TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1.3 – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.3 – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - Pechu Mozhiyum Ezhuthu Mozhiyum

7th Std Tamil Text Book – Download

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.

  1. படித்தல்
  2. கேட்டல்
  3. எழுதுதல்
  4. வரைதல்

விடை : கேட்டல்

2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.

  1. பேச்சு
  2. எழுத்து
  3. குரல்
  4. பாட்ட

விடை : எழுத்து

3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________

  1. உருது
  2. இந்தி
  3. தெலுங்கு
  4. ஆங்கிலம்

விடை : தெலுங்கு

4. பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்

  1. இலக்கிய
  2. உலக
  3. நூல்
  4. மொழி

விடை : உலக

சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

விடை : சரி

2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

விடை : சரி

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.

விடை : தவறு

4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

விடை : தவறு

5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

விடை : சரி

ஊடகங்களை வகைப்படுத்துக.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்

எழுத்துமொழிமின்னஞ்சல், செய்தித்தாள், நூல்கள்

பேச்சுமொழிவானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்

குறு வினா

1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?

மொழியின் இரு வடிவங்கள் பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகும்.

2. பேச்சுமொழி என்றால் என்ன?

வாயினால் பேசப்பட்டு உணரப்படுவது பேச்சு மொழி ஆகும்

3. வட்டார மொழி எனப்படுவது யாது?

இடத்திற்கு இடம் பேச்சு மொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

சிறு வினா

1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.

பேச்சுமொழி எழுத்துமொழி
1. பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும்.

எ.கா. நல்லாச் சாப்டான்

எழுத்து மொழியல் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

எ.கா. நன்றாகச்சாப்பிட்டான்

2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம் உணர்ச்சிக் கூறுகள் குறைவு
3. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் உண்டு உடல் மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் இல்லை
4. திருத்தமான மொழி நடையில் அமைகிறது திருத்தமான மொழி நடையில் அமைவதில்லை

2. கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

  • ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றன.
  • வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
  • அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே கிளை மொழி என்பர்
  • கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழி ஆகும்.

சிந்தனை வினா

இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

  • இலக்கியங்கள் காலத்தை காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தோன்றிய காலச் சூழலை காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதி நெறிகளை முன் வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பேசுவதும் கேட்பதும் மொழியின் ______________ ஆகும்.

  1. முதல் நிலை
  2. மூன்றாம் நிலை
  3. இரண்டாம் நிலை
  4. நான்காம் நிலை

விடை : முதல் நிலை

2. வாயினால் பேசப்பட்டு உணரப்படுவது ______________ ஆகும்.

  1. எழுத்து மொழி
  2. பேச்சு மொழி
  3. இலக்கிய மொழி
  4. செய்கை மொழி

விடை : பேச்சு மொழி

4. கண்ணால் கண்டு உணருமாறு வரி வடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது ___________________ ஆகும்.

  1. செய்கை மொழி
  2. எழுத்து மொழி
  3. இலக்கிய மொழி
  4. பேச்சு மொழி

விடை : எழுத்து மொழி

2. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிமே ______________ ஆகும்.

  1. செய்கை மொழி
  2. இலக்கிய மொழி
  3. எழுத்து மொழி
  4. பேச்சு மொழி

விடை : எழுத்து மொழி

3. வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது ______________ ஆகும்.

  1. பேச்சு மொழி
  2. செய்கை மொழி
  3. இலக்கிய மொழி
  4. எழுத்து மொழி

விடை : பேச்சுமொழி

4. எழுதப்படுவதும், படிக்கப்படுவது மொழியின் ______________

  1. முதல் நிலை
  2. இரண்டாம் நிலை
  3. மூன்றாம் நிலை
  4. நான்காம் நிலை

விடை : இரண்டாம் நிலை

5. நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க உதவுவது ______________

  1. பேச்சு மொழி
  2. செய்கை மொழி
  3. இலக்கிய மொழி
  4. எழுத்து மொழி

விடை : எழுத்து மொழி

6. மனிதனின் சிந்தனை காலம் கடந்தம் வாழ்வதற்குக் காரணம் ______________

  1. பேச்சு மொழி
  2. செய்கை மொழி
  3. இலக்கிய மொழி
  4. எழுத்து மொழி

விடை : எழுத்து மொழி

7. மொழியன் உயிர் நாடியாக விளங்குவது ______________

  1. பேச்சு மொழி
  2. எழுத்து மொழி
  3. செய்கை மொழி
  4. இலக்கிய மொழி

விடை : எழுத்து மொழி

8. பேச்சுமொழியில் “குழந்தையை நல்லாக் கவனிங்க” என்று கூறும்போது ‘கவனி’ என்னும் சொல் தரும் பொருள்

  1. பேணுதல்
  2. பாருங்கள்
  3. கவனித்துச்செல்
  4. பாதுகாப்புப் பொருள்

விடை : கவனித்துச்செல்

9. “நான் பறவையைப் பாரத்தேன்” – இத்தொடர் “பறவையப் பார்த்தது யார்? என்ற வினாவாக அமையும் போது, அழுத்தம் கொடுக்க வேண்டிய சொல் எது?

  1. பறவை
  2. பாரத்தது
  3. யார்
  4. நான்

விடை : கவனித்துச்செல்

10. மாறுபாடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் ______________ என்பர்.

  1. செய்கை மொழி
  2. வட்டார மொழி
  3. இலக்கிய மொழி
  4. பேச்சு மொழி

விடை : வட்டார மொழி

11. கிளைமொழிகளுள் பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க

  1. தமிழ்
  2. கன்னடம்
  3. தெலுங்கு
  4. மலையாளர்

விடை : தமிழ்

பொருத்துக

1. தமிழ் அ. கீது
2. கன்னடம் ஆ. நல்லாச் சாப்பிட்டான்
3. வட்டார மொழி இ. இரட்டை வழக்கு
4. பேச்சு வழக்கு ஈ. கிளை மொழி
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. உலக வழக்கு, செய்யுள் வழக்கு பற்றிக் குறிப்பிடுபவர் ______________

விடை : தொல்காப்பியர்

2. எழுத்துமொழியில் பெரும்பாலும் ______________ பேணப்படுகின்றது.

விடை : மொழித்தூய்மை

3. ஒரு மொழி உயிர்ப்போடு வாழ ______________ யும், காலம் கடந்து வாழ்வதற்கு ______________ யும் தேவைப்படுகின்றன.

விடை : பேச்சுமொழி, எழுத்துமொழி

4. எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் என்று பாடியவர் ______________

விடை : பாவேந்தர் பாரதிதாசன்

குறு வினா

1. இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.

2. குழந்தைகளுக்கு தாய்மொழி எவ்வாறு அறிமுகமாகின்றது?

கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.

3. குழந்தைகளுக்கு பிறமொழி எவ்வாறு அறிமுகமாகின்றது?

படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.

4. பேச்சுமொழி, எழுத்துமொழி என்பதனைச் தொல்காப்பியர் எச்சொற்களால் குறிப்பிடுகிறார்?

  • பேச்சுமொழி – உலக வழக்கு
  • எழுத்துமொழி – செய்யுள் வழக்கு

5. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் யாவை?

கன்னடம், தெலுங்கு, மலையாளம்

6. பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரு கூறுகளையும் கொண்ட மாநிலம் எது?

தமிழ் மொழி

7. தமிழ் மொழி எவையெல்லாம் நிறைந்தது?

தமிழ் மொழி பழையும், புதுமையும் நிறைந்தது

8. மொழி என்பது யாது?

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும்.

9. திருத்தமான தமிழை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும்?

திருத்தமான தமிழை ஊடகங்களிலும், இலக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும்.

10. ஊடகங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக?

வானொலி, தொலைக்காட்சி, நாளேடுகள்

11. பேச்சு மொழியின் சிறப்புக்கூறுகள் யாவை?

பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்பு கூறுகள் ஆகும்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment