TN 5th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3.4 – அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

3.4 அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 3.4 – அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - Adukuthodar Irataikilavi

5th Std Tamil Text Book – Download

அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

சில சொற்கள் எப்போதும் இரண்டாகவே வரும். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தால் பொருள் தரா. உரையாடலில் கலகல, தடதட, படபட, பளபள என வரும் சொற கலகல என்பதைக் கல எனத் தனியாகப் பிரித்தால் பொருள் இல்லை. அதனால், இம்மாதிரியான சொற்கள் எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வரும். ஆகவே, இவற்றை இரட்டைக்கிளவி என்பர்.

இரட்டை என்பது, இரண்டு. கிளவி என்பது, சொல். இரட்டைக் கிளவி ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, சினக்குறிப்பு போன்ற பலவகைக் குறிப்புகளை உணர்த்தும்.

சில சாெற்கள இரண்டாகேவா மூன்றாகேவா ஏன் நான்காகேவா கூட அடுக்கி வரலாம். ஆனால், அவற்றைத தனித்தனியாகப் பிரித்தாலும் பாெருள தரும். உரையாடலில் வா வா வா, பாம்பு பாம்பு, தீ தீ தீ, போ போ போ, திரும்பத் திரும்ப பாேன்ற சொற்கள வந்துள்ளன. இவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் பாெருள் தரும். இவற்றை அடுக்குத்தாெடர் என்பர்.

வா, வா, வா என மூன்றுமுறை அடுக்கிவரும் சொல்லை வா எனத் தனியே பிரித்தாலும் அஃது ஓரெழுத்து ஒருமொழியாய் வருகையைக் குறிக்கிறது. அடுக்குத்தொடர் அசைநிலை, விரைவு, வெகுளி, அச்சம், உவகை, அவலம், இசைநிறை முதலிய பொருள்களைக் குறித்து வரும்.

இரட்டைக்கிளவி

எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வருவது, இரட்டைக்கிளவி.

அடுக்குத்தொடர்

ஒரு சொல்லே இரண்டு அல்லது அதற்கு மேல்  அடுக்கி வருவது, அடுக்குத்தொடர்.

இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர்
இரட்டைச் சொல்லாக வரும் ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும்
தனித்தனியே பிரித்தால் பொருள் தராது தனித்தனியே பிரித்தாலும் பொருள் தரும்.
இரண்டு முறைக்குமேல் அடுக்கி வராது இரண்டு அல்லது அதற்கு  மேல் அடுக்கி வரும்

கற்பவை கற்றபின்

இரட்டைக்கிளவிகளைப் பயன்படுத்தித் தொடர்கள் எழுதுக.

1. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது

2. கண்ணகி படபடவெனப் பேசிச் சிரித்தான்

3. பாம்பைப் பார்த்ததும் நெஞ்சம் படபடத்தது.

4. என் பேச்சைக் கேட்டதும் அவர் முகம் கடுகடுத்தது.

5. குழந்தை கீழே விழுந்தால் தாய் துடிதுடித்தாள்.

6. அவன் தலைமுடி கருகருவென இருந்தது.

7. குழந்தை குறுகுறுவென நடந்தது.

8. அவள் நெடுநெடுவென வளர்ந்து விட்டாள்.

9. காய்ந்த ஓலை மீது சலசலவென மழை பெய்ததது.

10. காந்தி இறந்த செய்தியைக் கேட்டது மனம் துடிதுடித்தது.

உரைநடையிலுள்ள அடுக்குத்தொடர்களைத் தொகுத்து எழுதுக.

 • வா வா வா
 • பாம்பு பாம்பு
 • தீ தீ தீ
 • போ போ போ
 • திரும்பத் திரும்ப

மதிப்பீடு

சரியான சொல்லைத் தெரிவு செய்

1. அடிபட்ட கால் _________ என வலித்தது

 1. கடகட
 2. விண்விண்
 3. படபட
 4. கணகண

விடை : விண்விண்

2. காலைப்பொழுது _________ வென புலர்ந்தது.

 1. பலபல
 2. தடதட
 3. புலபுல
 4. மளமள

விடை : புலபுல

3. குயில் _________ எனக் கூவியது.

 1. கீச்கீச்
 2. கூகூ
 3. கொக்கொக்
 4. பக்பக்

விடை : கூகூ

4. மணமக்களை _________ என வாழ்த்தினர்

 1. வருக வருக
 2. வாழ்க வாழ்க
 3. வீழ்க வீழ்க
 4. வளர்க வளர்க

விடை : வாழ்க வாழ்க

பொருத்துக

1. கலகலவென விரைவுக்குறிப்பு
2. நறநறவென ஒலிக்குறிப்பு
3. தடதடவென சினக்குறிப்பு
விடை : 1 -ஆ, 2 – இ, 3 – அ

உரைப்பகுதிக்குப் பொருந்துமாறு இரட்டைக்கிளவி/ அடுக்குத்தொடர்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

5th Standard - Adukuthodar Irataikilavi - Irataikilavi Adukuthodarkalai eduthu eluthuga

(தபதப, துள்ளித் துள்ளி, கூட்டங்கூட்டம், படபட, சலசல, சடசட, கருகரு, பளபள, மடமட, தாவித் தாவி, பொத்து பொத்து)

அடர்ந்த காடு. ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்த குரங்குகள், திடீரெனக் குரலெழுப்பியவாறு, ஒவ்வொரு மரமாக ஏறியும்இறங்கியும் கிளைக்குக் கிளை தாவித் தாவிச் சென்றன. அவை எழுப்பிய ஓசையினால், பறவைகள் தத்தம் சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டு பறந்தன. அருகிலிருந்த சிற்றாற்றில், நீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நீர்நிலை தேடிக் கூட்டங்கூட்டமாக வந்த யானைகள், அந்த ஆற்றைக்கண்டு, களிநடனமிட்டன. அருகில் வளர்ந்திருந்த தென்னை மரமொன்றிலிருந்த தேங்காய்கள், பொத்து பொத்து எனக் கீழே விழுந்தன. அந்த ஓசையைக் கேட்டு, மிரண்ட யானைக்கன்று படபடவென ஓட, அருகிலிருந்த மான்கள் அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடின. சூல்கொண்ட மேகங்கள், கருகருவெனத் திரள, பளபளவென மின்னல் மின்னியது. சற்றுநேரத்தில், சடசட வென மழை பெய்ய, குரங்குகள் மரத்தின் மீது மடமடவென ஏறின.

மொழியை ஆள்வோம்

சொல்லக் கேட்டு எழுதுக

 1. விதைத் திருவிழாவிற்கு செல்வோம்.
 2. இயற்கை வேளாண்மை அன்புடன் வரவேற்கிறது.
 3. நீர் வளத்தை பெருக்குவோம்.
 4. மண்ணி் ஊட்டச்சத்து நீர் மேலாண்மை.
 5. ஆர்வலர்களைச் சுண்டியிழுக்கும் அரங்குகள்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. திருவிழா

விடை : எங்கள் ஊரில் கோவில் திருவிழா நடைபெறுகிறது

2. இரசாயன விதை

விடை : இரசாயன விதை மண்ணின் தன்மை கெடுக்கிறது

3. விளம்பரப் பலகை

விடை : விளம்பரப் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

4. வீட்டுத் தோட்டம்

விடை : இந்த காய்கறிகள் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பறிக்கப்பட்டவை

5. பழங்காலம்

விடை : மனிதன் பழங்காலத்தில் இலைதழைகளை ஆடையாக உடுத்தினான்

ஒருபொருள் தரும் பல சொற்களை எழுதுக

1. வயல்

 • செய்
 • கழனி

2. உழவு

 • உழுதல்
 • பயிர்தொழில்

3. மகிழ்ச்சி

 • உவகை
 • சந்தோஷம்

4. வீடு

 • மறுபிறவியின்மை
 • இல்லம்

5. பேசு

 • பேசுதல்
 • திட்டுதல்

கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக

நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பயிர்தொழில் சிறந்ததாகக கருதப்படடது. முற்காலத் தமிழர் தாெழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்; உழுதுண்டு வாழவே விரும்பினார்கள. ‘சீரைத் தேடின் ஏரைத் தேடு‘ என்றார் ஒரு புலவர். ஏர்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகம் காணாப் பிள்ளையும் மழை முகம் காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள். உயர்ந்து ஓங்கிய மலைகளில் மேகம் தவழக் கண்டால் தமிழர் உளளம் தழைககும்; கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும்.

1. பண்டைக்காலத்திலேய சிறந்ததாகக் கருதப்பட்ட தாெழில் எது?

உழவுத்தொழில்

2. முற்காலத் தமிழர் எப்படி வாழ விரும்பினர்?

முற்காலத் தமிழர் உழுதுண்டு வாழ விரும்பினர்.

3. ஏர்த்தாெழில் இனிது நடைபெற எது தேவை?

ஏர்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது.

4. தமிழர் உள்ளம் துள்ளி மகிழக் காரணம் என்ன?

கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும்.

5. மழையுடன் தொடர்புடைய சொற்களை எழுதுக.

மேகம் மின்னல், கார்மேகம்

கீழ்காணும் பாடலைப் படித்து மகிழ்க

நீர் மேலாண்மை ஆத்திசூடி

கலத் தூறிடு

ழ்துளை நீக்கு

ருகரை சமன் செய்

ராறு இணை

ப்புநீர் வடி

ற்றுநீர் பெருக்கு

ரிபொருள் சேமி

ரியைக் காத்தல் செய்

ம்பொறி அழுக்கறு

ன்றாக்கு நீர்நிலை

ங்கிடும் உலகெலாம்

ஒளடதம் நீர்

 

மொழியோடு விளையாடு

உழவுத் தொழிலுடன் தொடர்புடைய பழமொழிகளின் சொற்கள் இடம் மாறியுள்ளன. அவற்றை முறைப்படுத்தி எழுதுக

1. பட்டம், தேடி, ஆடிப், விதை

விடை : ஆடிப்பட்டம் தேடி விதை

2. தேடு, ஏரைத், தேடின், சீரைத்

விடை : சீரைத் தேடின் ஏரைத் தேடு

3. உழுவதை, அகல, விட, உழு, ஆழ

விடை : அகல உழுவதை விட ஆழ உழு

கீழ்க்காணும் பாடலிலுள்ள தொகைச்சொற்களை விரித்து எழுதுக.

இருவினை அறிந்து கொள்வோமே!
முத்தமிழ் கற்றுத் தேர்வோமே!
நாற்றிசை தேடிச் செல்வோமே!
ஐந்திணை சுற்றி வருவோமே!
அறுசுவை உண்டு மகிழ்வோமே!

இருவினை

 • நல்வினை
 • தீவினை

முத்தமிழ்

 • இயல்
 • இசை
 • நாடகம்

நாற்றிசை

 • கிழக்கு
 • மேற்கு
 • தெற்கு
 • வடக்கு

ஐந்திணை

 • குறிஞ்சி
 • முல்லை
 • மருதம்
 • நெய்தல்
 • பாலை

அறுசுவை

 • துவர்ப்பு
 • இனிப்பு
 • புளிப்பு
 • கார்ப்பு
 • கசப்பு
 • உவர்ப்பு

குறிப்புகளைப் படித்துத் ‘தை‘ என முடியும் சொற்களை எழுதுக.

5th Standard - Adukuthodar Irataikilavi - Thai ena mudiyum Sorkalai Eduthu eluthuga

1. மெதுவாக ஊர்ந்து செல்லும் ஓர் உயிரி

விடை : நத்தை

2. பொதி சுமக்கும் விலங்கு

விடை : கழுதை

3. பகலில் கண் தெரியாப் பறவை

விடை : ஆந்தை

4. காய், கனியில் இருக்கும்

விடை : விதை

கீழ்க்காணும் தொடரைப் பல தொடர்களாக மாற்றுக.

1. மணமலர் படம் வரைந்தாள்

 1. மணமலர் படம் வரைந்தாளா?
 2. மணமலரா படம் வரைந்தாள்?
 3. மணமலர் படம் வரை
 4. மணமலர் படம் வரைவாயா?

2. கதிரவன் வீட்டுக்குச் சென்றான்

 1. கதிரவன் வீட்டுக்குச் சென்றானா?
 2. கதிரவன் வீட்டுக்குச் செல்
 3. கதிரவனா வீட்டுக்குச் சென்றான்!
 4. கதிரவன் வீட்டுக்குச் செல்வாயா?
 5. கதிரவன் வீட்டுக்குச் சென்றாயா?

புதிய சொற்களை உருவாக்குக.

1. விளையாட்டுத் திடல்

 • விளை
 • விளையாட்டு
 • திடல்
 • விடல்
 • விடு
 • விடுதி
 • விட்டு விட்டு
 • வில்

2. பல்கலைக்கழகம்

 • பல்
 • கலை
 • கழகம்
 • பழம்
 • கல்
 • கபம்

3. கவிதைத்திரட்டு

 • கவிதை
 • கவி
 • தை
 • திரட்டு
 • திட்டு
 • கட்டு
 • கதை
 • விதை

பாடலைத் தொடர்ந்து பாடி மகிழ்க

விடுகதையாம் விடுகதை
விடை காணும் விடுகதை
உயரமாக இருப்பானாம்
ஒரே இடததில் நிற்பானாம்
இளநீர், தேங்காய் தருவானாம்
ஓலைக்கீற்றும் தருவானாம்
அவன் பெயர் என்ன?
தென்னை மரம் அவன்தானே

விடுகதையாம் விடுகதை
உயரமாக இருப்பானாம்
ஒரே இடததில் நிற்பானாம்
பதநீர், நுங்கு தருவானாம்
அவன் பெயர் என்ன?
பனை மரம் அவன்தானே

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment