TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.4 – வெட்டுக்கிளியும் சருகுமானும்

2.4 வெட்டுக்கிளியும் சருகுமானும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.4 – வெட்டுக்கிளியும் சருகுமானும்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Vettukilium Sarugumanum

8th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர்.
  • அவற்றை யானையாடு பேசுதல் என்னும் தலைப்பில் கீதா தமிழாக்கம் செய்துள்ளார்.

மதிப்பீடு

‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செடி கொடிகள், விலங்குகள் தொடர்பான் கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்றுதான் “வெட்டுக்கிளியும் சருகுமானும்” ஆகும்.

வெட்டுக்கிளியும் சருகுமானும்

குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.

ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. என்ன கூரன், பாரத்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்? அதற்கு சருகுமான், “காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது.

விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளையை எச்சரித்தது. பித்தகண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.

வெட்டுக்கிளியும் பித்தகண்ணும்

கூரனைத் தேடிக்கொண்டு பித்தகண்ணும் ஓடைப்பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப்பார்த்து உறுமியது. “கூரன் இங்கு வந்தாளா?” என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. பித்தக்கண்ணுவைப் பார்த்தால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.

உயிர் பிழைத்த கூரன்

கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்தற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம். அதற்கு ஒரு பாடம் கற்றித்தாக வேண்டும் என்று எண்ணியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்” என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.

முடிவுரை

அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தான் இன்றும் கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.

கற்பவை கற்றபின்

“வெட்டுக்கிளியும் சருகுமானும்” கதையை நாடகமாக நடித்துக் காட்டுக

காட்சி – 1

கதைமாந்தார்கள் : வெட்டுக்கிளி, சருகுமான் என்னும் கூரன், சிறுத்தை (பித்தக்கண்ணு), மலையின் காட்சி, அருவி விழும் ஓசை, நீரோடையின் சலசல சத்தம்.

கூரன் காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்போதைக்ககு உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு சிறுத்தை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டம். பல மணி நேரமாக ஓடிட்டே இருக்கேன். சோர்வாக இருக்கிறது.
வெட்டுக்கிளி ம், ம், ம்… மஞ்சள் கண்ணுடைய சிறுத்தை தானே… ம்ம்ம்ம்..
கூரன் இதோ விழுந்து கிடக்கும் மரத்தின் அடியில் ஒளியலாம்.
வெட்டுக்கிளி சரியான முடிவு தான்…
கூரன் வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசிக் கொண்டிருக்காதே! நான் ஒளிந்து கொள்கிறேன். பித்தக்கண்ணு சிறுத்தை உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லி விடாதே! அது என்னைப் பார்த்து விட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கி விடும்.
வெட்டுக்கிளி சரி! சரி! ஒளிந்து கொள்
பித்தக்கண்ணு (உறுமியவாறே… அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நிற்றல்)
சிறுத்தை (வெட்டுக்கிளியை பாரத்தல்)
கூரன் இங்க வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?
(வெட்டுக்கிளி மகிழ்ச்சியுடன் குதித்தல். கூரன் இருக்கும் மரத்தடி பக்கம் செல்லுதல்)
(சிறுத்தை முகர்தல்… பூனையின் துர்நாற்றம் மட்டும் அடித்தல். அந்த இடதத்தை விட்டு அகலுதல்)

காட்சி – 2

கதைமாந்தார்கள் : வெட்டுக்கிளி, சருகமான் என்னும் கூரன்

சருகுமான் முட்டாள் வெட்டுக்கிளியே! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்து பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திங்காமமல் விட்டது அதிசயம் தான்.
வெட்டுக்கிளி மன்னிச்சிக்கோ! மன்னிச்சிக்கோ!
கூரன் இனி இப்படிச் செய்தால் திரும்ப வந்து என்னை என் தங்கத் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்.
(தன் கூர்மையான பாதங்களை கூரண் மண் மீது அழுத்துதல்
(வெட்டுக்கிளி கிளையில் இருந்து கீழே விழப் போதல்)
வெட்டுக்கிளி கூரனின் கூர்ப்பாதங்கள் பட்டுவிடுமோ?
ஐயோ! ஐயோ!
சரி. சரி… குதித்துக் கொண்டே இருப்போம்.

கூடுதல் வினாக்கள்

1. காடர்கள் என்னும் பழங்குடியினர் எங்கு வாழ்ந்து வருகின்றனர்?

தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

2. ஆல்அலப்பு பேசும் பழங்குடியினர் இனம் எது?

காடர்கள்

3. காடர்கள் கதைகளை தொகுத்தவர்கள் எவர்?

மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்

4. கீதா தமிழாக்கம் செய்த நூல் யாது?

யானையாடு பேசுதல்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment