TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 8.1 – நமது அடையாளங்களை மீட்டவர்

8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 8.1 – நமது அடையாளங்களை மீட்டவர். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Namathu Adayalangalai Metavar

12th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

  1. தனித்தமிழ்த் தந்தை – மு. வரதராசனார்
  2. ஆராய்ச்சிப் பேரறிஞர் – மயிலை சீனி. வேங்கடசாமி
  3. தமிழ்த் தென்றல் – திரு.வி.க.
  4. மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

விடை : தனித்தமிழ்த் தந்தை – மு. வரதராசனார்

2. ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்

  1. பெளத்தமும் தமிழும்
  2. இசுலாமும் தமிழும்
  3. சமணமும் தமிழும்
  4. கிறித்தவமும் தமிழும்

விடை : கிறித்தவமும் தமிழும்

குறு வினா

1. ’தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.

  • அழகுக் கலைகள் பற்றி தமிழல் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக அமையும் நூல்.
  • தமிழக அரசின் முற்பரிசைப் பெற்ற நூல்

2. ’விரிபெரு தமிழர் மேன்மை
    ஓங்கிடச் செய்வ தொன்றே
     உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப்பணியை உயிர்ப் பணியாக கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.

சிறு வினா

மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கைய ஊட்டியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி இவர் எழுதி முடித்த புத்தகங்கள் புதையல்களாக விளங்குகின்றன.
  • சமயம், மானுடவியல், தொல்பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி போன்றவற்றை புலமை பெற்றவர்.
  • தமிழில் “தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்” குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதல்பரிசு பெற்ற நூல் ஆகும்.

நெடு வினா

மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.

  • மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மொழிக்கு முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவரது ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் அறிவு விருந்தாகிறது.
  • பல ஆய்வுகள் கிளைவிட இவரது ஆய்வுகள் அடி மரமாக அமைந்தது.
  • இவரது ஆய்வுகள் அனைத்தும் வேண்டியது, வேண்டாதது என்றோ, ஒதுக்கமுடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்கிறது.
  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகம் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து மொழிக்கு தொண்டாற்றியமைக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும், மதுரைப் பல்கலைக்கழம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருதும் வழங்கியது.
  • ஓயாத தேடலினாலும், கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த மாமனிதருக்கு சென்னை கோகலே அரங்கில் மணிவிழா எடுத்து “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
  • தமிழ்த் தேனீ என்றால் நம் மயிலை சீனியைத்தான் குறிக்கும்.
  • எப்போதும் அவரது கால்கள் அறிவை நோக்கியே நகர்ந்தன.
  • இவர் நூலகத்தைத் தன் தாயமாகக் கொண்டு அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கினார்.
  • இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டி தவறுகளை மறுத்து எடுத்துரைக்கும் ஆய்வு அணுகுமுறை கொண்டவர்.
  • சமயம், கலை, இலக்கியம், கிறுத்தவமும் தமிழும், பெளத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற ஆய்வு நூல்களை எழுதியும், வட்டெழுத்து கோலெழுத்து தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமைப் பெற்று பன்முகங்கள் கொண்டு விளங்கினார்.
  • இத்தகு காரணங்களைக் கொண்டு நாம் மயிலையாரை ஆய்வு செய்கின்றபோது அவர் ஓர் சிறந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற கூற்று சாலப் பொருந்தும்.

கற்பவை கற்றபின்…

1. உங்கள் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவரின் பணிகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

குறிப்பு:

தமிழறிஞர் சிலம்பு நா.செல்வராசு அவர்கள் புதுச்சேரி மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருபத்து ஓர் ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த ஆய்வாளர். ‘தமிழறிஞர்’ நெறியாளர் என்ற வரிசையில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும் இவர் ஆய்வரங்கள், பதிப்புப் பணி போன்ற துறைகளில் பணியாற்றி வரும் இவர் கலைமாமணி, தமிழ் செம்மல் விருது தமிழறிஞர் விருதுகள் பல பெற்று ஆய்வு மாணவர்களோடு தாமும் ஆய்வாளராக வாழ்ந்து வருகிறார்.

கலந்துரையாடல்

சூர்யா வள்ளி, நேற்று நம் ஆசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களைப் பற்றி வகுப்பில் பேசினார் அல்லவா! அதில் சிலம்பு என்ற ஏன் பெயர் வந்தது.
வள்ளி அதுவா! தமிழ்நாட்ல சில பேருக்குதான் பொருந்தும் அவர்களில் ஒருவர் நா.செல்வராசு
சூர்யா எனக்கு கொஞ்சம் விபரமா சொல்லு.
வள்ளி நா.செல்வராசு ஐயா சிலப்பதிகாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அது மட்டுமல்லாமல் தம்மை முழுமையாக சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டவர். சிலம்பு என்ற பெயரை அவரின் குருநாதர் வைத்த பெயராம்.
சூர்யா மகிழ்ச்சி! ஐயா எப்பொழுது இருந்து ஆய்வுப் பணி செய்கிறார்.
வள்ளி 1984 முதல் இன்று வரை சங்க இலக்கியத்தில் நிறைய ஆய்வு செய்துள்ளார்.
சூர்யா அவர் செய்த ஆய்வுகள் எனக்குச் சில சொல் முடியுமா?
வள்ளி ஒ சொல்றேன். பண்டைய தமிழரின் திருமண வாழக்கை, கண்ணகி தொன்மனம், வள்ளி முருகன் வழிபாடு
சூர்யா தொன்மன் என்றால் என்ன?
வள்ளி பழங்காலத்துத் கதை, உண்மைச் சம்பவம் அல்லது வரலாற்று நிகழ்வு
சூர்யா இவரைப் பற்றி ஏதாவது சிறப்பு இருக்கா?
வள்ளி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவர் பதினெட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் முப்பத்தெட்டு ஆய்வில் நிறைஞர்களையும் உருவாக்கியவர் ஆவார். இவர் முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் தம் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மயிலை சீனி. வேங்கடசாமி ஆசிரியப் பயிற்சி பெற்று, தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள்

  1. 25
  2. 35
  3. 20
  4. 30

விடை : 25

3. 1934-ல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிபேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘கிறித்துவமும் தமிழும்’ என்ற பொருள் குறிறித்து உரையாற்றியவர்

  1. கா. சுப்பிரமணியர்
  2. விபுலானந்த அடிகள்
  3. ச.த சற்குணர்
  4. திரு.வி.க

விடை : ச.த. சற்குணர்

4. மயிலை சீனி. வேங்கடசாமி புலமை பெற்றிருந்த நூல்கள்

1. வட்டெழுத்து 2. கோலெழுத்து 3. தமிழ் பிராம்மி
  1. 1, 2 சரி
  2. 1, 3 சரி
  3. 2, 3 சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

குறுவினா.

1. மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பு வரைக

  • பெயர் – மயிலை சீனி. வேங்கடசாமி
  • பிறப்பு – 16.12.1900
  • ஊர் – மயிலாப்பூரில்
  • பெற்றோர் சீனுவாசன் – கோவிந்தம்மாள் ஆவர்.
  • பணி – பள்ளி ஆசிரியர், இதழ் ஆசிரியர், ஆராய்ச்சியாளர்

2. மயிலை சீனி. வேங்கடசாமி எதன் அடிப்படையில் இன வரலாற்றை எழுதினார்?

இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு

3. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் வெளியான இதழ்களைக் குறிப்பிடுக

குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி

4. மயிலை சீனி. வேங்கடசாமி எம்மொழிகளெல்லாம் புலமையுடைவர்?

மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்

5. மயிலை சீனி. வேங்கடசாமி வெளிப்படுத்திய அரிய செய்தியினை எழுதுக

சேரன் கொடிக்கு வில், சோ ழன் கொடிக்கு புலி, பாண்டியன் கொடிக்கு மீன் என்று மரபான சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ள ன. மற்ற சின்னங்கள் பற்றிய குறிப்புகள் ஆய்வுலகு அறியாதவை. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.

6. மயிலையார் எதற்காக தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலினை எழுதினார்?

  • “தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழகுக் கலைச்செல்வங்களை மறந்தன.
  • தன்பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது;
  • ‘கலை கலை’ என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே;
  • இலக்கியக்கலைகூட அதிகமாகப் பேசப்படுவதில்லை;
  • ஏனைய அழகுக் கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர்;
  • எனவே இந்நூல் எழுதப்பட்டது”

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment