TN 4th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 6 – ஆராய்ந்திட வேண்டும்

ஆராய்ந்திட வேண்டும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 6 – ஆராய்ந்திட வேண்டும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - aarainthida vendum

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

கதையை உம் சொந்த நடையில் கூறுக. 

மன்னர் ஒருவர் தம் நாட்டு மக்களின் நிலையை அறிய குதிரையில் பயணம் செய்தார். குதிரையும் மன்னரைப் போல் இரக்கக் குணம் கொண்டது. அக்குதிரை சாலையை நோட்டமிட்டுக் கொண்டே சென்றது.

அப்போது காலில் அடிப்பட்ட நாய் ஒன்று நடக்க முடியாமல் நொண்டி நொண்டி வருவதைப் பார்த்தது. மன்னரின் அனுமதி பெற்று அந்த நாயை மன்னருக்கு முன் அமரச் செய்தது. மன்னர் முன்னே அமரந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

குதிரையின் மீது அமர்ந்து வரும் மன்னரைப் பாரத்து மக்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். நாய், குதிரையும் மன்னரையும் வணங்காமல் தன்னை வணங்குவதாக எண்ணி மகிழ்ச்சியில் தன்னை மற்நது தன் தலையை தூக்கியபடி “லொள் லொள்” என்று குரைத்தது.

நாயின் இச்செயலைக் கண்ட குதிரை “நாயே, அமைதியாக இருந்து கொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால் எல்லோரும் உன் மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை. நாய் “மக்கள் என்னை வணங்குவது உனக்கு பொறாமையாக உள்ளது. அதனால்தான என்னை மட்டம் தட்டுகிறாய்” என்றது.

குதிரை, நாயிடம் “அவர்கள் மன்னருக்குத்தான் மரியாதை கொடுக்கின்றனர். உனக்கு இல்லை” என்று கூறியது. ஆனால் நாய் அதனை ஏற்கவில்லை குதிரையின் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாமல் மேலும் சத்தமாக குரைத்தது.

மன்னரில் அருகில் வந்த கொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினர். அங்கிருந்து சென்ற நாய் சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டு திரும்பிப் பார்த்தது. தான் இல்லாத போதும் மக்கள் மன்னரை வணங்க மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இக்காட்சியைப் பார்த்தபோது நாய்க்கு உண்மை புரிந்தது. தன் தவற்றினை உணர்ந்தது. ஆராயமல் முடிவு எடுத்ததை எண்ணி வருந்தியது.

ஆராய்ந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைக் கூறுக.

நாம் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். அவையே நன்மைகளைத் தரும்.

  1. நாம் ஆராய்ந்து செயல்படும்போது பிழைகளைத் தவிர்க்க முடியும்.
  2. நம்மால் துன்பத்திலிருந்து விடுபட இயலும்
  3. எல்லோராலும் பாராட்டப்படுவோம்.
  4. யாரையும் சார்ந்து வாழாமல் தனித்துவமாக வாழ முடியும்.
  5. நல்லவற்றையும், தீயனவற்றையும் பகுத்தறியும் வாய்ப்பு கிடைக்கிறது.

சிந்திக்கலாமா!

நீ செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் அல்லது பரிசு அளித்தால் அவ்வேளையில் நீ என்ன செய்வாய்?

நான் செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் நான் அந்தச் செயலை செய்யவில்லை என்ற உண்மையைக் கூறி எதிர் நன்றி கூறுவேன்.

அவர் பரிசு அளித்தால் அதை வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.

வினாக்களுக்கு விடையளிக்க

1. குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்தது?

நாய் ஒன்று காலில் அடிபட்டு நடக்க முடியாமல் நொண்டி, நொண்டி சென்று கொண்டிருந்த காரணத்தால் குதிரை நாய்க்கு உதவி செய்ய நினைத்தது

2. காவலர்கள், குதிரை மீது இருந்த நாயை ஏன் கீழே இறக்கி விட்டனர்?

குதிரையின் மேல் அமர்ந்த நாய் குதிரையிடம் விவாதம் செய்து கொண்டு சத்தமாக குரைத்தது அதனால் காவலர்கள், குதிரை மீது இருந்த நாயை கீழே இறக்கி விட்டனர்

சொல்லக் கேட்டு எழுதுக.

  • குதிரை
  • பேராசை
  • இரக்கம்
  • நிலைமை
  • குடிமக்கள்

நிறுத்தக் குறியிடுக

அரசே அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா என்று கேட்டது

விடை:-

“அரசே , அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எங்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.

ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக

(எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது

1. தத்தித் தத்தி

விடை : நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்றது.

2. எழுதி எழுதி

விடை : புரியாத பாடங்களை எழுதி எழுதி பார்க்க வேண்டும்.

3. திரும்பித் திரும்பி

விடை : வாகனமானது வளைவுகளில் திரும்பித் திரும்பி சென்றது.

4. குனிந்து குனிந்து

விடை : குகைகளில் குனிந்து குனிந்து செல்ல வேண்டும்

குறிப்பைப் படி! விடையைக் கொடு!

4th Standard - aarainthida vendum - Kuripai padi vidaiyai kodu

1. பேச உதவுவது வாய், படுக்க விரிப்பது பாய், கனிக்கு முந்தையது காய், காவல் காப்பது ___________ ?

விடை : நாய்

2. வரியில் ஒன்று சுங்கம், கனிமத்தில் ஒன்று தங்கம், நாடுகளுள் ஒன்று வங்கம், தமிழுக்கு மூன்று ___________ ?

விடை : சங்கம்

3. உழவுக்கு உதவுவது ஏர், ஊர்கூடி இழுப்பது தேர், மரத்திற்கு தேவை வேர், நல்லதை உன்னிடம் ___________ ?

விடை : சேர்

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

1. போலி

  • ஒன்றைப்போல இருத்தல்

2. பொறாமை

  • காழ்ப்பு

3. சவாரி

  • பயணம்

4. வருந்தியது

  • துன்பமடைந்தது

5. மரியாதை

  • நேர்மையான ஒழுக்கம்

சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக.

1. மண்னர்

  • மன்னர்

2. குதிறைச் சவாரி

  • குதிரை சவாரி

3. உர்சாகம்

  • உற்சாகம்

4. சிறந்தவண்

  • சிறந்தவன்

5. மக்கலெள்ளாம்

  • மக்களெல்லாம்

6. கனைப்பொளி

  • கனைப்பொலி

7. இறக்கக் குணம்

  • இரக்கக் குணம்

8. கிராமங்கல்

  • கிராமங்கள்

விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.

4th Standard - aarainthida vendum - villankuriaya oliyai vattamiduga (1)

  • கழுதை கனைக்கும்
  • சிங்கம் முழங்கும்
  • நாய் குரைக்கும்
  • புலி உறுமும்
  • யானை பிளிறும்

அறிந்துகொள்வோம்.

தமிழில் மூவினம்

  • த  – வல்லினம்
  • மி – மெல்லினம்
  • ழ் – இடையினம்

தமிழும் மூன்றும்

  • முத்தமிழ் – இயல், இசை, நாடகம்
  • முச்சங்கம் – முதல், இடை, கடை
  • முக்காலம் – இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
  • முப்பொருள் – அறம், பொருள், இன்பம்
  • மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்கை

செயல்திட்டம்

பிறர் பாராட்டுவதற்குரிய நல்ல செயல்கள் எவையெவை என உன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதி வருக.

  1. அதிகாலையில் எழுதல்.
  2. இறைவனை தினமும் தொழுதல்.
  3. பள்ளிக்கு நேரத்திற்கு செல்லுதல்.
  4. நகத்தினை வாரம் ஒருமுறை வெட்டுதல்.
  5. தலைமுடியினை சீராக வெட்டுதல்.
  6. பிறருக்கு உதவி புரிதல்.
  7. அன்போடு பழகுதல்.
  8. பெரியவர்களுக்கு மரியாதை தருதல்.
  9. இனியாக பேசுதல்
  10. பணிவுடன் இருப்பது.
  11. நல்லொழுக்கத்தை பின்பற்றுதல்.
  12. வாய்மையை போற்றுவது
  13. அடக்கத்தோடு இருத்தல்

முக்காலம் அறிவோமா?

கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் போல் எழுதுக

1. நான் உணவு ————-(உண்)

  • நான் உணவு உண்டேன் (இறந்தகாலம்)
  • நான் உணவு உண்கிறேன் (நிகழ்காலம்)
  • நான் உணவு உண்பேன் (எதிர்காலம்)

2. இளவரசி பூ ——- (தொடு)

  • இளவரசி பூ தொடுத்தாள் (இறந்தகாலம்)
  • இளவரசி பூ தொடுக்கிறாள் (நிகழ்காலம்)
  • இளவரசி பூ தொடுப்பாள் (எதிர்காலம்)

3. ஆடு புல் ———- (மேய்)

  • ஆடு புல் மேய்ந்தது (இறந்தகாலம்)
  • ஆடு புல் மேய்கிறது (நிகழ்காலம்)
  • ஆடு புல் மேயும் (எதிர்காலம்)

4. நாங்கள் படம்—— (வரை)

  • நாங்கள் படம் வரைந்தோம் (இறந்தகாலம்)
  • நாங்கள் படம் வரைகிறோம் (நிகழ்காலம்)
  • நாங்கள் படம் வரைவோம் (எதிர்காலம்)

5. கதிர் போட்டியில் ………… (வெல்)

  • கதிர் போட்டியில் வென்றான் (இறந்தகாலம்)
  • கதிர் போட்டியில் வெல்கிறான் (நிகழ்காலம்)
  • கதிர் போட்டியில் புல் வெல்வான் (எதிர்காலம்)

6. மயில்கள் நடனம் ………… (ஆடு)

  • மயில்கள் நடனம் ஆடின (இறந்தகாலம்)
  • மயில்கள் நடனம் ஆடுகின்றன (நிகழ்காலம்)
  • மயில்கள் நடனம் ஆடும் (எதிர்காலம்)

அட்டவணையில் விடுபட்ட இடங்களை நிரப்புக.

வினைச் சொல் இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம்
செய் செய்தான் செய்கின்றான் செய்வான்
பற பறந்தது பறக்கின்றது பறக்கும்
படி படித்தான் படிக்கின்றான் படிப்பான்
கேள் கேட்டது கேட்கின்றது கேட்கும்
சொல் சொன்னாள் சொல்கிறாள் சொல்வாள்

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக

4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga கண்ணன் ஏணியில் ஏறுகிறான்
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga மரத்திலிருந்து தேங்காய்களும், தென்னை ஓலைகளும் விழுந்திருந்தன
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga விமானம் பறக்கிறது
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga சிறுவன் ஓடுகின்றான்
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகிறார்
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga சிறுமி மிதிவண்டி ஓட்டுகிறாள்
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga முதியவர் செய்தித்தாள் படிக்கிறார்
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga பேருந்து செல்கின்றது
4th Standard - aarainthida vendum - padangaluk poruthamana kalangallai payanpaduthi thodar eluthuga சிறுவன் கதவைத் திறக்கின்றான்

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க

1. மன்னர் குதிரையில் பயணம் மேற்கொண்டதன் காரணம் என்ன?

கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியும், மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டார்.

2. குதிரை அரசிடம் எதற்காக அனுமதி கேட்டது?

நாய் ஒன்று காலில் அடிபட்டு நடக்க முடியாமல் தத்தித் தத்தி நடந்து  சென்று கொண்டிருந்தது. இதனால் நாயை தன் முதுகில் எற்றிக் கொண்டு, அது செல்ல வேண்டிய இடத்தில் விட்டுவிடலாமா என்கு குதிரை அனுமதி கேட்டது

3. குதிரை நாயின் செயலைக் கண்டு கூறியதென்ன?

நாயின் செயலைக் குதிரை கவனித்தது. “நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால், எல்லாரும் உன்மீது வெறுப்பு அடைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment