TN 5th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.3 – நானும் பறக்கப் போகிறேன்

1.3 நானும் பறக்கப் போகிறேன்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.3 – நானும் பறக்கப் போகிறேன்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - naanum parakka pogiren

5th Std Tamil Text Book – Download

கற்பவை கற்றபின்

1. ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டனர்? நூலகத்தில் தேடிப் படிக்.

வானில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது, ரைட் சகோதரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றதற்கு மூன்று தொழில் நுட்பங்கள் உதவின. முதன் முதலாக, இறக்கை ஊர்த்திப் பறப்பியல் பயிற்சி முறையில் “முன்னூந்தல்” மேலெச்சி”, திசை திருப்பி” எனப்படும் முப்புற உந்தல் கட்டுப்பாடு என்ற நுணுக்கத்ததை ரைட் சகேோதரர்கள் கையாண்டனர்.

ரைட் சகோதரர்கள் இரண்டாவது ஊர்திக்கு முன்னூந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெயிலியங்கும் எரிபொருள் இயந்திரத்தைப் புகுதித்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆல்வில்ரைட், வில்பர்ரைட் இருவரும் Wind  Tunnel ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்து தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய வானாய்வு அருட்காட்சியக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1903 சகோதரர்கள் பறந்த விமானம்.

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் டிசம்பர் 17-ம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள் பறந்து காட்டி, ஊர்தியின் பற்பபியல் திறனை நிருபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன ஆற்றல் கொண்ட 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாக பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அட தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901-ம் ஆண்டு மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிருப்பித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903-ல் ரைட் சகோதரர்களின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது.

மதிப்பிடு

வினாக்களுக்கு விடையளிக்க.

1. தன்னால் பறக்க முடியாததற்கு அமுதா கூறிய காரணம் என்ன?

பறவையை விட அதிக எடையுடன் நான் இருப்பதனால் தன்னால் பறக்க முடியாது அமுதா கூறினாள்.

2. பறப்பதற்கு ஏற்றவகையில் பறவையின் உடலமைப்பு எவ்வாறு உள்ளது?

பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. எடை குறைவாக உள்ளது. பறவைகளின் பின்புற வால்துடுப்பு போல் செயல்பட்டு திசைமாறிப் பறக்க உதவுகிறது. காற்றைக் கிழித்து மேலே பறக்க இறக்கைகளை உதவுகின்றன. இவ்வாறு பறப்பதற்கு ஏற்ற வகையில் பறவையின் உடலமைப்பு அமைந்துள்ளது.

3. பறக்கும் விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார், யார்?

பறக்கும் விமானத்தை ரைட் சகோதரர்களான வில்பர்ட் ரைட் மற்றும் ஆர்வில் ரைட் கண்டறிந்தார்கள்.

சிந்தனை வினாக்கள்

1. பறவைகளைப்போல் பறக்க முடிந்தால், நமக்கு எத்தகைய உடலமைப்பு இருக்க வேண்டும்?

  • பறவைகளைப்போல் நாமும் பறக்க முடிந்தால் நமக்கு உடல் எடை குறைவாக இருக்க வேண்டும்.
  • நமது எலும்புகளிலும் உடலில் காற்றறைகள் நிரம்பி இருக்க வேண்டும்.
  • பறப்பதற்கு வாலும் இறக்கைகளும் இருக்க வேண்டும். வாலிலும் இறக்கைகளிலும் காற்றறைகள் வேண்டும்.
  • உடலில் அதிகமான இறகுகள் வேண்டும். உடலை உந்தித் தள்ளுவதற்கு ஏற்ற வகையில் பாதங்களும் கால்களும் வேண்டும்.
  • நகங்கள் வளைந்து கூர்மையாக இருக்க வேண்டும்.
  • இவையெல்லாம் அமைந்தால் பறவையைப் போல் நாமும் பறக்கலாம்

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. ரைட் சகோதரர்கள் பறப்பதற்கு என்ன செய்தார்கள்?

ரைட சகோதரர்கள் தாங்கள் பறப்பதற்குப் பலமுறை முயற்சி செய்தனர். அனைத்திலு்ம் தோல்வியே. ஆனாலும் தோல்வியிலிருந்து நிறைய கற்றுக் கொண்டார்கள். அவர்கள் செய்த முயற்சிகளில் உள்ள குறைகளைச் சரி செய்து கொண்டே வந்தார்கள் ஒரு நாள் பறப்பதற்கான கருவியை கண்டுபிடித்து விட்டார்கள்.

2. ரைட் சகோதரர்கள் முதன் முதலில் எப்போது விமானத்தில் பறந்தனர்?

ரைட் சகோதரர்களில் ஒருவர், 1903-ம் ஆண்டு டிசம்பர் 17 அன்று 12 நொடிகள் தாங்கள் சொந்தமாக உருவாக்கிய விமானத்தில் உயர்ந்த பகுதியிலிருந்து சிறிது தூரம் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment