TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.2 – அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 2.2 – அப்படியே நிற்கட்டும் அந்த மரம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - appadiye nirkattum antha maram

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் இராஜமார்த்தாண்டன்
திறன் இதழாளர், கவிதை திறனாய்வாளர்
படைப்புகள் இராஜமார்த்தாண்டன், கொங்குதேர் வாழ்க்கை

சொல்லும் பொருளும்

 • பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
 • துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்
 • தாண்டி – கடந்து
 • பழந்தின்னி – பழம் உண்ணும்
 • பரவி – விரவி
 • வடகோடி – வட எல்லை

நூல் வெளி

 • ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
 • கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
 • “ராஜமார்த்தாண்டன் கவிதைகள்” என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
 • சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து “கொங்கு தேர்வாழ்க்கை” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
 • இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _________

 1. பச்சை இலை
 2. கோலிக்குண்டு
 3. பச்சைக்காய்
 4. செங்காய்

விடை : கோலிக்குண்டு

2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _________

 1. மண் ஒட்டிய பழங்கள்
 2. சூடான பழங்கள்
 3. வேகவைத்த பழங்கள்
 4. சுடப்பட்ட பழங்கள்

விடை : மண் ஒட்டிய பழங்கள்

3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

 1. பெயர + றியா
 2. பெயர் + ரறியா
 3. பெயர் + அறியா
 4. பெயர + அறியா

விடை : பெயர் + அறியா

4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

 1. மன + மில்லை
 2. மனமி + இல்லை
 3.  மனம் + மில்லை
 4. மனம் + இல்லை

விடை : மனம் + இல்லை

5. “நேற்று + இரவு” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________

 1. நேற்றுஇரவு
 2. நேற்றிரவு
 3. நேற்றுரவு
 4. நேற்இரவு

விடை : நேற்றிரவு

குறு வினா

1. நாவல் மரம் எத்தனை தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது?

நாவல் மரம் இரண்டு தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது

2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

 • காக்கை
 • குருவி
 • மைனா
 • பெயரறியாப் பறவைகள்
 • அணில்
 • காற்று

சிறு வினா

நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

 • ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.
 • அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
 • பளபளக்கும் பச்சை இலைகளுடன் கருநீலக்கோலிக்குண்டுகள் போல் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
 • காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று அகியன உதிர்த்து விடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
 • தங்கைகள் தங்கள் அக்காளுக்க்காக கையில் பெட்டியுடன் நாவல் பழம் பொறுக்குகின்றனர்.
 • இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வெளவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
 • அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்.

சிந்தனை வினா

நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

 • பெருங்காற்றினால் நாவல்மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர் மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.
 • குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.
 • அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.

கற்பவை கற்றபின்

1. உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.

பலா மரம்

 • நெடுநெடுனு வளர்ந்த மரம், நேரத்தியான் பலாமரம்.
 • முக்கனியில் இரண்டாம் கனி தரும் மரம்.
 • பெரும்பழம் சுமந்தால் உன்மேனி இளைத்ததோ?
 • பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும்.
 • கொடுக்க கொடுக்க குறையாத அழுத சுரபியான பலாமரம்

2. உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.

 • வேப்ப மரம்
 • ஆல மரம்
 • அரச மரம்
 • வாழை மரம்
 • முருங்கை மரம்
 • தென்னை மரம்
 • தேக்கு மரம்
 • சந்தன மரம்
 • புளிய மரம்
 • புங்க மரம்
 • பனை மரம்
 • பாக்கு மரம்
 • பலாமரம்
 • அத்தி மரம்
 • வாகை மரம்
 • மா மரம்

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சிறந்த கவிதைகளைத் தொகுத்து ___________ என்னும் நூல் படைத்த கவிஞர் ராஜமார்த்தாண்டன்

 1. பிசிராந்தையர்
 2. காடு
 3. ஒடை
 4. கொங்குதேர் வாழ்க்கை

விடை : கொங்குதேர் வாழ்க்கை

2. ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்குத் ______________ப் பரிசு பெற்றவர் ராஜமார்த்தாண்டன்

 1. சாகித்திய அகாதெமி
 2. தமிழ் வளர்ச்சிக் கழக
 3. தமிழ் தொல்லியல் கழக
 4. தமிழாய்வு கழக

விடை : தமிழ் வளர்ச்சிக் கழக

3. நாவல்மரம் ஊரின் ______________ கோடியில் இருந்தது.

 1. தென்
 2. வட
 3. கிழக்கு
 4. மேற்கு

விடை : வட

4. தாத்தா நட்டு வைத்த மரம் ______________

 1. புளியமரம்
 2. அரசமரம்
 3. மாமரம்
 4. நாவல்மரம்

விடை : நாவல்மரம்

5. “ராஜமார்த்தாண்டன்” நடத்திய சிற்றிதழ் ______________

 1. தென் சிட்டு
 2. தமிழ் மாலை
 3. கொல்லிப்பாவை
 4. காஞ்சி

விடை : கொல்லிப்பாவை

6. “செங்காய்” என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது _____________

 1. செம்மை + காய்
 2. செம் + காய்
 3. செங் + காய்
 4. செ + காய்

விடை : செம்மை + காய்

7. இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி _____________

 1. காக்கை கூட்டம்
 2. குருவிக் கூட்டம்
 3. வெளவால் கூட்டம்
 4. மைனாக் கூட்டம்

விடை : வெளவால் கூட்டம்

8. பெருவாழ்வு வாழ்ந்த மரம் _____________

 1. புளிய மரம்
 2. மாமரம்
 3. அரச மரம்
 4. நாவல் மரம்

விடை : நாவல் மரம்

9. குன்றுகளின் நடுவே மாமலை போன்றது _____________

 1. புளிய மரம்
 2. நாவல் மரம்
 3. மாமரம்
 4. அரச மரம்

விடை : நாவல் மரம்

10. நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே ____________

 1. மலைகள்
 2. குன்றுகள்
 3. மரங்கள்
 4. விலங்குகள்

விடை : மரங்கள்

பொருத்துக

1. பரவசம் அ. துக்கம் விசாரித்தல்
2. துஷ்டி கேட்டல் ஆ .விரவி
3. பரவி இ. எல்லை
4. கோடி ஈ. மகிழ்ச்சிப்பெருக்கு
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பிரித்து எழுதுக

 1. கருமை + நீலம் = கருநீலம்
 2. பெயர் + அறியா = பெயரறியா
 3. நேற்று + இரவு = நேற்றிரவு
 4. மனம் + இல்லை = மனமில்லை

குறு வினா

1. நாவல்மரம் தோற்றம் கூறுக

ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.

2. சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்க காரணம் யாது?

அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3. எப்போது நாவில் நீர் ஊறும்?

பளபளக்கும் பச்சை இலைகளுடன் கருநீலக் கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

4. தங்கைகள் யாருக்காக நாவல் பழங்களை பொறுக்குகின்றனர்?

தங்கைககள் தங்கள் அக்காளுக்காகக் கையில் பெட்டியுடன் நாவற்பழங்களை பொறுக்குகின்றன.

5. இரவில் நேரத்தில் நாவல் மரத்தை நோக்கிப் படையெடுத்தது எது? ஏன்?

இரவில் நேரத்தில் நாவல் மரத்தை நோக்கிப் படையெடுத்தது வெளவால் கூட்டங்கள். அவை நாவல்பழத்திலுள்ள பழங்களை தின்ன படை எடுத்தன.

6. ஊர்மக்கள் எதனைப் பார்க்கச் சென்றனர்?

பெருங்காற்றினால் நாவல் மரங்கள் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனை பாரக்க ஊர்மக்கள் சென்றனர்.

7. கவிஞர் மனதில் என்றும் நிற்பது எது?

குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலைபோல் நின்ற நாவல் மரம் கவிஞர் மனதில் என்றும் நிற்கிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment