TN 7th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.6 – திருக்குறள்

2.6 திருக்குறள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 2.6 – திருக்குறள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - thirukkural

7th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ___________ ஒரு நாட்டின் அரணன்று.

  1. காடு
  2. வயல்
  3. மலை
  4. தெளிந்த நீர்

விடை : வயல்

2. மக்கள் அனைவரும் ___________ ஒத்த இயல்புடையவர்கள்.

  1. பிறப்பால்
  2. நிறத்தால்
  3. குணத்தால்
  4. பணத்தால்

விடை : பிறப்பால்

3. “நாடென்ப” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  1. நான் + என்ப
  2. நா + டென்ப
  3. நாடு + என்ப
  4. நாடு + டென்ப

விடை : நாடு + என்ப

4. “கண் + இல்லது” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

  1. கணிஇல்லது
  2. கணில்லது
  3. கண்ணில்லாது
  4. கண்ணில்லது

விடை : கண்ணில்லது

பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளை எழுது

1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.

2. வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.

3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.

விடை :

வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

குறு வினா

1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

பொருள், கருவி, காலம் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்து ஆராய்ந்து அறிந்து ஒரு செயலை செய்ய வேண்டும்.

2. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

தெளிந்த நீர், நிலம், மலை, நிழல் உடைய காடு – ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு அரணாக அமையும்

3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

மிக்க பசி, ஓயாத நோய், அழிவு செய்யும் பகை சேராமல் நல்வகையில் நடைபெறுவதே நாடு ஆகும். பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு ஆகும்.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக

7th Standard - thirukkural - Padathirku Poruthamana Kurali thervu Seiga

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.

 

7th Standard - thirukkural - Padathirku Poruthamana Kurali thervu Seiga

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச் செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை _________

  1. யானை
  2. புலி
  3. மான்
  4. கொக்கு

விடை : யானை

2. _________ என்பதன் சொல்லின் பொருள் “நோய்”

  1. உலகம்
  2. செயல்
  3. பிணி
  4. காலம்

விடை : நோய்

3. பிறப்பொக்கும் _________ உயிர்க்கும்

  1. அனைத்து
  2. மக்கள்
  3. இயல்பு
  4. எல்லா

விடை : எல்லா

குறு வினா

1. உயர்ந்த பண்புகளை உடையவர் எதனை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்?

உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.

2. கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர் எவ்வாறு மதிக்கப்படுவார்?

தாம் கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.

3. கற்றவர் முன் எவற்றை சொல்லி எதனை கேட்டு அறிந்து காெள்ள வேண்டும்?

கற்றவர் முன் தான் கற்றவற்றை மனத்தில் பதியும்படி சொல்லி, அவர்கள் கற்றவற்றையும் கேட்டு, அறிந்து கொள்ள வேண்டும்.

4. எது பயனில்லாதது என வள்ளூவர் குறிப்பிடுகிறார்?

அரண் எவ்வளவு பெருமையுடையதாக இருந்தாலும், செயல் சிறப்பு இல்லாதவரிடத்தில் அது பயனில்லாதது ஆகும்.

5. மக்கள் அனைவரும்  எவற்றால் ஒத்த இயல்புடையவர்களாக கருதப்படுகிறார்கள்?

மக்கள் அனைவரும்  பிறப்பால் ஒத்த இயல்புடையவர்களாக கருதப்படுகிறார்கள்

6. மக்கள் சிறப்பியல்புகள் எதனால் ஒத்திருப்பதில்லை?

மக்கள் செய்யும் நன்மை, தீமை செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment