TN 5th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.4 – சொற்றொடர் அமைப்பு முறை

3.4 சொற்றொடர் அமைப்பு முறை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 3.4 – சொற்றொடர் அமைப்பு முறை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - sorthodar amaipu murai

5th Std Tamil Text Book – Download

சொற்றொடர் அமைப்பு முறை

எழுவாய்

ஒரு தொடரில், யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் (எழுவாய் எப்போதும் பெயர்ச்சொல்லாகவே இருக்கும்)

எ.கா. :- தென்றல் நடனம் ஆடினாள்

செயப்படுபொருள்

ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள்

எ.கா. :- தென்றல் நடனம் ஆடினாள்

பயனிலை

ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம்.

எ.கா. :- தென்றல் நடனம் ஆடினாள்

ஆடினாள் – என்பது வினைமுற்று

  • எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரில் இடம் பெற்றிருக்கும்.
  • எழுவாயோ, செயப்படுபொருளோ இல்லாமலும் தொடர் அமையும்.

எ.கா. நடனம் ஆடினாள் – இத்தொடரில் எழுவாய் இல்லை.

  • தென்றல் ஆடினாள் – இத்தொடரில் செயப்படுபொருள் இல்லை.
  • ஒரு தொடர் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால், பயனிலை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

கற்பவை கற்றபின்

1. தொடரின் அமைப்பு முறையை அறிந்து கூறுக.

தொடர் அமைப்பில் எழுவாய், பயனிலை, செய்யப்படுபொருள் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும். பயனிலை இல்லாமல் தொடர் சில நேரத்தில் அமையலாம்.

எ.கா. தரணி பாடல் படினான்

2. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் தொடரில் சில இடங்களில் வருவதையும், அவை வராமல் தொடர் அமைவதையும் குறித்துக் கலந்துரையாடுக.

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரில் இடம் பெற்றிருக்கும்.

எழுவாய் இல்லாமலும் தொடர் அமையும்.

  • நடனம் ஆடினாள் – இத்தொடரில் எழுவாய் இல்லை.

செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமையும்.

  • தென்றல் ஆடினாள் – இத்தொடரில் செயப்படுபொருள் இல்லை

ஒரு தொடர் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால், பயனிலை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்

மதிப்பிடு

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. எழுவாய் எப்போதும் _________ லாகவே இருக்கும்.

  1. வினைச்சொல்
  2. இடைச்சொல்
  3. பெயர்ச்சொல்
  4. உரிச்சொல்

விடை : பெயர்ச்சொல்

2. பாடல் பாடினாள் – இத்தொடரில் _________ இல்லை.

  1. எழுவாய்
  2. பயனிலை
  3. செயப்படுபொருள்
  4. சொல்

விடை : எழுவாய்

3. அமுதன் ஓடினான் – இத்தொடரில் _________ உண்டு

  1. பயனிலை
  2. செயப்படுபொருள்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

விடை : செயப்படுபொருள்

எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.

  1. மாதவி சித்திரம் தீட்டினாள்
  2. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
  3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்
  4. கிளி பழம் தின்றது.
எழுவாய்
(யார், எது, எவை, யாவர்)
செயப்படுபொருள்
(யாரை, எதனை, எவற்றை)
பயனிலை
(முடிந்த செயல்)
மாதவி சித்திரம் தீட்டினாள்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்
கிளி பழம் தின்றது

இ. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இடம் பெற்றுள்ள தொடர்கள் நான்கு எழுதுக.

  • முருகன் வள்ளியை மணந்தான்
  • மாதவி சித்திரம் தீட்டினாள்
  • திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
  • தென்றல் நடனம் ஆடினாள்

ஈ. எழுவாய், பயனிலை மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

  • தென்றல் ஆடினாள்
  • ராமு ஓடினான்
  • யானை தின்றது

பயனிலை, செயப்படுபொருள் மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

  • படம் பார்த்தான்
  • பாடம் படித்தான்
  • ஓட்டம் ஓடினாள்

கூடுதல் வினாக்கள்

1. எழுவாய் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

ஒரு தொடரில், யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் (எழுவாய் எப்போதும் பெயர்ச்சொல்லாகவே இருக்கும்) ஆகும்.

எ.கா. :

தென்றல் நடனம் ஆடினாள்

2. செயப்படுபொருள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள் ஆகும்.

எ.கா. :

தென்றல் நடனம் ஆடினாள்

3. பயனிலை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம்.

எ.கா. :

தென்றல் நடனம் ஆடினாள். – ஆடினாள் – என்பது பயனிலை

மொழியை ஆள்வோம்

சொல்லக் கேட்டு எழுதுக.

  • மாங்காய் பறித்துத் தருகிறேன்
  • ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
  • பழமொழி ஒன்று சொல்
  • கண்ணிமைக்கும் நேரம

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. அமைதியாக

விடை : வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக இருந்தனர்

2. தருகிறேன்

விடை : நன்றாக படி பரிசு தருகிறேன் என்றார் ஆசிரியர்

3. சிறுவர்கள்

விடை : சிறுவர்கள் பள்ளிக்கு சென்றனர்

4. முழக்கம்

விடை : இடி முழக்கம் பயம் தரும்

5. தங்கம்

விடை : பெண்களுக்கு தங்கம் மிகவும் பிடிக்கும்

6. விளைவு

விடை : கற்பதன் விளைவு நன்மதிப்பை தரும்

பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

என் உடல் ஏழு நிறங்களால் ஆனது ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும் எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம் பின்பகுதி என் வடிவம் என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா

விடை:-

என் உடல் ஏழு நிறங்களால் ஆனது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும். எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம். பின்பகுதி என் வடிவம். என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா?

பொருத்தமான சொற்களால் நிரப்புக.

(உறுதியாக, சொத்தையாக, பல்வலி, பல்துலக்க)

மருத்துவர் விமலா உன் உடம்புக்கு என்ன?
விமலா எனக்கு பல்வலி ஐயா,
மருத்துவர் எங்கே வாயைத் திற, பல்லெல்லாம் சொத்தையாக இருக்கிறதே.
விமலா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?
மருத்துவர் இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடக்கூடாது. தினமும் இருமுறை காலையிலும், இரவிலும் பல்துலக்க வேண்டும். அப்பொழுதுதான் பற்கள் உறுதியாக இருக்கும்.
விமலா நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் ஐயா.

கதையை நிறைவு செய்க.

ஒரு நாள் அந்த நாட்டின் அரசர் குதிரையின் மேல் வலம் வந்து கொண்டிருந்தார். வயதான மனிதர் ஒருவர், தம்முடைய தள்ளாத வயதிலும் சாலையின் ஓரங்களில் குழிகளைத் தோண்டி, விதைகளையும் செடிகளையும் நட்டுத் தண்ணீர் ஊற்றியதைப் பார்த்தார். அரசர் அந்த வயதானவர் செய்யும் செயல்களைத் தொடர்ந்து பார்வையிட்டு வந்தார். ஒரு நாள் …………………………

விடை :

மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற நீர் கிடைக்காததால் தான் குடிக்க கொண்டு வந்த சிறிது தண்ணீரைத் தான் குடிக்காமல் மரத்திற்கு ஊற்றி, மயங்கி கீழே விழுந்து விடுகின்றார். அரசர் உடனே குதிரையை விட்டு இறங்கி வேகமாக ஓடுகின்றார். அவரைத் தூக்கி தண்ணீர் கொடுக்கிறார். அனால் முதியவர் எனக்குத் தண்ணீர் வேண்டாம். இந்த மரத்திற்கு ஊற்றுங்கள். நான் செத்தால் பாதிப்பு யாருக்கும் இல்லை. ஆனால் மரம் செத்தால், இந்த ஊருக்கே பாதிப்பு அதனைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இறந்து விடுகின்றானர். அரசர் மரங்களை வளர்க்கதத் தொடங்கினார். நாடே மரங்கள் பெருகி வளம் மிக்க காடானாது.

விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்க.

5th Standard - sorthodar amaipu murai

பேசும் கிளி! தீ வளையத்திற்குள் பாயும் புலி! பார் விளையாட்டில் பறக்கும் தேவதைகள்! கூண்டுக்குள் உருண்டோடும் குல்லா மனிதர்! வெள்ளைப் புறாக்களின் எல்லையில்லா ஆட்டம்! கோமாளிக் குள்ளர்களின் கும்மாள விளையாட்டு! குதிரையேறும் கொஞ்சும் மழலைகள்!

வாருங்கள்! வண்ணவொளியில் காணுங்கள்!

விளம்பரம் படி! விடையைக் கொடு

1. சர்க்கஸ் நடைபெறும் இடம் எது?

நேரு விளையாட்டரங்கம், விழுப்புரம்

2. விளையாடுபவர்கள் யார்?

கோமாளிக் குள்ளர்கள்

3. குதிரையேறுபவர்கள் யார்?

கொஞ்சும் மழலைகள்

4. சர்க்கஸ் நடைபெறும் அரங்கத்தின் பெயர் என்ன?

நேரு விளையாட்டரங்கம்

5. சர்க்கஸின் பெயர் என்ன?

ஜம்போ சர்க்கஸ்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

ஒரு நாள் மாலை முத்துவின் வீட்டிற்கு அவனுடைய நண்பர்களான கென்னடியும் அன்வரும் விளையாட வந்தனர். பிறந்து சில நாள்களே ஆன நான்கு நாய்க் குட்டிகளைத் தோட்டத்தில் கண்டனர். நாய்க் குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர். இருவரும் ஆளுக்கொரு நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டனர். முத்து அவர்களிடம், “நண்பர்களே, பால் குடிக்கும் இந்தக் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்கவேண்டா. நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம், சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினான்.

நண்பர்கள் அமைதியாக நாய்க்குட்டிகளைக் கீழே இறக்கி விட்டனர். நாய்க்குட்டிகள் மகிழ்ச்சியாகத் தம் தாயாேடு விளையாடுவதைத் நண்பர்கள மூவரும் பார்தது மகிழ்ந்தனர்.

விடை தருக

1. முத்துவின் தாேட்டத்தில் எத்தனை நாய்க்குட்டிகள் இருந்தன?

முத்துவின் தாேட்டத்தில் நான்கு நாய்க்குட்டிகள் இருந்தன

2. நண்பர்கள் இருவரும் முத்துவின் வீட்டிற்கு எதற்காக வந்தனர்?

நண்பர்கள் இருவரும் முத்துவின் வீடடிற்கு விளையாடுவதற்காக வந்தனர்.

3. கென்னடியும் அன்வரும் என்ன செய்ய விரும்பினர்?

கென்னடியும் அன்வரும் நாய்க்குட்டிகளை தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல விரும்பினர்.

4. நண்பர்களுக்கு முத்துவின் அறிவுரை என்ன?

நண்பர்களே, பால் குடிக்கும் இந்தக் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்கவேண்டா. நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம், சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினான்.

5. நண்பர்கள் நாய்க்குட்டிகளை எடுத்துச் சென்றனரா? ஏன்?

நண்பர்கள் நாய்குட்டிகளை எடுத்துச் செல்லவில்லை

காரணம் :  முத்துவின் அறிவுரையால் நாய்க்குட்டியின் பெற்றோரிடமிருந்து பிரிக்க மனில்லாமல் விட்டுச் சென்றனர்.

மொழியோடு விளையாடு

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எழுதுக.

  • Seashore – கடற்கரை
  • Morning – காலை
  • Field – வயல்
  • Mango tree – மாமரம்
  • Cyclone – புயல்
  • Nature – இயற்கை
  • Pearl – முத்து
  • Farmer – உழவர்
  • Project – செயல் திட்டம்
  • Circus – வித்தை

கலங்கரை விளக்கம் – இச்சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக.

  • கலம்
  • கலகம்
  • கரை
  • கலக்கம்
  • விளக்கம்

கண்டுபிடித்து எழுதுக.

5th Standard - sorthodar amaippu murai - Kandupidithu eluthuga

1. மணம் மிக்க மலர்

விடை : மல்லிகை

2. சிலந்திக்கு எத்தனை கால்கள்?

விடை : எட்டு

3. பந்தை அடிக்க உதவுவது

விடை : மட்டை

4. பசுவின் உணவு

விடை : புல்

5. மீன் பிடிக்க உதவும்

விடை : வலை

6. ஒரு தின்பண்டம்

விடை : வடை

ஒரு கதையின் முதல் தொடர் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தொடர் கூறிக்கதையை நிறைவு செய்க

கதைத்தொடர் – 1 

அன்று காட்டு அரசன் சிங்கத்திற்கு பிறந்த நாள்

கதை நிறைவு

அன்று காடே விழாக்கோலமாக  இருந்தது. சிங்கம் அனைத்து விலங்குகளையும் துன்புறுத்தி இருந்தால் அனைத்து விலங்குகளும் இது தான் சமயம் என்று சிங்கத்திடம் சென்று அரசே! பிறந்தநாள்  அன்று எதைக் கேட்டாலும் நீங்கள் தருவீர்கள் எங்களைத் துன்புறுத்தக் கூடாது என்ற வாக்குறுதியைக் கேட்டது. சிங்கமும் அதனை ஏற்றது.

கதைத்தொடர் – 2

இன்சுவை பள்ளி செல்லும் பணப்பை ஒன்றைக் கண்டெடுத்தாள்.

கதை நிறைவு

அதனை என்ன செய்வது என்று நினைத்தாள் அவளின தோழி நாம் வேண்டியதை வாங்கிச் செலவு செய்யலாம் என்றனர். ஆனால் இன்சுவை தவறு. பணத்தை தொலைத்தார்கள் எவ்வளவு துன்பப்படுவார்கள் என்றாள். பணம் தொலைத்தவர் கதறிக் கொண்டு அழுது கொண்டே ஒடி வந்தார். இன்சுவை பணப்பைக்கு கொடுத்தும் மகிழ்ந்து, அவளை வாழ்த்திச் சென்றார்.

கதைத்தொடர் – 3

கவியரசன் நாய், பூனை போன்ற விலங்குகளைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சியடைவான்.

கதை நிறைவு

உயிரிரக்கம் பற்றி அவனுக்குக் கவலை இல்லை ஒரு நாள் நாய் ஒன்று அவனைத் தரத்தியது. அவனைக் கடிப்பது போல வந்தது. அவன் பயந்தான் நாயின் பார்வையை புரிந்து கொண்டான். இனி யாரையும் துன்புறுத்தக் கூடாது என்று முடிவு செய்தான்.

கதைத்தொடர் – 4

நரி ஒன்று கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த மான்களைக் கண்டது.

கதை நிறைவு

மனதில் திட்டம் ஒன்றைப் போட்டது. எப்படியாவது ஒரு மானைத் தனியே அழைத்து வரத் திட்டம் போட்டது. தந்திரமாகப் புல் அடர்ந்த இடத்தில் மறைந்து கொண்டது. ஒரு மான் தனியே வந்தது. நரி மானைப் பிடிக்கும் நேரத்தில் மற்றொரு மான் நரியைத் தள்ளிவிட்டு மானைக் காப்பாற்றியது. நரி ஏமாற்றம் அடைந்தது.

கடல் வளங்களைக் கண்டுபிடிப்போம்

5th Standard - sorthodar amaippu murai - kadal valangal kandupidipom

  • சிப்பி
  • முத்து
  • மீன்
  • பவளம்
  • சங்கு
  • ஆமை

சரியான சொற்களை எடுத்துப் பொருத்துக

1. வீட்டுக்கு ஒரு ____________ வளர்ப்போம். (மறம் / மரம்)

விடை : மரம்

2. உயிர் கொடுப்பான் ____________ (தோழன் / தோலன்)

விடை : தோழன்

3. நேர்மை எப்போதும் ____________ தரும். (நண்மை / நன்மை)

விடை : நன்மை

4. கொடுத்து ____________ இன்பம். (மகிழ்வது / மகிள்வது)

விடை : மகிழ்வது

5. ____________ இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் (குழந்தை / குலந்தை)

விடை : குழந்தை

பின்வரும் சொற்களைக் கொண்டு சொற்றொடர் உருவாக்கலாமா!

1. மழை – மலை

  • மழை – மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்
  • மலை – உயர்ந்து நிற்பது மலை

2. கரி – கறி

  • கரி – யானையின் மறுபெயர் கரி
  • கறி – காரத்துடன் செய்யப்பட்ட ஒரு பதார்த்தம் கறி ஆகும்

3. தவளை – தவலை

  • தவளை – நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு விலங்கு தவளை ஆகும்
  • தவலை தவலை என்பது தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரவகை

4. வழி – வலி

  • வழி – பாதையை குறிப்பது வழி
  • வலி – உடல் காயத்தினால் ஏற்படுவது வலி

5. அரை – அறை

  • அரை – ஒன்றில் பாதி அரை
  • அறை – கட்டிடத்தின் ஒரு பகுதி அறை

6. மனம் – மணம்

  • மனம் – உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு மனம்
  • மணம் – மல்லிகையின் வாசனையை குறிப்பது மணம்

அறிந்து கொள்வோம்

கடலைக் குறிக்கும் வேறு பெயர்கள்

  • புணரி
  • ஆழி
  • சாகரம்
  • நீராழி
  • பெருநீர்
  • சமுத்திரம்
  • பெளவம்
  • வேலை
  • முந்நீர்

செயல்திட்டம்

1. கடலின் படம் வரைந்து கடலின் பயன்களைப் பட்டியலிடுக

5th Standard - sorthodar amaippu murai - Kadal

  1. எண்ணற்ற உயிரிகள் வாழ இடம் தரும்.
  2. மீன்கள், முத்துக்கள், சிப்பிகள், சங்குகள், பவளங்கள் தரும்.க்ஷ
  3. மருந்துகள், உணவு வகைகள் தருகின்றன.

2. உமது பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை செயல்திட்டமாக மேற்கொள்க. புகைப்படத்துடன் எழுதி வழங்குக

5th Standard - sorthodar amaippu murai - Maram

  1. வேப்பமரக் கன்றுகள் நட்டோம்.
  2. தினமும் இருமுறை நீர் பாய்ச்சினோம்.
  3. வேலி கட்டி பாதுகாத்தோம்.

3. பழமொழிகள், புதிர்கள், விடுகதைகள் தொகுப்பு தயார் செய்க

பழமொழிகள்

  • நூல் பல கல்.
  • கூழானாலும் குளித்துக் குடி.
  • பணம் பத்தும் செய்யும்.
  • பணமென்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவான்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • நாய் விற்ற காசு குரைக்குமா.
  • அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
  • செய் அல்லது செத்து மடி.
  • சிறு துளி பெருவெள்ளம்.
  • ஒற்றுமையே பலம்.
  • கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
  • தோல்வியே வெற்றியின் முதல் படி.
  • எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
  • நூல் பல கல்.
  • இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாேத!

புதிர்கள், விடுகதைகள்

1. அடி மேல் அடி வாங்கி, அனைவரையும் சொக்க வைக்கும் – அது என்ன?

விடை : மிருதங்கம்

2. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம் – அது என்ன?

விடை : வளையல்

3. ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை. – அது என்ன?

விடை : மரம்

4. அடித்தால் விலகாழ, அணைத்தால் நிற்காது. – அது என்ன?

விடை : தண்ணீர்

5. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். – அது என்ன?

விடை : மழை

6. பூமியிலே பிறக்கும் புகையாய் போகும். – அது என்ன?

விடை : பெட்ரோல்

7. வெயிலில் மலரும், காற்றில் உலரும். – அது என்ன?

விடை : வியர்வை

8. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகின்றான். – அது என்ன?

விடை : உப்பு

9. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். – அது என்ன?

விடை : குளிர்

10. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டு கை. – அது என்ன?

விடை : குடை

11. எட்டாத இராணியாம், இரவில் வருவாள், பகலில் மறைவாள். – அது என்ன?

விடை : நிலா

12. மண்ணுக்குள் கிடப்பான். மங்களகரமானவன். – அது என்ன?

விடை : மஞ்சள்

13. பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். – அது என்ன?

விடை : சீப்பு

14. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப்பலகை. – அது என்ன?

விடை : நாக்கு

15. மண்டையில் போட்டால் மகிழ்ந்து சிரிப்பான். – அது என்ன?

விடை : தேங்காய்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment