TN 7th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3.4 – பயணம்

3.4 பயணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.4 – பயணம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - payanam

7th Std Tamil Text Book – Download

ஆசியர் குறிப்பு

ஆசிரியர் பாவண்ணன்
படைப்புகள் வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம்

நூல் வெளி

  • பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.
  • கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

‘பயணம்’ கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

பிறருக்கு உதவி செய்து மகிந்த ஒருவரின் கதைககள் “பயணம்”. இக்கதையைப் “பிரயாணம்” என்னும் நூலில் பாவண்ணன் படைத்துள்ளார்.

மிதிவண்டி ஆசை

20 ஆண்டுகளுக்கு முன் நடந்து நிகழ்ச்சி இது. அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது மாதச் சம்பளத்தில் மிதிவண்டி ஒன்றை வாங்குகின்றார்.  மிதிவண்டியில் செல்வத தான் அவருக்குப் பொழுதுபோக்கு. தெரிந்த இடம் தெரியாத இம் எல்லாவற்றுக்கும் மிதிவண்டிதான். கிருஷ்ணராஜசாகர் அணை. மகாபலிபுர் ஆகிய இடங்களுக்கு எல்லாம் மிதிவண்டியிலே தான் பயணம்.

மிதிவண்டியில் பயணம்

ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை. இரண்டு நாட்கள் மதிவண்டி பயணத்தில் ஹாசனை அடைந்தார். ஒரே நாளில் வெப்பம், மழை, குளிர் மாறி மாறி வந்தது. மழைத் தூரலில் அடுத்த ஊர் சென்றனர். பெரிய இறக்கத்தில் இறங்கும்போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது. காற்றடிக்கும் கருவியும் இல்லை நீண்ட தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை.

குடிசை வீட்டுச் சிறுவன்

ஒரு குடிசை வீடு தெரிந்தது. அதில் ஒரு சிறுவனும் அவனது அம்மாவும் இருந்தனர். பெங்களூரில் இருந்து மிதிவண்டியில் வந்தைச் சொன்னதும் அந்தச் சிறுவனால் நம்ப முடியவில்லை. மனம் இருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் மிதிவண்டியில் செல்லலாம் என்றார். மிதிவண்டி ஆர்வத்தை சிறுவன் சொன்னான். அவனது மாமா வீட்டில் மிதிவண்டி உள்ளது. அவர் இல்லாத போது குரங்கு பெடல் போட்டு ஓட்டுவேன் என்றான். காலைப்பொழுது விடிந்ததும் பக்கத்து ஊரில் உள்ள சந்திரேகெளடா என்பவர் மதிவண்டியைச் சரி செய்து தருகின்றார். சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார்.

பயணம் தொடர்கின்றது

அம்மா அனுமதி பெற்று, அரிசிக்கெர என்ற இடத்தில் தன் மாமா வீட்டில் விடச் சொல்லி சிறுவன் கேட்டான். சிறுவனுடன் பயணம் தொாடர்ந்தது. அவரிடம் இருந்து மிதிவண்டியை வாங்கி சிறிது தூரம் ஓட்டினாள்.  மாமா வீடு நெருங்கும் சிறிது தூரத்திற்கு முன்னதில் இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான். சிறுவனின் மிதிவண்டி ஆர்வத்த்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஓட்டிக் கொண்டு இருக்கும் போது, அவனிடம் சொல்லாம் பேருந்தில் ஏறி செல்கின்றார்.

முடிவுரை

ஆசைபட்டு வாங்கிய மிதிவண்டியைத் தியாகம் செய்து, சிறுவனின் மனம் மகிழச் செய்த அவரின் கருணை உள்ளம் பராட்டுக்குரியது.

“கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லம்”

கற்பவை கற்றபின்

1. நீங்கள் சென்று வந்த பயணம் குறித்து வகுப்றையில் கலந்துரையாடுக.

நாங்கள் மிதிவண்டியில் அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. அம்மன் கோவில் ஒன்றின் அருகில் உணவு உண்டோம். கோயில் வாசலில் மாற்றுத்திறனாளி ஒருவர் உணவின்றி வாடிக்கிடந்ததைப் பார்த்தோம். உணவுப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, மகிழந்து அவருடன் உரையாடினோம். பிறகு பறவைகள் சரணாலயம் வந்தோம். சிறுதானியங்களைப் பறவைகள் உண்ண தட்டில் வைத்தோம். பிறகு விளையாடி விட்டு மாலையில் மிதிவண்டியில் மீண்டும் வீடு திரும்பினோம்.

2. நீங்கள் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் பற்றிப் பேசுக.

வணக்கம், சென்னைக்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தோம். உடைகள், உணவுகள், நொறுக்குத் தீனிகள், மருந்துகள், போர்வை, துண்டு, பற்பசை, சோப்பு ஆகியவற்றைப் பையில் எடுத்த வைத்தோம். முன்பதிவு செய்த பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டோம். அலைபேசி, மின்னேற்றி ஆகியவற்றையும் ஆயத்தப்படுத்தி வைத்தோம்.

கூடுதல் வினாக்கள்

1. பயணம் என்ற சிறுகதை எந்நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.

பயணம் என்ற சிறுகதை பிரயாணம் என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.

2. பாவண்ணன் எழுதிய நூல்களை கூறுக

வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment