1.1 விருந்தோம்பல்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.1 – விருந்தோம்பல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் பெயர் | முன்றுறை அரையனார் |
காலம் | கி.பி. 4 |
படைப்பு | பழமொழி நானூறு |
சமயம் | சமணர் |
சொல்லும் பொருளும்
- மாரி – மழை
- வறந்திருந்த – வறண்டிருந்த
- புகவா – உணவாக
- மடமகள் – இளமகள்
- நல்கினாள் – கொடுத்தாள்
- முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி “ஒன்றுறா முன்றிலோ இல்” என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
நூல் வெளி
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
- இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
- பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
- பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இது நானூறு பாடல்களைக் கொண்டது.
- ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. மரம் வளர்த்தால் _________ பெறலாம்
- மாறி
- மாரி
- காரி
- பாரி
விடை : மாரி
2. ‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- நீரு + உலையில்
- நீர் + இலையில்
- நீர் + உலையில்
- நீரு + இலையில்
விடை : நீர் + உலையில்
3. ‘மாரி + ஒன்று’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
- மாரியொன்று
- மாரிஒன்று
- மாரியின்று
- மாரியன்று
விடை : மாரியொன்று
குறு வினா
1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக
அங்கவை, சங்கவை
2. “பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை” எவ்வாறு?
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
சிந்தனை வினா
தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக
ஈகை, உயிரிரக்கம், நடுவுநிலைமை, பிறருக்கென வாழ்தல், எளிய வாழ்க்கை, தூய அன்பு, உலகப்பொதுமை ஆகியன தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.
கூடுதல் வினாக்கள்
1. வள்ளல் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக
|
|
2. விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
ஓர் ஊரில் சிவனடியார் வழழந்து வந்தார். அவரும் அவரது குடும்பமு் தினமும் யாரேனும் ஒருவருக்காவது விருந்தோம்பல் செய்வது வழக்கம். சிவனடியாரின் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தாலும் அதனைக் காட்டாது. விருந்தினரை உபசரிப்பார். விருந்தினர் உண்ட பின்புதான் அனைவரும் உண்ணுவர். காலையில் இருந்து மாலை வரை உணவு தயாராக இரந்தும் யாரும் வராததால் யாரும் உண்ணாமல் பட்டினி கிடந்தனர். சிவனிடியாரின் குழந்தைகளும் காலையில் இருந்து மாலை வரை பட்டினியாகக் கிடந்தது அழ ஆரம்பித்து விட்டனர். இரவு நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்தார். ஆனால் அவரே தான் யார் வீட்டிலும் உண்ணுவதில்லை. இரவு தங்குவதற்கு இடம் தாருங்கள் அது போதும் என்றார். சிவனடியார் தன் நிலையை உணர்ததி. தாங்கள் உண்டால் தான் என்னுடைய குழந்தைகள் உண்ண முடியும் என்றார். குழந்தைகளுக்காக அந்தப் பெரியவரும் சாப்பிட்டார். பிறகு அனைவரும் உண்டனர்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. “திண்ணை” என்பதை குறிக்கும் சொல் _________
- மாரி
- புகவா
- மடமகள்
- முன்றில்
விடை : முன்றில்
2. “மழை” என பொருள் தரும்
- மாரி
- புகவா
- மடமகள்
- முன்றில்
விடை : மாரி
3. முன்றுறை அரையனார் நூலினை எழுதியவர் _________
- பழமொழி நானூறு
- இருண்ட வீடு
- புரட்சிக்காவியம்
- தமிழ்தேன்
விடை : பழமொழி நானூறு
4. பழமொழி நானூறு _________ நூல்களுள் ஒன்று
- பதினெண்கீழ்கணக்கு
- பதினெண்மேல்கணக்கு
- சிற்றிலக்கியம்
- காப்பியம்
விடை : பதினெண்கீழ்கணக்கு
5. “மாரியொன்று” என்ற சொல்லை பிரித்தெழுத கிடைப்பது __________
- மாரி + ஒன்று
- மாரி + யொன்று
- மாரியொ + ன்று
- மார் + யொன்று
விடை : மாரி + ஒன்று
5. “ஒன்று + ஆகு” என்ற சொல்லை சேர்த்தெழுத கிடைப்பது __________
- ஒன்றாகு
- ஒன்றுஆகு
- ஒன்று ஆகு
- ஒன்று றாகு
விடை : ஒன்றாகு
குறு வினா
1. ஒன்றாகு முன்றிலோ இல் என்னும் பழமொழியின் பொருள் யாது?
ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பதே ஒன்றாகு முன்றிலோ இல் என்னும் பழமொழியின் பொருள் ஆகும்
2. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் யார்?
கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி.
3. முன்றுறை அரையனார்-குறிப்பு எழுதுக
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
- இவர் கி.பி (பொ.ஆ) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
- பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தை சேரந்தவர் என அறிய முடிகிறது
4. பழமொழி நானூறு குறிப்பு எழுதுக
- பழமொழி நானூறு பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களை கொண்டது.
- ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் பழமொழி நானூறு எனப் பெயர் பெற்றது.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…