைவு செய்கிறேன். நன்றி!வணக்கம்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. வனவிலங்குச் சரணாலயம் பழங்காலத் தமிழகத்தில் இருந்ததைக் குறிப்பிடும் நூல் ___________

 1. புறநானூறு
 2. நான்மாடக்கூடல்
 3. மதுரைக்காஞ்சி
 4. பட்டினப்பாலை

விடை : மதுரைக்காஞ்சி

2. தலையானங்கானகத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்ட நூல் ___________

 1. புறநானூறு
 2. நான்மாடக்கூடல்
 3. பட்டினப்பாலை
 4. மதுரைக்காஞ்சி

விடை : மதுரைக்காஞ்சி

3. தவறானவற்றைச் சுட்டுக

 1. மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
 2. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடியில் பிறந்தவர் மாங்குடி மருதனார்
 3. எட்டுத்தொகையில் 13 பாடல்களைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
 4. நான்மாடக்கூடல் என்னும் நூலையும் மாங்குடி மருதனார் பாடியுள்ளார்.

விடை : நான்மாடக்கூடல் என்னும் நூலையும் மாங்குடி மருதனார் பாடியுள்ளார்.

4. பொருந்தாதவற்றைக் கண்டறிக

 1. பணை – முரசு
 2. கயம் – நீர்நிலை
 3. ஓவு – தெய்வம்
 4. நியமம் – அங்காடி

விடை : ஓவு – தெய்வம்

5. மதுரைக்காஞ்சியின் மொத்த அடிகள் ___________

 1. 762
 2. 782
 3. 792
 4. 772

விடை : 782

6. மதுரைக்காஞ்சி ___________ நூலில் முதன்மையானது

 1. பதினெண்கீழ்கணக்கு
 2. பதினெண்மேற்கணக்கு
 3. சிற்றிலக்கியம்
 4. பேரிலக்கியம்

விடை : பதினெண்மேற்கணக்கு

7. அல்லங்காடி என்பது மதுரையில் காணப்பட்ட  ___________

 1. இரவுக் கடைகள்
 2. மாலைக் கடைகள்
 3. காலைக் கடைகள்
 4. நண்பகல் கடைகள்

விடை : இரவுக் கடைகள்

8. “வைகை அன்ன வழக்குடை வாயில்” – இவ்வடியில் இடம் பெறும் உவமை ___________

 1. அன்ன
 2. வைகை
 3. வாயில்
 4. வழக்குடை

விடை : வைகை

9. “மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு” – இவ்வடியில் இடம் பெறும் உவமை ___________

 1. மலை
 2. மழை
 3. மாடம்
 4. நிவந்த

விடை : மலை

10. “கலி” என்பதன் பொருள் ___________

 1. துன்பம்
 2. மகிழ்ச்சி
 3. மலை
 4. பெருமிதம்

விடை : மகிழ்ச்சி

பொருத்துக

1. புரிசை அ. தெய்வம்
2. அனங்கு ஆ. மதில்
3. சில்காற்று இ. சாளரம்
4. புழை ஈ. தென்றல்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ. 4 – இ

பொருத்துக

1. மாகால் அ. கடல்
2. முந்நீர் ஆ. பெருங்காற்று
3. பனை இ. நீர்நிலை
4. கயம் ஈ. முரசு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ. 4 – இ

பொருத்துக

1. மதில் அ. வைகை ஆறு
2. வாயில் ஆ. மேகங்கள் உலவும் மலை
3. மாளிகை இ. தெய்வத்தன்மை
4. மக்கள் ஈ. வானளவு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ. 4 – அ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ___________ என்பதன் பொருள் ‘முரசு’

விடை : கயம்

2. ‘ஓவு’ என்பதன் பொருள் ___________

விடை : ஓவியம்

3. ___________, ___________ ஓவியம் போல் கட்சியளிக்கின்றன

விடை : நாளங்காடியும், அல்லங்காடியும்

4. ___________  இயற்றியவர் மாங்குடி மருதனார்

விடை : மதுரைக்காஞ்சி

5. ___________  நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.

விடை : பத்துப்பாட்டு

குறு வினா

1. “பொறிமயிர் வானம்…. கூட்டுறை வயமாப் புலியொடு குழும்” – இவ்வடிகள் மூலம் நாம் அறியும் செய்தி யாது?

மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்துள்ளதை இவ்வடிகள் மூலம் அறியலாம்.

2. ஓவியம் போன்ற இருபெரும் கடைத்தெருக்கள் எவை?

நாளங்காடி, அல்லங்காடி

3. விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் எவ்வாறு இருந்தது?

விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல ஒலித்தன.

4. காஞ்சி என்பதன் பொருள் யாது?

காஞ்சி என்பதன் பொருள் நிலையாமை ஆகும்.

5. மதுரைகாஞ்சி நூலின் சிறப்பினை எழுதுக

மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன.

6. முந்நீர் என்பதை விவரிக்க

முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்

7. மதுரைக்காஞ்சி நூல் பெயர்க்காரணம் கூறுக

மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதால் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.

8. பெருங்காற்று புகுந்த கடலொலி போல என்ற உவமை எதற்கு ஒப்பாக கூறப்பட்டது?

பெருங்காற்று புகுந்த கடலொலி போல என்ற உவமை “விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம்” ஒப்பாக கூறப்பட்டது.

9. “மகால் எடுத்த முந்நீர் போல” என்பதில் “மகால்” , “முந்நீர்” ஆகிய சொற்களின் பொருள் யாது?

 • மகால் – பெருங்காற்று
 • முந்நீர் – கடல்

10. மதுரைக்காஞ்சியின் வேறு பெயர் யாது?

பெருகுவள மதுரைக்காஞ்சி

11. மாங்குடி மருதனார் குறிப்பு வரைக

 • மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
 • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
 • எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment