4.2 ஓ, என் சமகாலத் தாேழர்களே!
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 4.2 – ஓ, என் சமகாலத் தாேழர்களே!. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் | வைரமுத்து |
பிறப்பு | 13.07.1953 |
பெற்றோர் | இராமசாமி தேவர் – அங்கம்மாள் |
முதல் கவிதை | இளநெஞ்சின் ஏக்கம் |
முதல் கவிதை தொகுப்பு | வைகறை மேகங்கள் |
சிறப்பு | கவியரசு, கவிப்பேரரசு பட்டம் பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் புதின நூலுக்குச் சகாகித்திய அகாதெமி விருது பெற்றவர் |
படைப்புகள் | கவிராஜன் கவிதை, தண்ணீர் தேசம், இதுவரை நான், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசிய கீதம் |
இலக்கியங்களில் அறிவியல்
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி – புறநானூறு |
அந்தரத் தார்மய னேஎன ஐயுறம் – சீவக சிந்தாமணி, |
இலக்கணக்குறிப்பு
- பண்பும் அன்பும் – எண்ணும்மை
- இனமும் மொழியும் – எண்ணும்மை
- சொன்னோர் – வினையாலணையும் பெயர்
பகுபத உறுப்பிலக்கணம்
பொருத்துங்கள் = பொருத்து + உம் + கள்
- பொருத்து – பகுதி
- உம் – முன்னிலைப் பன்மை விகுதி
- கள் – விகுதி மேல் விகுதி
நூல் வெளி
- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
- இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாட நூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
பின்வரும் தொடர்களைப் படித்து நான் யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
- இணையம்
- தமிழ்
- கணினி
- ஏவுகணை
விடை : தமிழ்
குறு வினா
கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.
கூட்டுப்புழு தான் பட்டுப்பூச்சியாய் மாறும். அவை கொண்ட பொறுமையும் அடக்கமும் தான்.
சிறு வினா
“ஓ, என் சமகாலத் தோழர்களே” கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
- அறிவியல் வாகனத்தில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்
- கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.
- திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.
- ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.
என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் வைக்கிறார்
கற்பவை கற்றபின்
1. அறிவியல் செய்திகளை வெளிப்படுத்தும் கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக
“பறவையைப் போல பறக்க நினைத்தேன்
விமானம் கிடைத்தது…
நிலவில் கால் வைக்க நினைத்தேன்
ராக்கெட் கிடைத்தது….
வெளிநாட்டு நண்பனைப் பார்க்க நினைத்தேன்
இணையம் கிடைத்தது….
போகுமிடம் தகவலறிய நினைத்தேன்
செல்போன் கிடைத்தது”
– கவிஞர். சா
2. விமானம் ஏவுகணை பேசிக்கொள்ளும் உரையாடல்
விமானம் | நண்பா! நலமா? |
ஏவுகணை | நலம் நண்பா! |
விமானம் | ஏன் சோகமாக இருக்கிறாய்? |
ஏவுகணை | எங்கள் நாயகன் அப்துல் கலாம் அய்யா! இல்லையே! அதனால் தான் |
விமானம் | எனக்கும் கவலை தான். உனக்கு உயிர் கொடுத்த அவர். எல்லா இளைஞர்கள் மனதிலும் வாழ்கிறார் கவலைப்படாதே! |
ஏவுகணை | அப்படியா? |
விமானம் | ஆம்! எனக்கு நேரமாயிற்று. என் விமானி வருகிறார். நான் வருகிறேன். |
3. பாடலில அமைந்துள்ள தாெடைநயங்களை எழுதுக.
கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை”
மோனை நயம்
முதல் எழுத்து ஒன்றி வருவது
- கிளிக்கு – கிழக்கு
எதுகை நயம்
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
- முளைக்கும் – முளைக்கத்
இயைபுத் தொடை
இறுதி சீர் ஒன்றி வருவது
- தூரமில்லை – பாரமில்லை
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. “வலவன் ஏவா வானூத்தி அறிவியல்” சிந்தனையைக் குறிப்பிடும் நூல் _____________
- வைரமுத்து கவிதைகள்
- சீவகசிந்தாமணி
- கலித்தொகை
- புறநானூறு
விடை : புறநானூறு
2. “ஓர் ஏந்திர ஊர்த்தி ஏற்றுமின்” – என்று அறிவியல் சிந்தனையைக் குறிப்பிடும் நூல் _____________
- வைரமுத்து கவிதைகள்
- சீவகசிந்தாமணி
- கலித்தொகை
- புறநானூறு
விடை : சீவகசிந்தாமணி
3. கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலிற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் _____________
- கவிஞர் வைரமுத்து
- பாரதியார்
- தாரா பாரதி
- வண்ணதாசன்
விடை : கவிஞர் வைரமுத்து
5. வைரமுத்து இந்தியாவின் சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருதினை ________ முறை பெற்றார்
- 4
- 3
- 6
- 8
விடை : 6
7. “கூட்டுப்புழுதான் பட்டுபூச்சியாக் கோலம் கொள்ளும் மறவாதீர்” என்று குறிப்பிடும் நூல் எது?
- கவிராஜன் கவிதைகள்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- வைரமுத்து கவிதைகள்
- இதுவரை நான்
விடை : வைரமுத்து கவிதைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. அறவியலும், அறிவியலும் இணைந்து வளர்ந்தது ______________
விடை : அறவியலும், தமிழ்ச் சமூகம்
2. “கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ______________
விடை : 2003
3. “வயல்” என்னும் பொருள் தரும் சொல் ______________
விடை : கழனி
4. அறிவியல் வானத்தில் ஆளும் ______________ நிறுத்த வேண்டும்.
விடை : தமிழை
5. _________________ பட்டுப்பூச்சியாய் ஆக மாறும்
விடை : கூட்டுப்புழு
குறு வினா
1. கணிப்பொறியுள் பொருந்த வேண்டியவை எவையென கவிஞர் வைரமுத்து கூறுவதென்ன?
கரிகாலன் பெருமைகள்
2. எவையெல்லாம் இணைந்து வளர்ந்தது தமிழ்ச்சமூகம்?
அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்தது தமிழ்ச்சமூகம்.
3. தற்காலப் படைப்பாளர்கள் எதனை வலியுறுத்துகின்றன?
அறவியலாேடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றன.
4. உணர்ச்சி தொலைந்த அறிவு எதைப் போன்றது?
உணர்ச்சி தொலைந்த அறிவு எரியும் தீயை இழந்த திரி போன்றது
5. எவை புதியவை?
இனமும் மொழியும் புதியவை
6. எவை பழையவை?
பண்பு, அன்பு பழையவை
7. எதனையெல்லாம் கடவாதீர் என கவிஞர் வைரமுத்து கூறுகின்றார்?
பொறுமை, அடக்கம் ஆகியவற்றை கடவாதீர் என கவிஞர் வைரமுத்து கூறுகின்றார்
8. தமிழை எங்கெல்லாம் ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்?
ஏவுகணைகளில் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும் ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…