6.2 இராவண காவியம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 6.2 – இராவண காவியம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் | புலவர் குழந்தை |
பிறப்பு | 01.07.1906 |
பணி | ஆசிரியராகப் பணியைத் தொடங்கி பவானி நகரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். |
படைப்புகள் | இராவண காவியம், அரசியரங்கம், நெருஞ்சிபழம், யாப்பதிகாரம், தொடையதிகாரம், மேலும் 30க்கும் அதிகமான நூல்கள் |
சிறப்பு | தந்தைப் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார். |
சொல்லும் பொருளும்
- மைவனம் – மலைநெல்
- முருகியம் – குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை – பூக்களை உடைய கிளை
- சிறை – இறகு
- சாந்தம் – சந்தனம்
- பூவை- நாகணவாய்ப் பறவை
- பொலம் – அழகு
- கடறு – காடு
- முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
- பொலி – தானியக்குவியல்
- உழை – ஒரு வகை மான்
- கல் – மலை
- முருகு – தேன், மணம், அழகு
- மல்லல்- வளம்
- செறு- வயல்
- கரிக்குருத்து – யானைத்தந்தம்
- போர்- வைக்கோற்போர்
- புரைதப- குற்றமின்றி
- தும்பி- ஒருவகை வண்டு
- துவரை – பவளம்
- மரை – தாமரை மலர்
- விசும்பு – வானம்
- மதியம் – நிலவு
இலக்கணக் குறிப்பு
- இடிகுரல் – உவமைத்தொகை
- பிடிபசி – வேற்றுமைத் தொகை
- பூவையும் குயில்களும், முதிரையும் சாமையும் வரகும் – எண்ணும்மை
- கருமுகில், இன்னுயிர், பைங்கிளி – பண்புத்தொகை
- பெருங்கடல், முதுவெயில், இன்னிளங்குருளை – பண்புத்தொகை
- மன்னிய- பெயரெச்சம்
- வெரீஇ – சொல்லிசை அளபெடை
- கடிகமழ் – உரிச்சொற்றொடர்
- மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை
- எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- மரைமுகம் – உவமைத் தொகை
- அதிர்குரல், வருமலை – வினைத் தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
1. பருகிய = பருகு+இன்+ ய்+அ;
- பருகு – பகுதி
- இன்- இறந்த கால இடைநிலை (ன் கெட்டது விகாரம்)
- ய் -உடம்படுமெய்; அ –பெயரெச்ச விகுதி
2. பூக்கும் = பூ + க் + க் + உம்;
- பூ – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- உம் – வினைமுற்று விகுதி
நூல் வெளி
- இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
- இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
- இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
- தமிழ்க்காண்டத்திலுள்ள பாடல்ங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
- தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
- யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக.
பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும் நிலப்பகுதி …………….
- குறிஞ்சி
- நெய்தல்
- முல்லை
- பாலை
விடை : முல்லை
குறு வினா
1. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.
2. இடிகுரல், பெருங்கடல் இலக்கணக்குறிப்பு தருக?
- இடிகுரல் – உவமைத்தொகை
- பெருங்கடல் – பண்புத்தொகை
சிறு வினா
1. இராவண காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக
எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் கா ட்சி போல் உள்ளது.
2. குறிஞ்சி மணப்பதற்கு நிகழ்வுகளைக் குறிப்பிடுக?
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.
நெடு வினா
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரி.
குறிஞ்சி மணம்:-
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.
பறவைகளின் அச்சம்:-
எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.
தும்பியின் காட்சி:-
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.
கற்பவை கற்றபின்
1. ஐவகை நிலங்களில் உங்கள் மாவட்டம் அமைந்த நிலவகைப் பற்றியும் அதன் கவின்மிகு காட்சியையும் கட்டுரையாக்குக
- எங்கள் ஊர் – வெங்கடேஸ்வரபுரம் (தென்காசி)
- அமைந்த நிலவகை – மருதம்
முன்னுரை
எங்கள் ஊர் வெங்கடேஸ்வரபுரம். எங்கள் ஊரைச் சுற்றி வயல்கள், இருப்பதால் எங்கள் ஊர் அமைந்த நிலவகை மருதம் ஆகும்.
- முல்லை – வயலும் வயல் சார்ந்த பகுதியாகும்
கவின்மிகு காட்சிகள்
- சிற்றாறு ஓடும் நிலப்பகுதி வெங்கடேஸ்வரபுரம்
- ஊருக்குள் நுழையும் முன்பே வயல்களில் தலைசாய்ந்த முற்றிய நெற்கதிர்கள் தலை குனிந்து வரவேற்கும் வரவேற்பாளர்கள் போல நிற்கின்றன.
- விழாவில் சிரித்த முகத்துடன் அன்போடு வரவேற்க நிற்கும் மகளிர் போன்று சாலை எங்கும் மரங்கள்.
- மண்மணம் மணக்கும் மஞ்சள் மங்கலமாக நிற்கும் வயல்களில்.
சிறப்புகள்
- சோப்பு தயாரிக்கும் தொழில், குளர்பானங்கள் தயாரிக்கும் தொழில் ஆகியன புகழ்பெற்றது.
- சனிக்கிழமை நடைபெறும் வார சந்தை மிகவும் புகழ் பெற்றது.
முடிவுரை
அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் ஈர நெஞ்சம் கொண்டது ஈராேடு. இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த புண்ணிய பூமி எங்கள் ஊர்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இராவண காவியத்தின் பாட்டுத்தலைவன் __________
- இராமன்
- இராவணன்
- இலக்குவன்
- அனுமன்
விடை : இராவணன்
2. மான் __________ நிலத்திற்குரிய கருப்பொருள்
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
விடை : முல்லை
3. தந்தைப் பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளுக்கு 30நாட்களுக்குள் உரை எழுதியவர் __________
- புலவர் குழந்தை
- பாரதியார்
- மருதகாசி
- பிச்சமூர்த்தி
விடை : புலவர் குழந்தை
4. சிறுவர்கள் விளையாடிய குளத்தில் பூத்திருந்தவை ……………….
- காஞ்சி
- வஞ்சி
- தாமரை
- குறிஞ்சி
விடை : தாமரை
5. நாயின் இளமைப் பெயர் ……………..
- குருளை
- பிள்ளை
- கன்று
- குட்டி
விடை : குட்டி
6. இராவண காவியம் குறிஞ்சி நிலப் பாடலலில் இடம் பெறும் பறவைகள் ……………
- கிளி, மயில்
- கோழி, வாத்து
- குயில், புறா
- நாரை, கொக்கு
விடை : கிளி, மயில்
7. முல்லை நில மக்கள் …………..
- குறவர்
- உழவர்
- ஆயர்
- பரதவர்
விடை : ஆயர்
8. நெய்தல் நிலத்தவர் ………………..
- குறவர்
- உழவர்
- ஆயர்
- பரதவர்
விடை : பரதவர்
9. முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறும் பாயும் – இதில் தேன் என்னும் பொருள் தரும் சொல் யாது?
- முல்லை
- அம்புற
- பாயும்
- முருகு
விடை : பரதவர்
10. தேன், மணம், அழகு என்னும் பொருள் தரும் சொல் …………..
- முல்லை
- அம்புற
- முருகு
- பாயும்
விடை : முருகு
11. முசிபட ஒழுகும் தூய
முறையினை அறிவார் போல – இத்தொடரில் இடம் பெறும் நயம்
- எதுகை
- மோனை
- இயைபு
- முரன்
விடை : மோனை
12. கரிக்குருத்து என்னும் சொல்லின் பொருள் ……………..
- கரிக்கோல்
- பனைக்குருத்து
- தென்னங்குருத்து
- யானைத்தந்தம்
விடை : யானைத்தந்தம்
13. போரடிக்கும் குரல் கேட்டு அஞ்சி ஓடுவது ……………..
- மயில்
- செந்நாய்
- உழைமான்
- கலைமான்
விடை : உழைமான்
14. குருளைக்குத் தான் துன்புற்று தன்னுடைய நிழலைத் தந்து நின்றது ……….
- மயில்
- செந்நாய்
- உழைமான்
- கலைமான்
விடை : செந்நாய்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இராமயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட __________ முதன்மை நாயகனாக கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம்
விடை : இராவணன்
2. 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்காப்பியம் __________
விடை : இராவண காவியம்
3. ஐவகை நிலங்கள் பற்றி இடம்பெறும் இராவண காவியக்காண்டம் __________
விடை : தமிழகக்காண்டம்
4. அலையினைத் தடவி மணலிடை உலவி, காற்றிலே தன் சிறகினை உலர்த்துவது __________
விடை : தும்பி
5. தந்தைப் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் __________
விடை : புலவர் குழந்தை
பாெருத்துக
1. மைவனம் | அ. நாகணவாய்ப்பறவை |
2. சிறை | ஆ. மலை நெல் |
3. பூவை | இ. இறகு |
4. பொலம் | ஈ. அழகு |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ, 4 – ஈ |
பாெருத்துக
1. துவரை | அ. வானம் |
2. மரை | ஆ. தாமரை மலர் |
3. விசும்பு | இ. நிலவு |
4. மதியம் | ஈ. பவளம் |
விடை : 1 – ஈ, 2 – ஆ, 3 – அ, 4 – இ |
பாெருத்துக
1. குறிஞ்சி | அ. தாமரை |
2. முல்லை | ஆ. மயில் |
3. பாலை | இ. மான் |
4. மருதம் | ஈ. பருந்து |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ |
குறு வினா
1. முக்குழல், ஐவகை நிலங்கள் – தொகை விளக்கம் கூறுக
- முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில்
- ஐவகை நிலங்கள் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
2. முல்லை நில மக்கள் கதிரடிக்கும் ஓசை கேட்டு அஞ்சி ஒடியன எவை?
முல்லை நில மக்கள் கதிரடிக்கும் ஓசை கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.
3. இராவண காவியத்தி்ல் நம் செய்யுட் பகுதியில் இடம்பெறும் குறிஞ்சி நிலக் கருப்பொருட்களை எழுதுக.
மலைநெல், குறிஞ்சிப்பறை, கிளி, குரங்கு, காந்தள், சந்தன மரம்
4. இராவண காவியத்தி்ல் நம் செய்யுட் பகுதியில் இடம்பெறும் முல்லை நிலக் கருப்பொருட்களை எழுதுக.
நாகணவாய்ப்பறவை, குயில், ஆயர், தேன், மான், முதிரை, சாமை, கேழ்வரகு, குதிரை வாலி நெல்
5. இராவண காவியத்தி்ல் நம் செய்யுட் பகுதியில் இடம்பெறும் பாலை நிலக் கருப்பொருட்களை எழுதுக.
செந்நாய், மராமலர், பருந்து
6. இராவண காவியத்தில் இடம்பெற்றுள்ள காண்டங்களை எழுதுக
தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம்
7. புலவர் குழந்தை படைப்புகள் எவை?
இராவண காவியம். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…