TN 5th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.2 – தமிழர்களின் வீரக்கலைகள்

2.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 2.2 – தமிழர்களின் வீரக்கலைகள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

கற்பவை கற்றபின்

உங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றிப் பேசுக.

விளையாட்டுகள், ஓரினத்தின் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. பம்பரம், கோலி, கிளித்தட்டு, உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கிட்டிப்புள், காற்றாடி, பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல், பூப்பறித்தல், கரகர வண்டி, நொண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம், சடுகுடு, மட்டைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, எறிபந்து, இறகுப்பபந்து, பூப்பந்து, ஓட்டம், தடைதாண்டி ஓட்டம், மரக்குரங்கு, உள்ளே வெளியே, கல்லா மண்ணா, பச்சைக்குதிரை, சதுரங்கம், ஹாக்கி, தொட்டுப்பிடித்து விளையாடுதல் போன்றவை ஆகும்.

விளையாட்டில் சிறுவர், சிறுமியர், இளையோர், முதியோர் என எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உடல்திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த மன மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணைபுரிகின்றன.

உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகள் எவை? ஏன்?

பம்பரம், கோலி, கிளித்தட்டு, உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கிட்டிப்புள், காற்றாடி, பந்து விளையாட்டு, பூப்பறித்தல், கரகர வண்டி, தாயம், சடுகுடு, மட்டைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, எறிபந்து, இறகுப்பபந்து, பூப்பந்து, ஓட்டம், தடைதாண்டி ஓட்டம், போன்றவை ஆகும்.

உடல்திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணை புரிகின்றன. விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிருந்தலாகும். உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆற்றல்களை வெளியிடவும் எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளவும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவும், பேராட்டாத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது.

விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் எவை? அவற்றைப்பற்றி உங்களுடைய கருத்துகளைக் கூறுக..

கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சறுக்குமரம் ஏறுதல், இசை நாற்காலி, ஓட்டப் போட்டிகள், சடுகுடு, பாட்டிலில் நீர் நிரப்புதல், மட்டைப்பந்து, கைப்பந்து, கோகோ, போட்டி விளையாட்டுகள், பலூன் உடைத்தல், தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், சிலம்பாட்டம், சைக்கிள் போட்டி, மாட்டுவண்டி போட்டி, ஏறுதழுவுதல் போன்றவை ஆகும்.

மக்கள் காலமெல்லாம் ஓடி ஆடி உழைத்து அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றன. அப்படிப்பட்ட மக்களை மகிழ்விக்கவும் மனத்தில் புத்துணர்ச்சியை உண்டாக்க ஏற்படுத்தப்பட்டனவே திருவிழாக்களாகும். இதில் நடத்தப்படும் விளையாட்டுகள் கூடுதலல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. போட்டி மனப்பாண்மையை வளர்க்கிறது. குழுவாகச்ச சேர்ந்து வெற்றி பெறத் தூண்டுகிறது. குழு உணர்வை வளர்க்கிறது. பிரிவு மனப்பான்மையை தளர்த்துகிறது. ஒற்றுமை உணர்வை ஊட்டுகிறது. அச்சத்தையும் கூச்சத்தையும் போக்குகிறது. ஆனந்த்தை வரவழைக்கின்றது. இதனால் மக்கள் உடலிலும், உள்ளத்திலும் உற்சாகம் பிறக்கிறது. விழாக்களில் கட்டாயம் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

மதிப்பீடு

சரியான சொல்லைத் தெரிவு செய்க

1. தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது _________

  1. சிலம்பம்
  2. மற்போர்
  3. மட்டைப்பந்து
  4. நீர் விளையாட்டு

விடை : மட்டைப்பந்து

2. மஞ்சு விரட்டு என்பதைக் குறிக்கும் விளையாட்டு _________

  1. மற்போர்
  2. ஏறுதழுவுதல்
  3. சிலம்பாட்டம்
  4. வில்வித்தை

விடை : ஏறுதழுவுதல்

3. மற்போர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. மற் + போர்
  2. மள் + போர்
  3. மல் + போர்
  4. மறு + போர்

விடை : மறு + போர்

4. தன் + காப்பு இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. தன்காப்பு
  2. தண்காப்பு
  3. தனிகாப்பு
  4. தற்காப்பு

விடை : தற்காப்பு

5. ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை _________

  1. சிலம்பாட்டம்
  2. வில்வித்தை
  3. ஏறுதழுவுதல்
  4. வழுக்கு மரம் ஏறுதல்

விடை : வில்வித்தை

சொற்களைச் சேர்த்து எழுதுக

  • சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம்
  • வீரம் + கலை = வீரக்கலை

சொற்களைப் பிரித்து எழுதுக

  • தனக்கென்று = தனக்கு + என்று
  • கொடைத்திறம் = கொடை + திறம்

பொருத்துக

1. காளை கம்பு
2. சிலம்பம் மூங்கில்
3. சிறுவாரைக்கம்பு திமில்
4. தாளாண்மை உழவு
5. வேளாண்மை முயற்சி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ

வினாக்களுக்கு விடையளி

1. தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக.

தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டு சிலம்பாட்டமும், மற்போரும் ஆகும்.

2. ஏறுதழுவுதல் என்றால் என்ன?

ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும்.

3. சிலம்பாட்டம்- பெயர்க்காரணம் தருக.

சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக்கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் இதற்கு உண்டு.

4. வல்வில் ஓரியின் வில்லாற்றல் சிறப்பைக் கூறுக.

  • கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ‘வல்வில் ஓரி’ வில்லாற்றலில்
    சிறந்து விளங்கியவர்.
  • அவர், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பெரிய  னையொன்று எதிர்ப்பட, அதன்மீது அம்பெய்தினார்.
  • அந்த அம்பானது, அப்பெரிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீர்த்தது என்று புறநானூற்றுப் பாடல்வழி அறிகிறோம்.
  • படைத்திறமும் கொடைத்திறமும் கொண்டு விளங்கியவர் வல்வில் ஓரி.

5. மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது?

படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டே மற்போர். மல் என்பது, வலிமையைக் குறிக்கும். இருவர் கைகோத்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவர் போர் செய்வதே மற்போர்.

சிந்தனை வினாக்கள்

1. சிலம்பாட்டம் தற்காப்புக்கலைகளுள் ஒன்று ஏன்?

பண்டைய காலத்தில், மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்நதுள்ளது. தமது கைகளில் எப்போதும் இருக்கக்கூடிய சிறய ஆயுதங்களானா கம்பு, சிறுகத்தி, மான்கொம்பு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து, தற்காத்து கொள்ள இந்தக் கலையை பயன்படுத்தினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் பேராாட ஆரம்ப காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகம். இதுவே பின்னர் சிலம்பு கலையாக வளர்ச்சி பெற்றது. எனவே தான் சிலம்பாட்டம் தற்காப்பு கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

2. உடலில் உறுதி உடையவரே உலகை ஆளும் உள்ள உறுதி உடையவர் இவ்வரிகளைப் பற்றி உமது கருத்து யாது?

சுவரை வைத்தே சித்திரம் வரைய முடியும் என்பது முதுமொழி. உயிராகிய பறவை உடம்பாகிய கூட்டுக்குள் இருக்க வேண்டுமானால் உடலானது உறுதி இருக்க வேண்டும். இல்லையேல் ஓட்டைக் குடத்தமல் உள்ள நீர் படிப்படியாக வெளியேறிவிடுவது போல உயிர், உடலைவிட்டு விலகும் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும். உடலைப் பேணிக்காத்தல் மட்டுமே நீண்ட நாள் வாழ முடியும்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்” என்பார் திருமூலர். உடல் உறுதியாய் இருந்தால்தான் நாம் மகிழ்வுடன் வாழ முடியும். சிந்திக்கவும் செயல்படவும் இவ்வுலக நலன்கள் அனைத்தையும் பெற்று நீண்ட நாள் வாழவும் உடலைப் பேணுவது அவசியமாகிறது. ஆகவே, உடலில் உறுதி உடையவராக இருந்தால் தான் உலகை ஆளும் உள்ள உறுதியைப் பெற முடியும்.

எதிர்ச்சொல் உருவாக்குக.

5th Standard - tamilargalin veera kalaigal - ethirsol uruvakuga

இன்பம் x துன்பம்

5th Standard - tamilargalin veera kalaigal - ethirsol uruvakuga

இயற்கை x செயற்கை

5th Standard - tamilargalin veera kalaigal - ethirsol uruvakuga

வாழ்தல் x வீழ்தல்

5th Standard - tamilargalin veera kalaigal - ethirsol uruvakuga

இன்சொல் x வன்சொல்

5th Standard - tamilargalin veera kalaigal - ethirsol uruvakuga

குறைந்த x நிறைந்த

5th Standard - tamilargalin veera kalaigal - ethirsol uruvakuga

போற்றும் x தூற்றும்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்க

1. தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது _________ மரபு

  1. கேரளா
  2. தெலுங்கு
  3. கன்னட
  4. தமிழ்

விடை : தமிழ்

2. தமிழர்களின் வீரக்கலைகளுள் ஒன்று _________

  1. கிட்டிப்புள்
  2. பம்பரம்
  3. ஏறுதழுவுதல்
  4. தாயம்

விடை : ஏறுதழுவுதல்

3. ஏறுதழுவுதலுக்கு உகந்தநிலம் _________

  1. நெய்தல்
  2. பாலை
  3. முல்லை
  4. குறிஞ்சி

விடை : முல்லை

4. ஏறுதழுவுதலுக்கு மற்றொரு பெயர் _________

  1. சிலம்பாட்டம்
  2. சிலம்பம்
  3. மற்போர்
  4. மஞ்சுவிரட்டு

விடை : மஞ்சுவிரட்டு

5. சிலம்பு என்பதன் பொருள் _________

  1. ஒலித்தல்
  2. கொம்பு
  3. சுருள்பட்டா
  4. வளரி

விடை : ஒலித்தல்

6. ஏறு என்பதன் பொருள் _________

  1. ஏறுதல்
  2. காளை
  3. எறு
  4. வீரர்

விடை : காளை

7. சிலம்பம் என்பதன் மறுபெயர்

  1. காளை தழுவுதல்
  2. கம்பு வளைத்தல்
  3. கம்பு சுற்றுதல்
  4. காளை ஏறுதல்

விடை : கம்பு சுற்றுதல்

8. மற்போர் என்பதன் மறுபெயர்

  1. சிலம்பம்
  2. வில்வித்தை
  3. மல்யுத்தம்
  4. ஏறுதழுவுதல்

விடை : மல்யுத்தம்

9. மற்போரில் வெள்ளி பெற்றவர்களை ______ என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறான்.

  1. சிறந்தன்
  2. வலியன்
  3. தனித்தவன்
  4. மல்லன்

விடை : மல்லன்

வினாக்களுக்கு விடையளி

1. பண்டைக் காலம் முதல் இன்றுவரை வழக்கில் இருந்து வரும் விளையாட்டுகள் சிலவற்றை எழுதுக

  • வழுக்குமரம்
  • நீர் விளையாட்டு
  • கபடி என்கின்ற சடுகுடு

2. ஏறுதழுவுதல் எப்போது நடத்தப்படுகிறது?

பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நாள்களில் ஏறுதழுவுதல் நடத்தப்படுகிறது.

3. சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் கம்பு எதிலிருந்து செய்யப்படுகிறது?

சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் கம்பு நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய ‘சிறுவாரைக்கம்பு’ என்னும் மூங்கில் இனத்திலிருந்து செய்யப்படுகிறது.

4. சிலம்பக் கலையில் பயன்படுத்தும் ஆயுதங்கள் யாவை?

சிலம்பக் கலையில் மான்கொம்பு, பிச்சுவா கத்தி, சுருள்பட்டா, வளரி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்துவர்.

5. யாரை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்?

நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

6. மற்போரில் வெற்றி பெற்றவர்களை  எப்படி குறிப்பர்?

மற்போரில் வெற்றி பெற்றவர்களை ‘மல்லன்‘ என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. மற்போரில் சிறந்து விளங்கியமையாலேயே மாமல்லன் என்று அக்கால அரசர்கள் போற்றப் பெற்றனர்.

7. காளையை எவ்வாறு அடக்க வேண்டும்?

  • காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது, தமிழர் கொள்கை.
  • கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்பதைத் தமிழர்கள் திடமாக நம்பினர்.
  • காளையின் வாலைப் பிடித்தவன், அதன் காலால் உதைபட்டு, மண்ணிடை வீழ்வான்.
  • ஆதலால், கொம்பை விட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல். வசமாகப் பிடி கிடைத்தால், காளையின் விசை அடங்கும்; வீரம் அடங்கும்; திடமின்றி மண்ணில் சோர்ந்து விழும்.
  • இவ்வாறு காளையை அடக்குதல் வேண்டும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment