TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.1 – நோயும் மருந்தும்

3.1 நோயும் மருந்தும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.1 – நோயும் மருந்தும்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - noyum marunthum

8th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • தீர்வன – நீங்குபவை
  • திறத்தன – தன்மையுடையன
  • உவசமம் – அடங்கி இருத்தல்
  • கூற்றவா – பிரிவுகளாக
  • நிழல்இகழும் – ஒளிபொருந்திய
  • பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
  • பேர்தற்கு – அகற்றுவதற்கு
  • பிணி – துன்பம்
  • திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
  • ஓர்தல் – நல்லறிவு
  • தெளிவு – நற்காட்சி
  • பிறவார் – பிறக்கமாட்டார்

மனப்பாடப்பகுதி

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே

பாடலின் பொருள்

ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மைபற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

நூல்வெளி

  • நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
  • இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்துச் சருக்கங்களை கொண்டது.
  • சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
  • நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரை சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. உடல் நலம் என்பது ____________ இல்லாமல்  வாழ்தல்  ஆகும்.

  1. அணி
  2. பணி
  3. பிணி
  4. மணி

விடை : பிணி

2. நீலகேசி  கூறும் நோயின்  வகைகள் ____________

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

விடை : மூன்று

3. ‘இவையுண்டார்‘ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. இ + யுண்டொர்
  2. இவ் + உண்டொர்
  3. இவை  + உண்டார்
  4. இவை  + யுண்டொர்

விடை : இவை  + உண்டார்

4. ‘தாம் + இனி’ என்பதை்சேர்த்து எழுத கி்டைக்கும் சொல் ____________

  1. தாம் இனி
  2. தாம்மினி
  3. தாமினி
  4. தாமனி

விடை : தாமினி

குறு வினா

1. நோயின் மூன்று வகைகள் யாவை?

  • மருந்தினால் நீங்கும் நோய்
  • எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை
  • வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

நல்லறிவு, நற்காட்சி, நல்லாெழுக்கம்

சிறு வினா

நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

  • ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.
  • மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
  • எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
  • வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
  • அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.
  • இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.
  • இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

சிந்தனை வினா

துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?

தருமம் செய்தல், கோபத்தை தணித்தல், முயற்சி செய்தல், கல்வி கற்றல், உலக டையை அறிந்து நடத்தல், நல்ல நூல்களைப் படித்தல், பெறாமை படாமல் இருத்தல், பொய்சாட்சி சொல்லாமல் இருத்தல், இனிமையாகப் பேசுதல், பேராசையைத் தவிர்த்தல், நட்புடன் பழகுதல், பெரியோர்களை மதித்தல், ஒழுக்கம் தவறாமல் இருத்தல், நன்றியை மறவாமல் இருத்தல், காலத்தைக் கடைபிடித்தல், களவு செய்யாதிருத்தல், இழிவானதைத் செய்யாதிருத்தல், இரக்கம் கொள்ளுதல், பொய் சொல்லாதிருத்தல், ஆணவம் கொள்ளாதிருத்தல், சுறுசுறுப்புடன் இருத்தல், உடற்பயிற்சி செய்தல், அதிகாலையில் எழுந்திருத்தல் போன்றவை கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் ஆகும்.

கற்பவை கற்றபின்

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களை தொகுத்து எழுதுக.

ஐம்பெருங்காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

ஐஞ்சிறுகாப்பியங்கள்

  • சூளாமணி
  • நீலகேசி
  • உதயணகுமார காவியம்
  • யசோதர காவியம்
  • நாககுமார காவியம்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மக்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவன ___________

  1. நாய்கள்
  2. நோய்கள்
  3. பேய்கள்
  4. மனிதர்கள்

விடை : நோய்கள்

2. உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் ___________ என்றே நம் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டனர்.

  1. நோய்கள்
  2. கவலை
  3. துன்பம்
  4. பொறுமை

விடை : நோய்கள்

3. நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை ___________

  1. இலக்கணங்கள்
  2. படைப்புகள்
  3. முன்னோர்கள்
  4. இலக்கியங்கள்

விடை : இலக்கியங்கள்

4. ஐஞ்சிறு காப்பியங்களுள் ___________ ஒன்று

  1. சிலப்பதிகாரம்
  2. நற்றிணை
  3. நீலகேசி
  4. குறுந்தொகை

விடை : நீலகேசி

5. நீலகேசி ___________ சமயக் கருத்துக்களைக் கூறுகிறது.

  1. இந்து
  2. சமணம்
  3. புத்தம்
  4. கிறித்தவம்

விடை : சமணம்

6. நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக ___________ சருக்கங்களை கொண்டது.

  1. ஏழு
  2. எட்டு
  3. ஒன்பது
  4. பத்து

விடை : பத்து

7. “போலாதும்” என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது ___________ 

  1. போ + தும்
  2. போல் + ஆதும்
  3. பேல் + ஆனதும்
  4. போலா + தும்

விடை : போல் + ஆதும்

8. “உய்ப்பனவும்” என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது ___________ 

  1. உய் + பனவும்
  2. உய்ப் + பனவும்
  3. உய்ப்பன + உம்
  4. உய்ப்பன + அம்

விடை : உய்ப்பன + உம்

9. “கூற்றவா” என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது ___________ 

  1. கூ + அவா
  2. கூற் + அவா
  3. கூற்று + ஆவா
  4. கூற்று + அவா

விடை : கூற்று + அவா

10. “அரும்பிணி” என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது ___________ 

  1. அருமை + பிணி
  2. அரு + பிணி
  3. அரும் + பணி
  4. அருமை + பணி

விடை : அருமை + பிணி

சேர்த்து எழுதுக

  1. அ + பிணி = அப்பிணி
  2. தெளிவு + ஓடு = தெளிவோடு
  3. பிணி + உள் = பிணியுள்
  4. இன்பம் + உற்றே = இன்பமுற்றே
  5. ஐந்து + பெருமை + காப்பியம் = ஐம்பெருங்காப்பியம்

குறு வினா

1. அகற்றுவதற்கு அரியவை என நீலகேசி கூறியது யாது?

அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் என நீலகேசி கூறிகிறது

2. பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் மருந்துகள் எவை?

நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

3. உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவது எது?

உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவது நோய்கள்

4. இலக்கியங்கள் விளக்குவன யாவை?

நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை இலக்கியங்கள் விளக்குகின்றன.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment