1.5 இலக்கியவகைச் சொற்கள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.5 – இலக்கியவகைச் சொற்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதீப்பிடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________.
- இயற்சொல்
- திரிசொல்
- திசைச்சொல்
- வடசொல்
விடை : இயற்சொல்
2. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________.
- இயற்சொல்
- திரிசொல்
- திசைச்சொல்
- வடசொல்
விடை : திரிசொல்
3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ___________.
- மலையாளம்
- கன்னடம்
- சமஸ்கிருதம்
- தெலுங்கு
விடை : சமஸ்கிருதம்
பொருத்துக.
1. இயற்சொல் | பெற்றம் |
2. திரிசொல் | இரத்தம் |
3. திசைச்சொல் | அழுவம் |
4. வடசொல் | சோறு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
குறு வினா
1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
மண், பொன் என்பன பெயர் இயற்சொல்வகை சொற்கள் ஆகும்
2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
பெயர் இயற்சொல், வினை இயற்சொல், இடை இயற்சொல், உரி இயற்சொல்
3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
குங்குமம், கமலம் என்பன தற்சமம் வகை வடசொற்கள் ஆகும்
சிறு வினா
1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.
3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
பண்டிகை, கேணி என்பன திசைச் சொற்கள் ஆகும்
விளக்கம் :
பண்டிகை, கேணி ஆகிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்த சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்
கூடுதல் வினாக்கள்
1. மொழி என்றால் என்ன?
ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும்.
2. “சொல்” என்பதன் பொருள் தரும் சொற்களை எழுதுக?
மொழி, பதம், கிளவி
3. திசைச்சொற்கள் என்பது என்ன?
வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
7. இலக்கண முறைப்படி சொற்களின் வகைகளை எழுதுக?
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
மொழியை ஆள்வோம்
அறிந்து பயன்படுத்துவோம்.
காலம் மூன்று வகைப்படும். அவை
- இறந்த காலம்
- நிகழ்காலம்
- எதிர்காலம்.
இறந்தகாலம்
நடந்த செயலைக் குறிப்பது இறந்தகாலம்.
(எ.கா.) பார்த்தான், ஆடினாள், பறந்தது.
நிகழ்காலம்
நடக்கின்ற செயலைக் குறிப்பது நிகழ்காலம்.
(எ.கா.) பார்க்கிறான், ஆடுகின்றாள், பறக்கின்றது.
எதிர்காலம்
நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
(எ.கா.) காண்பான், ஆடுவாள், பறக்கும்.
கட்டங்களை நிரப்புக.
வேர்ச்சொல் | இறந்தகாலம் | நிகழ்காலம் | எதிர்காலம் |
நட | நடந்தாள் | நடக்கிறாள் | நடப்பாள் |
எழுது | எழுதினாள் | எழுதுகிறாள் | எழுதுவாள் |
ஓடு | ஓடினாள் | ஓடுகிறாள் | ஓடுவாள் |
சிரி | சிரித்தாள் | சிரிக்கிறாள் | சிரிப்பாள் |
பிடி | பிடித்தாள் | பிடிக்கிறாள் | பிடிப்பாள் |
இறங்கு | இறங்கினாள் | இறங்குகிறாள் | இறங்குவாள் |
பொருத்தமான காலம் அமையுமாறு எழுது
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
- அமுதன் நேற்று விடுக்கு வந்தான்
2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.
- கண்மணி நாளை பாடம் படிப்பாள்
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
- மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
- ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
- நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.
இடமிருந்து வலம்:-
1. அச்சன்
- தந்தை
2. விஞ்ஞானம்
- அறிவியல்
4. பரீட்சை
- தேர்வு
10. லட்சியம்
- இலக்கு
மேலிருந்து கீழ் :-
1. அதிபர்
- தலைவர்
3. ஆச்சரியம்
- வியப்பு
7. ஆரம்பம்
- தொடக்கம்
12. சதம்
- நூறு
வலமிருந்து இடம் :-
6. அபாயம்
- இடர்
8. தேகம்
- உடல்
13. சரித்திரம்
- வரலாறு
14. சத்தம்
- ஒலி
கீழிருந்து மேல் :-
5. ஆதி
- முதல்
9. உத்தரவு
- கட்டளை
11. தினம்
- நாள்
15. சந்தோசம்
- மகிழ்ச்சி
குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களால் கட்டத்தை நிரப்புக.
1. முக்கனிகளுள் ஒன்று.
- மா
2. கதிரவன் மறையும் நேரம்.
- மாலை
3. பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வு.
- மாநாடு
4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் காலஅளவு.
- மாத்திரை
5. அளவில் பெரிய நகரம்.
- மாநகரம்
நிற்க அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்
- கலங்கரை விளக்கம் – Light house
- துறைமுகம் – Harbour
- பெருங்கடல் – Ocean
- புயல் – Storm
- கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
- மாலுமி – Sailor
- கடல்வாழ் உயிரினம் – Marine creature
- நங்கூரம் – Anchor
- நீர்மூழ்கிக்கப்பல் – Submarine
- கப்பல்தளம் – Shipyard
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…