TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 7 – தமிழ் மொழியின் பெருமை

தமிழ் மொழியின் பெருமை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 7 – தமிழ் மொழியின் பெருமை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Tamil Moliyin Perumai

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

தமிழின் இனிமையைப் பாரதியார் எப்படியெல்லாம் புகழ்கிறார்? கலந்துரையாடுக

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”

என்றும், மேலும்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”

என்று தமிழைப் போற்றிப் புகழ்கிறார் பாரதியார்.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “தமிழுக்கு அழுது என்ற பேர்” என்று பாடியவர் ________________

  1. பாரதியார்
  2. கண்ணதாசன்
  3. கவிமணி
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

2. “செம்மை + மொழி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. செம்மொழி
  2. செம்மொலி
  3. செம்மொளி
  4. செமொழி

விடை : செம்மொழி

3. “கீழடி” அகழாய்வு நடந்த மாவட்டம் _____________

  1. புதுக்கோட்டை
  2. தருமபுரி
  3. சிவகங்கை
  4. திருச்சி

விடை : சிவகங்கை

4. “ஆதித்தமிழர்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. ஆதி + தமிழர்
  2. ஆதி + தமிளர்
  3. அதி + தமிழர்
  4. ஆதீ + தமிழர்

விடை : ஆதி + தமிழர்

5. “பொலிவு” இச்சொல்லுக்குரிய பொருள் ___________________

  1. மெலிவு
  2. அழகு
  3. துணிவு
  4. சிறப்பு

விடை : அழகு

கீழ்காணும் சொற்றொடர்களைப் படித்துச் சரி தவறு X எனக்குறியிடுக

1. இயல், இசை, நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின சரி
2. தமிழ் மொழி “ஆதித்தமிழர் மொழி” இல்லை தவறு
3. “வீரம்” தமிழரின் பண்புகளுள் ஒன்று சரி
4. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தொடர் ஆத்திசூடியில் உள்ளது. தவறு
5. சிவகங்கையிலுள்ள கீழடியில் அகழாய்வு நடைெபறவில்லை தவறு

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக

1. தொன்மை

  • பழைமை

2. அகழாய்வு

  • நிலத்தை தோண்டி ஆராய்தல்

3. ஆபரணம்

  • அணிகலன்

4. கேளிர்

  • உறவினர்

5. பொலிவு

  • அழகு

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லை முழுமையடைச் செய்க

விடை : இசை

3rd Standard - Tamil Moliyin Perumai - sariyana eluthai therinthu theduthu sollai mulumai seiga

விடை : நாடகம்

3rd Standard - Tamil Moliyin Perumai - sariyana eluthai therinthu theduthu sollai mulumai seiga

விடை : பாறை

3rd Standard - Tamil Moliyin Perumai - sariyana eluthai therinthu theduthu sollai mulumai seiga

விடை : கீழடி

வினாக்களுக்கு விடையளிக்க

1. தமிழ்மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக.

உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாய் விளங்கி மனித வாழ்விற்க இலக்கணம் கண்ட மொழி.

2. கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?

பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆகியவை “கீழடி” அகழாய்வில் கண்பிடிக்கப்பட்ட பொருள்கள் ஆகும்.

3. தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்றுப் பாடல் தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

4. தமிழ்மொழி “செம்மொழி” என்று ஏன் அழைக்கப்படுகிறது?

தமிழ்மொழியானது பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ளதால் செம்மொழி அழைக்கப்படுகிறது.

பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைச் தெரிவு செய்து சொற்றொடர் உருவாக்குக

3rd Standard - Tamil Moliyin Perumai - Palathirukul Ulla Sariyana Sollai Thervu Seithu Sotrodar uruvakkuga

விடை :  இயல் என்பது எழுத்து நடை

3rd Standard - Tamil Moliyin Perumai - Palathirukul Ulla Sariyana Sollai Thervu Seithu Sotrodar uruvakkuga

விடை :  பிற மொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால் தமிழ் மொழி செம்மொழி ஆகும்

3rd Standard - Tamil Moliyin Perumai - Palathirukul Ulla Sariyana Sollai Thervu Seithu Sotrodar uruvakkuga

விடை : பாறை ஓவியங்களில் தமிழர்களின் வீரம் சார்ந்த விளையாட்டு பற்றிய செய்திகள் உள்ளன.

3rd Standard - Tamil Moliyin Perumai - Palathirukul Ulla Sariyana Sollai Thervu Seithu Sotrodar uruvakkuga

விடை : நடுவண் அரசு 2004 ஆம் ஆண்டு தமிழைச் “செம்மொழி” என அறிவித்தது.

சிந்திக்கலாமா

இனியன் தன் நண்பர்களிடம் பிற மொழிகள் கற்பதிலேயே, ஆர்வம் காட்டுவேன் என்று கூறுகிறான். வீனா தன் தோழிகளிடம் பிற மொழிகளையும் கற்பேன் தமிழ் மொழிக்கு முதலிடம் தருவேன். ஏனெனில் தாய்மொழியே சிந்திக்கும் திறனை வளர்க்கும் என்கிறாள்.

இனியன், வீணா இவர்களின் பேச்சிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வது என்ன?

இனியன் பிற மொழிகளில் காட்டும் ஆர்வத்தை தமிழ் மொழில் காட்டுவதாக தெரியவில்லை.

வீணா பிற மொழிகளையும் கற்கிறாள். அதே சமயம் தமிழுக்கு முதலிடம் தருகிறான். ஏனெனில் தாய்மொழிதான் சிந்திக்கும் திறைன் வளர்க்கும் என்பதை வீணா அறிந்திருந்தாள்.

அறிந்து கொள்வோம்

3rd Standard - Tamil Moliyin Perumai - Arinthu Kolvom

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment