TN 5th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.3 – கங்கை கொண்ட சோழபுரம்

2.3 கங்கை கொண்ட சோழபுரம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 2.3 – கங்கை கொண்ட சோழபுரம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - Gangai Konda Cholapuram

5th Std Tamil Text Book – Download

கற்பவை கற்றபின்

கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அக்கோவிலிலுள்ள சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றியும் வகுப்பறையில் கலந்துரையாடுக.

பாலு மதன்! நான் கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்தேன்.
மதன் அப்படியா! மிக்க மகிழ்ச்சி! அங்கு அப்படி என்னவெல்லாம் பார்த்துக் கொஞ்சம் சொல்லேன்.
பாலு கட்டாயமாகச் சொல்கிறேன் கேள்!
மதன் ஊரின் சிறப்பு என்ன?
பாலு முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன் கங்கை வரை சென்று பாலப் பேரரசை வெற்றி கொண்டதன் நினைவாக இவ்வூர் கட்டப்பட்டது. இவ்வூர் வெற்றியின் சின்னமாக விளங்குகிறது.
மதன் ஏதேனும் கோயில் உள்ளதா?
பாலு ஆம், ஒரு சிவன் கோயில் உள்ளது. அது கங்கை கொண்ட சோழீஸ\வரர் கோயில் ஆகும்.
மதன்  கோயிலின் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது.
பாலு இக்கோயில் 560 அடி நீளமும், 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடி உயர்ந்த மேடை மீது அமைக்கப்பட்டு உள்ளது. நடுக் கருவைறையில் இக்கோயில் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளது. முற்றத்தின் முக்கியப் பகுதி கிழமேற்காக 341 அடி நீளமு் 100 அடி அகலமும் அளவு கொண்டது. லிங்கத்தின் உயரம் 180 அடியாகும். கருவரையின் முன் இருபுறம் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. ஒரு நந்தியும் உள்ளது. கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அங்கு சந்திரக் காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது.
மதன்  பாலு! நீ சொல்லும்போது எனக்கும் போய்ப் பார்க்க ஆசையாக உள்ளது. சிற்பங்கள் எதுவும் இருந்ததா?
பாலு ஆமாம்பா, அர்த்தநாரீசுவரர் சிற்பம், பைரவர் சிற்பம், மாலை சூட்டும் சிவன் சிற்பம், நடராசர் சிற்பம், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி போன்றோர் சிற்பங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.
மதன்  அப்படியா! அவ்வளவு சிற்பங்களா இருக்கின்றன. சிலைகள் உள்ளதா?
பாலு ஆமாம் மதன்,  வெண்கலச் சிலைகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒரு கொடி மரமும் உள்ளது. இங்கு சிற்பங்களும், சிலைகளும் அதிகமாகவே உள்ளன.
மதன்  நன்றி பாலு! மறுமுறை நீ சென்றால் என்னையும் உன்னுடன் அழைத்து செல்வாயா?
பாலு கட்டாடமாக அழைத்துச் செல்கிறேன்.

நீங்கள் கண்டுகளித்த சுற்றுலா இடங்களின் சிறப்புகளைப் பட்டியலிடுக.

நான் கண்டுகளித்த சுற்றுலா இடங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில், கொடைக்கானல் போன்றவை ஆகும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரையின் நடுவில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோயிலின் உள்ளே பொற்றாமரைக்குளம் அமைந்து உள்ளது. இக்கோயிலில்  உள்ள நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளும் மிக்கது. இக் கோயிலில் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளது. நான்கு கோபுரங்களுள் பழைமையானது கிழக்கு கோபுரம். உயரமானது. 160.9 அடி உயரம் கொண்ட தெற்கு கோபுரம் மிக உயரமானது. 1511 கதை உருவங்களும் உடையது. இக்கோவில் கோபுரங்களில் பல ஆயிரம் கதை உருவங்கள் உள்ளன.

கொடைக்கானல்

மேற்கு மலைத்தொடர்களின் ஒரு பகுதியாகும். ஏலக்காய் மலைக்கும், பழனி மலைக்கும் இடையில் கொடைக்கானல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோடை வாழ்விடங்களில் ஒன்று கொடைக்கானல். நகரின் நடுவே ஐந்து கி.மீ. சுற்றளவுடைய அழகிய ஏரி உள்ளது. சுற்றுலா வருவோர் படகுகளில் அமர்ந்து ஏரியில் இன்பமாய் பொழுது போக்கலாம். ஏரியின் கரையில் குதிரைச்சவாரி செய்யலாம். மலையின் உச்சியில் குறிஞ்சியாண்டவர் கோயில் உள்ளது. அங்கு வானிலை ஆய்வுக்கூடம் ஒன்றுள்ளது. வெள்ளியருவியும், காணத்தக்கவை ஆகும். தொலைக்காட்சி நிலையமும் அன்னைதெரேசா பல்கலைக்கழகமும் உள்ளது.

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளி

1. முதலாம் இராசேந்திர சோழனை ஏன் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்?

முதலாம் இராசேந்திர சோழன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான். அதன் அடையாளமாகத்தான் அவனைக் கங்கை கொண்டான் என்று அழைக்கிறோம்.

2. சிங்கமுகக் கிணறு – குறிப்பு எழுதுக

கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிங்கமுகக் கிணறு என்பது சிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கும் கிணறு ஆகும்.

3. சோழ கங்கப் பேரேரிக்கு நீர் எங்கிருந்து வருகிறது?

மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவு வரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைக்கின்றன. சோழ கங்கப் பேரேரி இன்று பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

4. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலுள்ள வாயில்களின் பெயர்களைக் கூறுக.

தெற்கு பக்க நுழைவாயில், வடக்குப் பக்க நுழைவாயில்

சிந்தனை வினா

ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் என்ன ஆகும்? கருத்துகளைக் குழுவில் பகிர்ந்து கொள்க. 

ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் அவையனைத்தும் சமவெளியாகிவிடும். மழைக்காலங்களில் மழைநீரைச் சேமித்து வைக்க முடியாத நிலையாகிவிடும். மழைநீர் எல்லாம் வீணாகிப் போய்விடும். ஏரிகளையும் குளங்களையும் நம்பி இருக்கும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் நீரின்றி அழிந்து விடும். விவசாயம் முற்றிலம் பாதிக்கப்படும். மழைக் காலங்களில் வெளியே போக வழியில்லாமல் ஊர்ப்பகுதியிலே தேங்கி பல தொற்று நோய்களை உருவாக்கும் கொசுக்களும், ஈக்களும், பிற உயிர்களும் தோன்றி  மக்களுக்குத் துன்பத்தை தரும். வெயில் காலங்களில் வறட்சி ஏற்பட்டு பஞ்சமும் பசியும் தலை விரித்தாடும். மரஙகளும், செடி கொடிகளும் காய்ந்து போகும். ஏரியிலும் குளத்திலும் இருக்கும் மீன் வகைகள் அழிந்து போகும். பூமியின் வெப்பம் அதிகரிக்கும். மழையின் அளவும் குறையும். பூமியில் உயிரினங்களே இல்லாமல் போய்விடும்.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளி

1. ‘கங்காபுரி’ என்றும் ‘கங்காபுரம்’ என்றும் புலவர் பெருமக்களால் போற்றப்படும் நகரம் எது?

‘கங்காபுரி’ என்றும் ‘கங்காபுரம்’ என்றும் புலவர் பெருமக்களால் போற்றப்படும் நகரம் வெற்றித் திருநகரான கங்கை கொண்ட சோழபுரம் ஆகும்.

2. கங்கை கொண்ட சோழபுரம், ஒட்டக்கூத்தரால் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

‘கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்காக புரிபரந்த கற்பம்’ என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்.

3. சோழ கங்கப் பேரேரி எவ்வாறு அழைக்கப்டுகிறது?

பொன்னேரி

4. பேரேரியின் பயன் யாது?

பேரேரியால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதி பெற்று உழவுத்தொழில் தழைத்தோங்கியது“

4. உலகப் பாரம்பரியச் சின்னமாகக் கங்கை கொண்ட சோழபுரத்தை அறிவித்தது எது?

யுனெஸ்கோ நிறுவனம்

5. கோவிலின் விமானத்தை பற்றி எழுதுக.

விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய வட்ட வடிவக்கல். அது 34 அடி குறுக்களவு கொண்டது. மேலும், இது ஒரே கல்லால் அமைக்கப் பெற்ற விமானம்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment