TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 6.4 – செய்தி

6.4 செய்தி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 6.4 – செய்தி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - seithi

9th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் தி.ஜானகிராமன்
ஊர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி
காலம் 28.02.1921 – 18.11.1982
பணி பள்ளி ஆசிரியர், வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளர்
படைப்பு மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள், யாதும் ஊரே, பாயாசம்
சிறப்பு சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகப்பு சாகித்திய அகாதெமி விது பெற்றது

நூல்வெளி

 • தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
 • உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
 • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
 • நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
 • “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.
 • தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
 • செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்சா என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த  இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாக பொருள் கொடுக்கிறது என்பதை இக்கருத்தை உணர்த்துகிறது
 • தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மெளனி, தஞ்சை பிரகாஷ், தி.ஜானிகிராமன், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர் கவிராயர் ஆகியோர்

பாடநூல் மதிப்பீட்டு வினா

நெடு வினா

இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதைச் செய்திக் கதையின் விளக்குக

முன்னுரை:-

செய்தி என்னும் சிறுகதையின் ஆசிரியனர் தி.ஜானகிராமன். இக்கதை “சிவப்பு ரிக்சா என்ற சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லாமல் என்பதை இக்கதையில் காண்போம்.

வித்துவான்:-

இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அத்தகைய இசைக்கு காரணம் இசைக் கருவிகள் தமிழக இசையில் தன் முத்திரை பதித்தது நாதஸ்வரம். இதில் பல இராகங்களை கொண்டு வித்துவான் வாசித்தார். அத நிகழ்ச்சியில் பிலிப் போல்ஸ்கா என்ற வித்துவானும் வந்திருந்தார்.

இசை மயக்கம்:-

நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கத் தொடங்கினார். நாதஸ்வர இசை இனிக்க ஆரம்பித்தது. போஸ்கோ சிரித்தபடியே தன்னையே இழந்து இரசிக்கின்றார். இசை வெள்ளத்தில் மிதக்கின்றார். வெளிநாட்டவர் தமிழக இசைக்கு மெய் மறக்கின்றனர். வித்துவானின் சாமாராகம் அனைவரையும் மயங்கச் செய்தது. ஆடவும் செய்தது.

செய்தி:-

வித்வானிடம் சாந்தமுலேகாவை 5, 6 முறை வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தார். இதில் ஒரு செய்தி இருப்பதாகவும். ஏதோ ஒரு உலகத்தில் இருந்து வந்த செய்தி கேட்கிறது. நான் அதில் மூழ்கி விட்டேன் என்றார் போஸ்கா. எனக்கு அனுப்பிய செய்தி, உலகத்திற்கே அனுப்பிய செய்தி, அது தமிழ் இசையின் செய்தி. வேறு எந்த சங்கீதமும் இதனை கொடுக்கவும் இல்லை. அதனை நான் வாங்கிக் கொண்டேன்.

முடிவுரை:-

போஸ்கோவின் செயல்பாடுகள் இசைக்கு நாடு, மொழி, மதம் என எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

கற்பவை கற்றபின்

1. உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்துச் சொற்போர் நிகழ்த்துக

மாணவன் – 1 இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இசையில்லாத வாழ்க்கை சுவையில்லாமல் போய்விடும் சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறந்தவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை தாலாட்டாகவும் ஒப்பாரியாகவும் இசை நிலைபெற்றுள்ளது. இசைக்கருவிகள் நாட்டுக்கு நாடு மாறுபடுமே தவிர ‘இசை’ ஒலிப்பு மாறுபடாது. மன அமைதி பெற் உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஒரே மருந்த இசையே!
மாணவன் – 2 ஐ.நா. சபையில் நம் ‘இசைக்குயில்’ எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் இசைக்கச்சேரி நடத்தினார். அது எதற்காக, உலகமே அமைதி பெறத்தான் போரில் இசை மீட்டி போரையே நிறுத்தி அமைதி பெறச் செய்ததும் இசையேதான்.

1. பாடப்குதியில் இடம் பெற்றுள்ள உங்களுக்குப் பிடித்த செய்யுள் பகுதிகளை வகுப்பில் இசையுடன் பாடி மகிழ்க.

சீவகசிந்தாமணி

சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேல்லார்
செல்வமே போல்தலை நிறுவித்  தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

முத்தொள்ளாயிரம்

அள்ளல் பழனது அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு

கூடுதல் வினாக்கள் 

குறு வினா

1. தஞ்சாவூர், தமிழுக்கு அளித்த கொடையாளர்கள் யாவர்?

 • உ.வே. சாமிநாதர்
 • மெளனி
 • தஞ்சை பிரகாஷ்
 • தி.ஜானிகிராமன்
 • தஞ்சை இராமையா தாஸ்
 • தஞ்சாவூர் கவிராயர்

2. சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் யாவர்?

 • 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
 • 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
 • 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
 • 1996 -அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
 • 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
 • 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
 • 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.

3. தி.ஜானகிராமன் பயண அனுபவங்களை குறிப்பிடுக

 • தி.ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயன அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசிமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967-ல் நூலாக வெளியிடப்பெற்றது.
 • ரோம், செக்கோஸ்லோவியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974-ல் நூலாக வெளியிட்டார்.
 • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
 • இவரது மற்றொரு பயணக்கட்டுரை அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment