TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.2 – பாஞ்சை வளம்

3.2 பாஞ்சை வளம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.2 – பாஞ்சை வளம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - paanjai valam

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

தொகுப்பாசிரியர் நா.வானமாமலை
நூல் வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
காலம் 1917 – 1980
ஆர்வம் நாட்டுப்புறப்பாடல்கள், பழமொழிகள் சேகரித்து தொகுப்பு நூல் வெளியீடு
ஊர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி
படைப்புகள் தமிழர் வரலாறும் பண்பாடும், தமிழர் நாட்டுப் பாடல்கள், உயிரின் தோற்றம், முத்துபட்டன் கதை முதலியன

சொல்லும் பொருளும்

  • சூரன் – வீரன்
  • வாரணம் – யானை
  • பொக்கிஷம் – செல்வம்
  • பரி – குதிரை
  • சாஸ்தி – மிகுதி
  • சிங்காரம் – அழகு
  • விஸ்தாரம் – பெரும்பரப்பு
  • கமுகு – பாக்கு

பாடலின் பொருள்

குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன்.

அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள். அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

வீடுகள்தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்.

அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும். அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.

புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும். தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும்.

சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும் அன்பு வளரும் நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன்.

வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.

சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.

நூல் வெளி

  • கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  • நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஊர்வலத்தின் முன்னால் ………………. அசைந்து வந்தது.

  1. தோரணம்
  2. வானரம்
  3. வாரணம்
  4. சந்தனம்

விடை : வாரணம்

2. பாஞ்சாலங்குறிச்சியில் ………………. நாயை விரட்டிடும்,

  1. முயல்
  2. நரி
  3. பரி
  4. புலி

விடை : முயல்

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ……………….. 

  1. மெத்தை விரிக்கப்பட்ட வீடு
  2. படுக்கையறை உள்ள வீடு
  3. மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
  4. மாடி வீடு

விடை : மாடி வீடு

4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..

  1. பூட்டு + கதவுகள்
  2. பூட்டும் + கதவுகள்
  3. பூட்டின் + கதவுகள்
  4. பூட்டிய + கதவுகள்

விடை : பூட்டும் + கதவுகள்

5. ‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..

  1. தோரணம் + மேடை
  2. தோரண + மேடை
  3. தோரணம் + ஒடை
  4. தோரணம் + ஓடை

விடை : தோரணம் + மேடை

6. “வாசல் + அலங்காரம்” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..

  1. வாசல்அலங்காரம்
  2. வாசலங்காரம்
  3. வாசலலங்காரம்
  4. வாசலிங்காரம்

விடை : வாசலலங்காரம்

பொருத்துக.

1. பொக்கிஷம் அ. அழகு
2. சாஸ்தி ஆ. செல்வம்
3. விஸ்தாரம் இ. மிகுதி
4. சிங்காரம் ஈ. பெரும் பரப்பு
விடை : 1 – அ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

குறு வினா

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும்  பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

சிறு வினா

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள்தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேரத்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தாகவும் இருக்கும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.

  • வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னை பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.
  • பசுவும், புலியும் நீர்நிலையின் ஒரே பக்கம் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
  • மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

சிந்தனை வினா

நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன?

  • மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர்.
  • அஞ்சா நெஞ்சினர்
  • ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராக தன் நாட்டு உரிமைக்கா எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும் மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் புறக்கதைப் பாடல்களில கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலை தொகுத்து நூலாக வெளியிட்டவர் __________

  1. க. சண்முக சுந்தரம்
  2. அன்னகாமு
  3. சண்முகசுந்தரம்
  4. நா.வானமாமலை

விடை :  நா.வானமாமலை

2. குறையில்லா வீரன் __________

  1. ஆங்கிலேயன்
  2. மருதுசகோதரர்கள்
  3. கட்டபொம்மன்
  4. அன்னகாமு

விடை : கட்டபொம்மன்

3. கட்டபொம்மனின் நாடு __________

  1. பாஞ்சாலங்குறிச்சி
  2. மதுரை
  3. செஞ்சி
  4. பாளையங்கோட்டை

விடை : பாஞ்சாலங்குறிச்சி

4. பாஞ்சாலங்குறிச்சியில் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும் இடம் _________

  1. கடைகள்
  2. வீதிகள்
  3. வீடுகள்
  4. சோலைகள்

விடை : வீடுகள்

5. நீர்நிலையின் ஒரே துறையில் நின்ற பால் போன்ற தண்ணீரைக் குடிப்பவை _________

  1. குயில், மயில்
  2. பசு, புலி
  3. யானை, பசு
  4. முயல், நாய்

விடை : பசு, புலி

6. பாஞ்சாலங்குறிச்சியல் தண்ணீருக்கு கூறப்பட்ட உவமை _________

  1. பால்
  2. மணி
  3. அமுதம்
  4. சந்தனம்

விடை : பால்

7. கறந்து வைத்த பாலைக் குடிக்காதது _________

  1. பசு
  2. குயில்
  3. மயில்
  4. காகம்

விடை : காகம்

8. வீரம் மிகுந்த நாடு _________

  1. பாஞ்சாலங்குறிச்சி
  2. மதுரை
  3. செஞ்சி
  4. பாளையங்கோட்டை

விடை : பாஞ்சாலங்குறிச்சி

9. பாஞ்சாலங்குறிச்சியின் நாட்டின் வளத்தை கூறி விளையாடியது _________

  1. பசு
  2. குயில்
  3. காகம்
  4. மயில்

விடை : மயில்

பொருத்துக

1. வாரணம் அ. பாக்கு
2. பரி ஆ. அழகு
3. சிங்காரம் இ. குதிரை
4. கமுகு ஈ. பாக்கு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பாஞ்சை” என்று அழைக்கப்டம் நாடு __________

விடை : பாஞ்சாலக்குறிச்சி

2. தமிழ்நாட்டில் பல வகையான __________ இலக்கியங்கள் வழங்கி வருகின்றன.

விடை : நாட்டுப்புற

3. வரந்தருபவள் __________

விடை : சக்கமாதேவி

IV. வினாக்கள்

1. குயில்கள் எங்கு கூவும்? மயில்கள் எதைக் கூறி விளையாடும்?

  • சோலைகளில் குயில்கள் கூவும்.
  • மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

2. கரந்த பாலைக் காகம் குடிக்காதற்குக் காரணம் யாது?

மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

3. பாஞ்சாலங்குறிச்சியல் வீரம் நிறைந்த விலங்குகள் எவை

  • முயல்
  • பசு

4. வீரபாண்டிய கட்டபொம்ன் கதைப்பாடலில் இடம் பெற்றுள்ள அஃறிணை உயிர்கள் யாவை?

  • யானை
  • குதிரை
  • குயில்கள்
  • மயில்கள்
  • முயல்
  • வேட்டை நாய்
  • பசு
  • புலி
  • காகம்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment