மழைநீர்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 4 – மழைநீர். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
மழை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உம் சொந்த நடையில் பேசுக
“விண்ணின் மழைநீர் மண்ணின் உயிர்நீர்” என்பர். மழை பெய்யும் போது இயற்கையான மரம் செடிகொடிகள் மட்டுமல்ல பறவை, விலங்குகள் மற்றும் மனிதர்கள் கூட மகிழ்கின்றனர்.
எனக்கு மழையை அதிகம் பிடிக்கும். அதில் நனையவும் பிடிக்கும். மழைநீரில் காகித கப்பல் செய்து விளையாடவும் பிடிக்கும்.
மழை பெய்யும் போது மண்ணிலிருந்து எழும் புழுதியின் மணம் எனக்கு அதிகம் பிடிக்கும். இதமான குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தால், அது மனதிற்கும் மகிழ்வைத் தரக்கூடியதாக இருக்கும். எனவே எப்பொழுதெல்லம் மழை பெய்கிறதோ, அப்பொழுதெல்லாம் என் மனதில் மகிழ்ச்சி என்னும் நீரூற்றுப் பாய்ந்தோடும்.
ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக
- செல்லுதே – சேமித்தே
- ஓடியே – இல்லையே
- இல்லையே – தேவையே
- போலவே – செழிக்கவே
- செழிக்கவே – ஓங்கவே
- வேண்டுமே – தீர்ப்பமே
- தீர்ப்பமே – செய்வமே
முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக
- பொன்னும் – பொழியும்
- குளங்கள் – குருவி
- வானின் – வாழ்வைச்
- விண்ணின் – வியப்பு
- மழைநீர் – மண்ணில்
- உழைப்பின் – உயர்வாய்
- உழவும் – உற்ற
இரண்டாவது எழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக
- மனிதர் – இனிவரும்
- மழைநீர் – உழைப்பின்
- நாடும் – வீடும்
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக
1. பொழியும்
- பெய்தல்
- நிறைந்து
- வழி
2. செம்மை
- சிவப்பு
- நேர்மை
- பெருமை
3. ஓங்குதல்
- வளர்தல்
- பெருமையடைதல்
4. இல்லம்
- வீடு
- தேற்றாமரம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “தேக்குதல்” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ______________
- நீக்குதல்
- தெளிதல்
- சேமித்தல்
- பாதுகாத்தல்
விடை : நீக்குதல்
2. “வானின் அமுதம்” இச்சொல் குறிப்பது ____________
- அமிழ்தம்
- அமிர்தம்
- சோறு
- மழைநீர்
விடை : மழைநீர்
3. “மழையாகுமே” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
- மழை + யாகுமே
- மழையாய் + யாகுமே
- மழை + ஆகுமே
- மழையாய் + ஆகுமே
விடை : மழை + ஆகுமே
4. “நினைத்தல்” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________________
- கூறுதல்
- எண்ணுதல்
- மறத்தல்
- நனைத்தல்
விடை : மறத்தல்
“பொன்னும் பொருளும்” இது போன்ற “உம்” சேர்ந்துவரும் சொற்களைப் பாடலிருந்து எடுத்து எழுதுக
- வீடும் – நாடும்
- உழவும் – தாெழிலும்
- வளமும் – நலமும்
- ஓடும் – முழுதும்
இணைந்து செய்வோம்
பொருத்துவோமா?
1. நாடும் வீடும் | வேண்டுமே |
2. வளமும் நலமும் | சேமிப்போம் |
3. இல்லத்தின் நீரை | மழையாகுமே |
4 .உற்ற துணை | செழிக்கவே |
5. உயிராய் எண்ண | நிறைந்திட |
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
சொல்லக் கேட்டு எழுதுக
மழைநீர் | வெள்ளம் |
தண்ணீர் | கொடை |
ஓங்குதல் | போற்றுவோம் |
குளங்கள் | வியர்வை |
இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படித்து பார்ப்போம். விடுபட்ட இடத்தை நிரப்பி மகிழ்வோம்.
மாலா போலாமா? | குடகு |
யானை பூனையா? | பாப்பா |
மேளதாளமே | தாத்தா |
மாறுமா | காக்கா |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…