TN 6th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.4 – நூலகம் நோக்கி…

1.4 நூலகம் நோக்கி…

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 1.4 – நூலகம் நோக்கி…. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Noolagam Nokki

6th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

முன்னுரை

ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். தரைத்தளத்தாேடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

தரைத்தளம்

தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு.

 முதல் தளம்

முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்ப ட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

பிற தளங்கள்

  • இரண்டாம் தளம் – தமிழ் நூல்கள்
  • மூன்றாம் தளம் – கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • நான்காம் தளம் – பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • ஐந்தாம் தளம் – கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாம் தளம் – பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாம் தளம் – வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
  • எட்டாம் தளம் – கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு

முடிவுரை

நூலக நூல்களை வாசிப்பதோடு நிற்காமல், இந்நூல்களை சுவாசிக்கும் அறிஞர்களாக மாற வேண்டும்.

“நூலகம் அறிஞர்களின் ஆன்மாக்கள் உறைவிடம்”

கூடுதல் வினாக்கள் 

1. நூலகத்தில் படித்து உயர்ந்தோர் சிலரது பெயர்களை எழுதுக.

அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்

2. நூலகங்களின் வகைகள் சிலவற்றைக் கூறுக

மாவட்ட நூலகம், கிளை நூலகம் , ஊர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.

3. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நம் தமிழ்நாட்டில் உள்ளது.

4. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?

சீனா

5. இந்திய நூலகவியலின் தந்தை என அழைக்கப்பட காரணம் யாது?

இந்திய நூலகவியலின் தந்தை முனைவர் இரா. அரங்கநாதன்

“நூலக விதிகளை உருவாக்கியதனால் அவர் நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

6. டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment