TN 7th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.2 – அழியாச் செல்வம்

2.2 அழியாச் செல்வம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 2.2 – அழியாச் செல்வம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - aliya selvam

7th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
  • கோட்பா – ஒருவரால் கொள்ளப்படாது
  • வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
  • விச்சை – கல்வி

பாடலின் பொருள்

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.

நூல் வெளி

  • நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  • இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
  • நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
  • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
  • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் __________

  1. வீடு
  2. கல்வி
  3. பொருள்
  4. அணிகலன்

விடை : கல்வி

2. கல்வியைப் போல் __________ செல்வம் வேறில்லை.

  1. விலையில்லாத
  2. கேடில்லாத
  3. உயர்வில்லாத
  4. தவறில்லாத

விடை : விலையில்லாத

3. ‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. வாய்த்து + ஈயீன்
  2. வாய் + தீயின்
  3. வாய்த்து +தீயின்
  4. வாய் + ஈயீன்

விடை : வாய்த்து + ஈயீன்

4. ‘கேடில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. கேடி + இல்லை
  2. கே +இல்லை
  3. கேள்வி + இல்லை
  4. கேடு + இல்லை

விடை : கேடு + இல்லை

5. ‘எவன் + ஒருவன்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்__________

  1. எவன்ஒருவன்
  2. எவன்னொருவன்
  3. எவனொருவன்
  4. ஏன்னொருவன்

விடை : எவனொருவன்

குறு வினா

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

கல்வியைப் பொருள் போல வைத்திருபபினும் அது பிறரால்  கொள்ளபடாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

சிறு வினா

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால்  கொள்ளபடாது.
  • ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
  • மிக்க சிறப்பினை உடைய அரசாலும் கவர முடியாது.
  • ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.
  • மற்றவை செல்வம் ஆகாது.

சிந்தனை வினா

கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?’ – சிந்தித்து எழுதுக.

  • நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
  • திருடர்களால் கல்வியைத் திருட முடியாது.
  • கல்வியை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.

– எனவே பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

கற்பவை கற்றபின்

1. கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.

1. ஒதுவது ஒழியேல் – ஒளவையார்

2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன்

3. உடலின் சிறுமைகண் டொண்பிலாவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் – நன்னெறி

4. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை –திருக்குறளர்

2. கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.

இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னலால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறத்தப்படுகிறான். வெற்றி பெற்ற மன்னர் உனக்கு தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் நீர் பருக வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்காமல் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும் இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளத என்றார். இந்த நீரைக் குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றார். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து அந்த தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கிறேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்த மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

3. பின்வரும் பாடலைப் படித்து மகிழ்க.

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி யென்னும்

உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உழல்கின் றீரே

– தனிப்பாடல் திரட்டு.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் __________

  1. நாலடியார்
  2. திருக்குறள்
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : நாலடியார்

2. நாலடியார் __________ நூல்களுள் ஒன்று

  1. பத்துப்பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண்கீழ்கணக்கு
  4. பதினென்மேல்கணக்கு

விடை : பதினெண்கீழ்கணக்கு

3. ‘நாலடியார்’ __________ என்று அழைக்கப்படுகிறது.

  1. நெடுந்தொகை
  2. கூத்தாராற்றுப்படை
  3. மக்கள்வேதம்
  4. வேளாண்வேதம்

விடை : வேளாண்வேதம்

4. “விச்சை” என்பதன் பொருள் __________

  1. புத்தகம்
  2. பாடம்
  3. பாடல்
  4. கல்வி

விடை : கல்வி

5. திருக்குறளுக்கு இணையாக போற்றப்படும் நூல் __________

  1. திரிகடுகம்
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. நாலடியார்

விடை : நாலடியார்

6. நாலடியார் நூலில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை __________

  1. 400
  2. 200
  3. 300
  4. 100

விடை : 400

குறு வினா

1. தம் குழந்தைகளுக்குச் ஒருவன் சேர்த்து வைக்க வேண்டிய செல்வமென நாலடியார் கூறுவதென்ன?

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது என நாலடியார் கூறுகின்றது.

2. நாலடி நானூறு என குறிக்கப்படும் நூல் எது?

நாலடியார்

3. திருக்குறளும் நாலடியாரும் இணையாக வைத்த கூறப்படும் பாடல் வரிகளை எழுதுக.

“நாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி”

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment