2.1 புதுமை விளக்கு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 2.1 – புதுமை விளக்கு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
ஆசிரியர் குறிப்பு
பொய்கையாழ்வார்
|
பூதத்தாழ்வார்
|
சொல்லும் பொருளும்
- வையம் – உலகம்
- புகவா – உணவாக
- வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
- இடர் ஆழி – துன்பக்கடல்
- சொல் மாலை – பாமாலை
- தகளி – அகல்விளக்கு
- ஞானம் – அறிவு
- நாரணன – திருமால்
- ஆர்வம் – விருப்பம்
- கூடர் – ஒளி
பாடலின் பொருள்
பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.
நூல் வெளி
பொய்கையாழ்வார்
|
பூதத்தாழ்வார்
|
பாடலின் பொருள்
ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.
தெரிந்து தெளிவோம்
|
|
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. “இடர் ஆழி நீங்குகவே” – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்_____.
- துன்பம்
- மகிழ்ச்சி
- ஆர்வம்
- இன்பம்
விடை : துன்பம்
2. ‘ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- ஞான + சுடர்
- ஞானச் + சுடர்
- ஞானம் + சுடர்
- ஞானி + சுடர்
விடை : ஞானம் + சுடர்
3. “இன்பு + உருகு” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
- இன்பு உருகு
- இன்பும் உருகு
- இன்புருகு
- இன்பருகு
விடை : இன்புருகு
பொருத்துக.
1. அன்பு | அ. நெய் |
2. ஆர்வம் | ஆ. தகளி |
3. சிந்தை | இ. விளக்கு |
4. ஞானம் | ஈ. இடுதிரி |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
குறு வினா
1. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
பொய்கையாழ்வார் அகல் விளக்காக பூமியை உருவகப்படுத்தியுள்ளார்
பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பை உருவகப்படுத்தியுள்ளார்
2. பொய்கை ஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
பொய்கை ஆழ்வார் தன் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டுகிறார்
சிறு வினா
பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக
ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தை நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகினற் திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.
சிந்தனை வினா
பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?
நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு, ஊக்கம், கல்வி, உயிர், உண்மை ஆகியவற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்
கற்பவை கற்றபின்
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை திரட்டுக
|
|
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பூமியைப் அகல்விளக்காக என உருவகப்படுத்தியவர் ___________
- பொய்கை ஆழ்வார்
- பூதத்தாழ்வார்
- நம்மாழ்வார்
- ஆண்டாள்
விடை : பொய்கை ஆழ்வார்
2. துன்பத்தை பொய்கை ஆழ்வார் ……………. என உருவகப்படுத்தியுள்ளார்.
- அகல்விளக்கு
- கடல்
- பாமாலை
- அன்பு
விடை : கடல்
3. _________ என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
- கம்பராமயணம்
- சிலப்பதிகாரம்
- அந்தாதி
- திருக்குறள்
விடை : அந்தாதி
4. நாலாயிரத் திவ்யப் பிரந்தப் பாடலைத் தொகுத்தவர் …………….
- நாதமுனி
- பொய்கை ஆழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
விடை : நாதமுனி
5. சிவந்த ஒளி வீசும் சக்தரத்தை உடையவர் …………
- பொய்கை ஆழ்வார்
- திருமால்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
விடை : திருமால்
6. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் …………….
- மாமல்லபுரம்
- மதுரை
- பூம்புகார்
- காஞ்சிபுரம்
விடை : மாமல்லபுரம்
குறு வினா
1. எளிதில் கற்றுக்கொள்ளும் பருவம் எது?
இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும்.
2. இளமைப்பருவத்தில் கல்வி மட்டுமல்லாது எதனை கற்றுக்கொள்ள வேண்டும்
இளமைப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
3. முதலாழ்வார்கள் எனப்படுபவர் யார்?
பொழ்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…