2.4 உண்மை ஒளி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 2.4 – உண்மை ஒளி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள்.
- புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்.
- இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.
- அவர்கள் தமது சிந்தனைகளைச் சிறு நிகழ்ச்சிகள், எளிய கதைகள் ஆகியவற்றின் மூலம் விளக்கினர்.
- ஜென் கதைகளுள் ஒன்று இங்குப் படக்கதையாகத் தரப்பட்டுள்ளது.
மதிப்பீடு
‘உண்மை ஒளி’ படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.
முன்னுரை
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள். அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள். அக்கதைகளுள் ஒன்று “உண்மை ஒளி”
குருவும் சீடர்களும்
ஜென்குருவிடம் சிலர் பாடம் கற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளி எது? என்பதைப் பற்றிய பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். பசி, தாகம், தூக்கம் ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் ஒன்றே. இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருமு் என்று குரு சொல்லிக் கொடுத்தார். பிறகு சீடர்களிடம், “இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது” என்று எப்படி அறிவீர்கள்? என்றார்.
உண்மை ஒளி
அதற்கு சீடன் ஒருவன் “தொலைவில் தெரிவது குதிரையா? கழுதையா? என்பதை காணக்கூடிய அளவு வெளிச்சம் நான் அறிவேன்” என்றார். மற்றொருவன் “தொலைவில் தெரிவது ஆலமரமா? அரசமரமா? என்பதை காணக்கூடிய நேரத்தில் உண்மையா விடிந்ததை நான் அறிவேன்” என்றான். இவை எல்லாம் தவறு என்றார் குரு. ஒரு மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது நான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு.
குருவை ஏமாற்றிய திருடன்
ஒருநாள் குரு குதிரையில் அருகில் உள்ள சிற்றூருக்கு புறப்பட்டுச் செல்கின்றார். சாலையோரத்தில் ஒருவன் மயங்கி கிடந்தான். குரு அவனிடம் தண்ணீர் கொடுத்து நீ யார்? என்று கேட்க அவர் பக்கத்து ஊர் செல்ல் வேண்டும். பசியால் மயங்கி விழுந்து விட்டேன் என்றான். குரு இரக்கம் கொண்டு அவனை குதிரை மீது அமரச் செய்தார். குதிரையை அடித்து வேகமாகச் சென்று விட்டான். அவன் திருடன் என்பதையும், தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.
திருடனுக்கு அறிவுரை
குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்கு சென்றார். அங்கு திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தார். குரு யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றார். அதற்கு திருடன் இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கின்றாரோ? என்று மனதில் நினைத்தான். அதற்கு குரு, நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில் மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கும் யாரும் உதவ மாட்டார்கள் என்றார். குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.
முடிவுரை
ஓருவரை ஏமாற்றுவது மற்றவர்களுக்குச் செய்யம் உதவியைக்கூட தடுக்கும் என்பதை இக்கதை மூலம் அறிய முடிகின்றது.
கூடுதல் வினாக்கள்
1. ஜென் கதைகளில் வேறு சிலவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
மனநிறைவு
ஒர் ஊரில் செல்வன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அளவுக் அதிகமாகச் செல்வம் இரந்தது வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர். அனால் அவனால் மனம் நிறைவுடன் வாழ முடியவில்லை. ஒரு நாள் அந்த ஊருக்கு ஜென் துறவி ஒரு வந்தார். அவரிடம் செல்வந்தன் தனக்கு மனநிறைவுக்கு வழி சொல் வேண்டினான். துறவி மூன்று கல்லைச் செல்வந்தனைத் தூக்க செய்து மலை மீது அவனால் ஏற முடியவில்லை என்றான். துறவி ஒரு கல்லைத் தூக்கி போடச் சொன்னார். இதே போலவே ஒவ்வொரு முறையும் கூற ஒவ்வொரு கல்லாய் தூக்கிப் போடச் சொன்னார். இறுதியில் துறவி இப்போது பாரம் குறைந்ததா? என்றார். செல்வந்தரும் ஆம்! என்றார். உன்னிடம் உள்ள அளவில்லாத செல்வம் தான் பாரம். அதனை ஏழைக்களுக்கு கொடுத்துவிட பாரம் குறைந்து உன்மனம் நிறைவடையும் என்றார். அவனும் அப்படியே செய்து மன நிறைவு அடைந்தேன்.
கூடுதல் வினாக்கள்
1. தியானம் செய் என்று பொருள் தரும் ஜப்பானிய மொழிச் சொல் யாது?
தியானம் செய் என்று பொருள் தரும் ஜப்பானிய மொழிச் சொல் ஜென் ஆகும்.
2. உயர்ந்த மனிதப்பண்பு யாது?
உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தவராகக் கருதுவதே உயர்ந்த மனிதப்பண்பு ஆகும்.
3. எது சிறந்த அறமாகும்?
மனிதப்பபண்பைப் பெறுவது சிறந்த அறிவாகும்.
4. அறிவுடைய சான்றோர்கள் எதனை பற்றி கவலைப்படமாட்டார்கள்?
அறிவுடைய சான்றோர்கள் துன்பப்படும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். அவ்வாறு உதவும்போது தமக்கு இழப்பு ஏற்படினும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.
5. ஜென் சிந்தனையாளர்கள் வாழ்ந்த இடம் யாவை?
சீனா, ஜப்பான்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…