2.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 2.2 – நீதியை நிலைநாட்டிய சிலம்பு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. புறாவிற்காகத் தன் உடலையே தந்த மன்னன் _____________
- மனுநீதிச்சோழன்
- பாண்டியன்
- சிபி மன்னன்
- அதியமான்
விடை : சிபி மன்னன்
2. கண்ணகியின் சிலம்பு _____________ ஆல் ஆனது
- முத்து
- மாணிக்கம்
- பவளம்
- மரகதம்
விடை : மாணிக்கம்
3. “அறநெறி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- அறி + நெறி
- அற + நெறி
- அறம் + நெறி
- அறு + நெறி
விடை : அறம் + நெறி
4. “கால் + சிலம்பு” – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____________
- காற்சிலம்பு
- கால்சிலம்பு
- கற்சிலம்பு
- கல்சிலம்பு
விடை : காற்சிலம்பு
5. “தண்டித்தல்” – இச்சொல்லின் பொருள் _____________
- புகழ்தல்
- நடித்தல்
- வழங்குதல்
- ஒறுத்தல்
விடை : ஒறுத்தல்
கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
- அ + ஊர் = அவ்வூர்
- தகுதி + உடைய = தகுதியுடைய
கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
- கள்வனல்லன் = கள்வன் + அல்லன்
- செங்கோல் = செம்மை + கோல்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் யாது?
செய்யாத குற்றத்துக்காக, கண்ணகியின் கணவனான கோவலன் கொல்லப்படுவதே கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பமாகும்.
2. புகார் நகரின் சிறப்புகள் யாவை?
ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவை கன்றைத் தேர்க்காலிலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த நகர் புகார் நகரமாகும்.
3. பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழக்காரணமென்ன?
பிறர் சொல் கேட்டு பெரும்பிழை செய்ததால் பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழ்ந்தது.
சிந்தனை வினாக்கள்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
– இந்தக் குறள் கருத்து யாருக்குப் பொருந்தும்? கண்ணகிக்கா? பாண்டிய மன்னருக்கா? சிந்தித்து விடை தருக.
- இந்தக் குறள் கருத்து பாண்டிய மன்னருக்குப் பொருந்தும்.
- ஏனெனில், பிறர் சொல்லைக் கேட்டு ஆராயமல் கோவலைக் “கள்வன் என்று நினைத்து கொலை செய்ததால் பெரும் பழிக்கு ஆளாகி இறுதியில் தன் உயிரையே மாய்த்துக் கொண்டார்.
கூடுதல் வினாக்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. கோவலனின் மனைவி யார்?
கோவலனின் மனைவி கண்ணகி ஆவாள்.
2. எதற்காக கோவலன் மதுரைக்கு வந்தான்?
பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வருகிறான் கோவலன்.
3. புறாவுக்காக தன் உடலை தந்த மன்னவன் யார்?
புறாவுக்காக தன் உடலையே தந்தன் சிபி மன்னவன் ஆவான்.
4. கண்ணகி கால்சிலம்பின் பரல் எவ்வகையான கற்களால் ஆனது?
கண்ணகி கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது.
5. பாண்டிய மன்னன் இறந்ததன் காரணம் யாது?
தவறாக வழங்கிய தீர்ப்பால் உண்டான பழிச்சொல்லுக்கு அஞ்சி, அரியணையிலிருந்து தரைமீது விழுந்து பாண்டிய மன்னன் இறந்தான்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…