2.3 நிலம் பொது
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.3 – நிலம் பொது. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் ……………… மதிக்கின்றனர்.
- தாயாக
- தந்தையாக
- தெய்வமாக
- தூய்மையாக
விடை : தாயாக
2. ‘இன்னோசை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
- இன் + ஓசை
- இனி + ஓசை
- இனிமை + ஓசை
- இன் + னோசை
விடை : இனிமை + ஓசை
3. “பால் + ஊறும்” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
- பால்ஊறும்
- பாலூறும்
- பால்லூறும்
- பாஊறும்
விடை : பாலூறும்
தொடரில் அமைத்து எழுதுக.
1. வேடிக்கை
- குழந்தை விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
2. உடன்பிறந்தார்
- தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்பு வைத்திருந்தான்.
குறு வினா
1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
- இந்த பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.
- அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.
2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
- இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுப் புனிதமாகும்.
- இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்கு தாயாகும்.
- அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்கு உரியதாகும்.
3. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
- செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
- எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
- தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்
தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.
சிறு வினா
1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
- ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.
- இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
- இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
- எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
- இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.
2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?
- இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
- மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
- மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும்
- இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.
நெடு வினா
தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
- இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்கு புனிதமாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இது எமக்கு தாயாகும்.
- நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது எனபது மிகவும் இயலாத ஒன்றாகும்.
- நாங்கள் பூமியை தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.
- நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.
- இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவு முறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
- இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.
- இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.
- நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.
சிந்தனை வினா
நில வளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
- துணிகள், நெகிழி, மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர் போன்ற வீடு மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மட்கும் தன்மை உடையவை; பல மக்காத தன்மை உடையவை,
- மட்காதப் பொருட்கள் குழிதோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச் சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்துதல்.
- நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால் அவைகளை நிலத்தில் கலக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- கழிவு நீரினைச் சுத்திகரிக்கும்போது திடக் கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நில மாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அவைகளை முறையாகச் செயல்படுத்தினால் நில வளத்தைக் காப்பாற்றலாம்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அமெரிக்காவில் “பூஜேசவுண்ட்” என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் ___________ பழங்குடியினர்.
- மக்காய்
- சுகுவாமிய்
- மங்கோலிய
- செனட்டில்
விடை : சுகுவாமிய்
2. ‘சுகுவாமிஷ்‘ பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ___________
- சிடாட்டல்
- சியாட்டஸ்
- சியாட்டல்
- செங்கிஸ்கான்
விடை : சியாட்டல்
3. ___________ பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.
- நியூயார்கின்
- சிகாகோவின்
- வாஷிங்டனின்
- சிட்னியின்
விடை : வாஷிங்டனின்
4. ___________களில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள்.
- ஏரி
- ஆறு
- குளம்
- ஊற்று
விடை : ஏரி
5. நீங்கள் ___________ நிலத்திலிருந்து தேவையானவற்றை எடுத்துச் செல்லவே வருகின்றீர்கள்.
- நண்பர்கள்
- உறவினர்கள்
- பொறுப்பாளர்கள்
- அயலவர்கள்
விடை : அயலவர்கள்
6. உங்களுடைய கோரப்பசியானது இப்பூமியை கொன்றழித்துப் பாழாக்கி அதை ___________ ஆக்கிவிடும்
- பாலைவனம்
- சோலைவனம்
- பூங்காவனம்
- நந்தவனம்
விடை : பாலைவனம்
7. இக்கட்டுரை ___________ எழுதிய தமிகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
- தாரபாரதி
- கவிப்பாரதி
- சுப்பிரமணியபாரதி
- பக்தவத்சல பாரதி
விடை : பக்தவத்சல பாரதி
8. “ஊசியிலை” என்னும் சொல்லை பிரித்தெழுக் கிடைப்பது ________
- ஊ + இலை
- ஊசி + யிலை
- ஊசி + இலை
- ஊசி + சிலை
விடை : ஊசி + இலை
9. “மறப்பதேயில்லை” என்னும் சொல்லை பிரித்தெழுக் கிடைப்பது ________
- மறப்பதே + யில்லை
- மறப்பதே + இல்லை
- மறப்பது + இல்லை
- மறப்பது + யில்லை
விடை : மறப்பதே + இல்லை
10. “பாழாக்கி” என்னும் சொல்லை பிரித்தெழுக் கிடைப்பது ________
- பாழ் + யாக்கி
- பாழ் + ஆக்கி
- பாழ் + ழாக்கி
- பாழ் + இயாக்கி
விடை : பாழ் + யாக்கி
சேர்த்து எழுதுக
- உணவு + அளிக்கின்றனர் = உணவளிக்கின்றனர்
- நீர் + ஆனது = நீரானது
- முறையில் + இருந்து = முறையிலிருந்து
- காட்சிகள் + எல்லாம் = காட்சிகளெல்லாம்
- புனிதம் + ஆனது = புனிதமானது
சிறு வினா
1. அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் யாவர்?
சுகுவாமிஷ் பழங்குடியினர்.
2. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?
சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் ஆவார்
3. அமெரிக்கக் குடியரத்தலைவருக்கு கடிதம் எழுதியவர் யார்?
சியாட்டல்
4. நிலத்தை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்று சியாட்டல் அமெரிக்கர்களுக்கு கூறுகிறார்?
நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால், எங்கள் நிலத்தை நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள்; இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல என்று கூறுகிறார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…