1.4 வளரும் செல்வம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 1.4 – வளரும் செல்வம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
தமிழ் எண்கள் அறிவோம்
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
க | உ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧௦ / ௰ |
பாடநூல் வினாக்கள்
குறு வினா
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.
- சாப்ட்வேர் [software] – மென்பொருள்
- ப்ரௌசர் [browser] – உலவி
- க்ராப் [crop] – செதுக்கி
- கர்சர் [cursor] – ஏவி அல்லது சுட்டி
- சைபர்ஸ்பேஸ் [cyberspace] – இணையவெளி
- சர்வர் [server] – வையக விரிவு வலை வழங்கி
- ஃபோல்டர் [Folder] – உறை
- லேப்டாப் [Laptop] – மடிக்கணினி
சிறு வினா
1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளது.
தமிழ் | கிரேக்கம் |
எறிதிரை | எறுதிரான் |
கலன் | கலயுகோய் |
நீர் | நீரியோஸ்/நீரிய |
நாவாய் | நாயு |
தோணி | தோணீஸ் |
2. வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்சொற்களைத் தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக
பிற மொழிச் சொற்கள் | தமிழ்ச் சொற்கள் |
சாப்ட்வேர் | மென்பொருள் |
லேப்டாப் | மடிக்கணினி |
ப்ரெளசர் | உலவி |
சைபர்ஸ்பேஸ் | இணையவெளி |
சர்வர் | வைகய விரிவு வலை |
கற்பவை கற்றபின்
1. நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை அறிந்து எழுதுக.
சொற்பட்டியல் | சொற்பட்டியல் பிறமொழிச் சொற்கள் | நிகரான தமிழ்ச் சொற்கள் |
வகுப்பு, புத்தகம், பிளாக் போர்டு, பேனா, பென்சில், நோட்டு, | ப்ளாக்போர்டு (BLACK BOARD) |
கரும்பலகை |
வகுப்பு | கிளாஸ்ரூம் (Classroom) | வகுப்பறை |
புத்தகம் | புக் (Book) | பாடநூல் |
பேனா | பென் (Pen) | தூவல் |
பென்சில் | ப்பென்சில் (Pencil) | கரிக்கோல் |
நோட்டு | நோட் (Note) | குறிப்பேடு |
ரப்பர் | எரேஸர் (Eraser) | மென்மம் |
2. உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.
அருண் : ஹலோ! நண்பா!
நளன் : ………………………….
அருண் : ஆமாம்! டென் இயர்ஸ் ஆச்சு இல்லையா?
நளன் : ஆமாம். நான் இப்ப மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் பிராஜக்ட் மேனேஜரா
இருக்கேன். நீ?
அரண் : …………………………
நளன் : அந்த காலேஜ்லதான் என் தம்பி பஸ்டு இயர் படிக்கிறான்.
அருண் : …………………………….
நளன் : பை! பை!
விடை:-
அருண் | ஹலோ! நண்பா! |
நளன் | வணக்கம் நண்பா… |
அருண் | உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா? |
நளன் | நளன் : ஆமாம். பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது நான் பன்னாட்ட நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகின்றேன். நீ…. |
அருண் | நான் நந்தவனம் அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகின்றேன். |
நளன் | அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியில் முதலாமாண்ட படிக்கிறான். |
அருண் | மிக்க நன்றி, மீண்டும் சந்திப்போம் |
நளன் | மீண்டும் பார்க்கலாம். |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. தமிழ்மொழி, பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது __________
- உறவு
- மரபு
- இயல்பு
- இயைபு
விடை : மரபு
2. தமிழ்ச்சொல்லாகிய __________________ என்பதே ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது.
- ஓடம்
- இறைக்ஷ
- நாவி
- நாவாய்
விடை : நாவாய்
3. “இலியாத் காப்பியம்” _________________சார்ந்தது
- கி.மு. ஆறாம் நூற்றாண்டைச்
- கி.மு. எட்டாம் நூற்றாண்டைச்
- கி.மு. ஏழாம் நூற்றாண்டைச்
- கி.மு. பத்தாம் நூற்றாண்டைச்
விடை : கி.மு. எட்டாம் நூற்றாண்டைச்
குறு வினா
1. தமிழ்ச் சொற்கள் வழி எதனை அறியமுடியும்?
தமிழ்ச் சொற்கள் வழி தமிழர் நாகரிகத்தையும் வாழ்வையும் அறியமுடியும்.
2. தமிழ்மொழியின் மரபு யாது.
பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது தமிழ்மொழியின் மரபு.
3. சங்க இலக்கியத்தில் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள் கடற்கலன்கள் யாவை?
- நாவாய்
- வங்கம்
- தோணி
- கலம்
4. வெண்பாவின் ஓசையானது எது?
வெண்பாவின் ஓசையானது செப்பலோசை ஆகும்
5. இளிகியா என அழைக்கப்படுவது எது?
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்படுகின்றன.
6. வெண்பா வடிவப் பாடல்களை பிற மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகின்றன. இது கிரேக்கத்திலிருந்து இலத்தீன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் சேப்பிக் ஸ்டேன்சா என இன்று வழங்கப்படுகிறது
7. 1/320, 1/160 ஆகிய எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச் சொற்களை எழுதுக
பெயர் | எண் அளவு |
முந்திரி | 1/320 |
அரைக்காணி | 1/160 |
அரைக்காணி முந்திரி | 3/320 |
காணி | 1/80 |
கால் வீசம் | 1/64 |
அரைமா | 1/40 |
அரை வீசம் | 1/32 |
முக்காணி | 3/80 |
முக்கால் வீசம் | 3/64 |
ஒருமா | 1/20 |
மாகாணி (வீசம்) | 1/16 |
இருமா | 1/10 |
அரைக்கால் | 1/8 |
மூன்றுமா | 3/20 |
மூன்று வீசம் | 3/16 |
நாலுமா | 1/5 |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…