TN 6th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.3 – கல்விக்கண் திறந்தவர்

1.3 கல்விக்கண் திறந்தவர்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 1.3 – கல்விக்கண் திறந்தவர். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Kalvi kan Thiranthavar

6th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________.

  1. ஆடு மேய்க்க ஆள் இல்லை
  2. ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
  3. வழி தெரியவில்லை
  4. பேருந்து வசதியில்லை

விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பசி + இன்றி
  2. பசி+யின்றி
  3. பசு + இன்றி
  4. பசு + யின்றி

விடை : பசி + இன்றி

3. “காடு+ஆறு” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. காட்டாறு
  2. காடாறு
  3. காட்டுஆறு
  4. காடுஆறு

விடை : காட்டாறு

4. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. படி + அறிவு
  2. படிப்பு + அறிவு
  3. படி + அறிவு
  4. படிப்பு + வறிவு

விடை : படிப்பு + அறிவு

கோடிட்ட இடங்களை நிரப்பு

1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் _________ அறிமுகப்படுத்தினார்

விடை : சீரூடைத் திட்டத்தை

2. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் __________

விடை : தந்தை பெரியார்

சொற்றொடரில் எழுதுக

1. வகுப்பு 

  • அருண் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்

2. உயர்கல்வி 

  • உயர்கல்வி பயில ராமு சென்னைக்கு சென்றான்.

3. சீருடை 

  • பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி பயில பள்ளிக்கு சீருடையில் தான் வரவேண்டும்.

குறு வினா

1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள்,  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை  காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும்.

2. காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?

  • காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை திறக்க ஆணையிட்டார்.
  • மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுனறைபடுத்தினார்.
  • மாணவர்கள் பசியின்றிப் படிக்க மத்திய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

சிறு வினா

காமராசரின் மதிய உணவுத்திட்டம் குறித்து எழுதுக

  • 1955-ம் ஆண்டு மார்ச் 27-ல் சென்னையில் ” சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அம்மாநாட்டில் காமராசர் கூறியது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.
  • பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை. ஏழைப்பயன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுபாடு பெரும்பாடாக உள்ளது.
  • ஒரு வேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு, மாடு மேய்க்கப்போய் தங்கள் எதிர் காலத்தைப் பழகாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம்.
  • அதற்கு, ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். இதற்கு தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூடச் செலவாகும்.
  • நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரிகூட போடலாம் என்று காமராசர் கூறினார்.
  • அதன்படி மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவது என்றும் முதலில் எட்டையபுரத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாரதியார் பிறந்து எட்டையபுரத்தில் 1956-ல் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • 1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.

கூடுதல் வினாக்கள் 

சரியான விடையை தேர்ந்தெடு

1. காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் …………………………….

  1. சென்னை
  2. திருச்சி
  3. மதுரை
  4. கோவை

விடை : மதுரை

2. ………………………… என தந்தை பெரியாரால் காமராசர் பாரட்டப்பட்டார்.

  1. கல்விக்கண் திறந்தவர்
  2. படிக்காத மேதை
  3. பெருந்தலைவர்,
  4. கர்மவீரர்

விடை : கல்விக்கண் திறந்தவர்

3. காமராசரின் சிறப்புப்பெயர் ……………………………..

  1. தமிழ்தென்றல்
  2. நாவலர்
  3. தென்னாட்டு பெர்னாட்ஷா
  4. கருப்புகாந்தி

விடை : கருப்புகாந்தி

4.ஏற்றம் + தாழ்வு” என்னும் சொல்லினை சேர்த்தெழுதக் கிடைப்பது

  1. ஏற்றதாழ்வு
  2. ஏறத்தாழ்வு
  3. ஏற்றத்தாழ்வு
  4. ஏற்தாழ்வு

விடை : சென்னை

5. காமராசர் உள்நாட்டு விமான நிலையம்  …………………………….. அமைந்துள்ளது

  1. சென்னை
  2. திருச்சி
  3. மதுரை
  4. கோவை

விடை : சென்னை

6. நடுவணரசு ……………………………..-ம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது.

  1. 1972
  2. 1974
  3. 1976
  4. 1978

விடை : 1976

6. பெருந்தலைவர்” என்னும் சொல்லினை சேர்த்தெழுதக் கிடைப்பது

  1. பெருந் + தலைவர்.
  2. பெருமை + தலைவர்.
  3. பெரு + தலைவர்.
  4. பெரு + ந்தலைவர்.

விடை : பெருமை + தலைவர்.

குறுவினா

1. காமராசர் – சிறப்பு பெயர்களை எழுதுக

  • படிக்காத மேதை
  • பெருந்தலைவர்
  • கர்மவீரர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப் பங்காளர்
  • தலைவர்களை உருவாக்குபவர்

2. தந்தை பெரியார் காமராஜரை எவ்வாறு பாராட்டியவர் யார்?

தந்தை பெரியார் காமராஜரை கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டியுள்ளார்.

3. பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக காமராசர் பள்ளியில் கொண்டு வந்த திட்டம் என்ன?

பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக காமராசர் பள்ளியில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்தார்.

சிறுவினா

1. காமராசர் செய்த கல்விப்பணிகள் சிலவற்றினை எழுதுக

  • காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
  • மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்விக்கான சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக சீருடைத் திட்டத்தினை கொண்டு வந்தார்.
  • பள்ளிகளின் வசதியைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களை தொடங்கினார்.
  • மாணவர்கள் உயர்கல்விப் பெறப் பொறியில் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை புதிதாக தொடங்கினார்.
  • இவ்வாறு கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். இவையெல்லாம் காமராஜர் ஆற்றிய கல்விப் பணிகள் ஆகும்.

2. தமிழக அரசு காமராசருக்கு செய்துள்ள சிறப்புகளை விவரி?

  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976 பாரத ரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருநகர் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment