TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 6.1 – திரைமொழி

6.1 திரைமொழி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 6.1 – திரைமொழி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Thiraimozhi

12th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

வேறுபட்டதைக் குறிப்பிடுக.

  1. அண்மைக் காட்சித் துணிப்பு
  2. சேய்மைக் காட்சித் துணிப்பு
  3. நடுக் காட்சித் துணிப்பு
  4. காட்சி மறைவு

விடை : காட்சி மறைவு

குறு வினா

பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.

  • பின்னணி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக் கொணர உதவும் மற்றொரு கலை
  • பின்னணி இசைச்சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
  • இசை பாத்திரங்களின் மனக்கவலைகள், அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் இருக்கவேண்டும்.

சிறு வினா

திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

காட்சியின் முக்கியத்துவம்:-

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
  • திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான்.
  • திரைப்படத்தில் வசனம் இன்றி, காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன்மூலம் கதை சொல்வார்கள்.

சான்று:-

  • முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீ ட்டைக் கொடுப்பாள்;
  • அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்!
  • “எண் 7, வீ ரையா தெரு…” என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.

இவ்விரண்டு தரவுகளிலும் காட்சி அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நெடு வினா

திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக. 

திரைப்படத்துறை – ஒரு கலை

புதுமை வாழ்வில் எத்தனையோ அற்புதங்களைக் கண்டு மகிழ்கிறோம். நாடகத்தின் மறுமலர்ச்சியாக, மக்களை மயக்குமும் கலையாக திரைப்படத்துறை தவிர்க்க முடியாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறை வளர்ச்சியின் பின்னால் எத்தனைத் துறைகள் அடங்கியருப்பது பற்றி யாரும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.

சான்றாக கதை, கதை-உணர்த்தும் நீதி, எண்ணத்தை ஈர்க்கும் வசனம், கதாநாயகன், நாயகிகள் தீர்வு, ஆடை அலங்காரம், இடங்கள் தேர்வு, புகைப்படக்கருவி, நடனகுழுக்குள் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இதற்குள் எத்தனையே நிகழ்வுகள் உள்ளன.

எல்லா கலைஞர்களும் அருகி வரும் நிலையில் இத்துறையின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை கோடிகள், எவ்வளவு செலவீனஙகள் என வளர்ந்து கொண்டே போகும். இதற்கு இடையில் குடும்பப் படங்கள், அரசியல் படங்கள், பக்திப் படங்கள் என்றும் பற்பல பிரிவுகளில் எடுக்கப்படுகின்றன.

இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு பிரிவிலும் விற்பன்னர் தேவைப்படுகிறார்கள். வசனம் (பேச்சுக்கலை), (கேமரா) படமெடுப்பதில் கலையம்சம், ஒலிப்பதிவுக்கலை, ஒளிப்பதிவுக் குழு நடனக்கலை என ஒட்டுமொத்த கலைஞர்களால் மட்டும் தான் இது நடந்தேறி வருகிறது.

கணினி சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகளாலும் உதவியாலும் இத்துறை மெருகூட்டப்படுகிறது. கண்டுபிடிப்புகள் அதிகமானாலும் கலையம்சம் நிறைந்தது திரைப்படத்துறையே, எனவே கலைகளின் சங்கமம் எனபது பொருத்தமானதே.

திரைப்டத்துறை ஆயிரம் பேரையல்ல, ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது. கேளிக்கைகள் நிறைந்த இவ்வுலகில் திரைப்படத்துறைக்கு மட்டும் கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், ஒப்பனைக்காரர்கள், ஆடை அலங்கார வல்லுநர்கள், ஆண் – பெண் நடனக்குழுக்கள், சண்டைக் காட்சிகளில் பங்குபெற எதிர்த்தலைவன் மற்றும் துணைவர்கள், உதவியாளர்கள் எத்தனையோ ஆட்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.

திரைப்படத்துறையில் மட்டும் கால் வைத்து விட்டால் அவர்களுக்கு மற்ற தொழில் மறந்து விடுகிறது. எல்லாம் இருந்தவர்கள் ஏன் இத்துறைக்கு வருகிறார்கள் என்று தெரிவதில்லை. சென்னை – கோடம்பாக்கத்தில் கலைத்துறை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இதை நம்பியே வாழ்ந்து வருகின்றன.

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப்பணி” என்பது போல அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுக்கும் துறையாக திரைப்படத்துறை திகழ்கிறது. இந்தக் கலையை கற்க முடியாது. பயிற்சியால் தான் பெற முடியும். மறவோம் கலைஞர்களை! மதிப்போம் கலைஞர்களை!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சிறவனான சாப்ளின் மேடையேறி ஆடிப்பாடக் காரணமாக அமைந்தது

  1. மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்
  2. இயற்கையிலேயே மேடையில் அடிப்பாட வேண்டும் என்ற சார்லி சாப்ளின் ஆசையினால்
  3. நண்பர்கள் மேடையேறியே ஆக வேண்டும் என்று சாப்பினை வலியுறுத்தியதால்
  4. இவற்றில் ஏதுவுமில்லை

விடை : மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்

2. சார்லி சாப்ளினது “மார்டன் டைம்ஸ்” படம் எற்படுத்திய தாக்கம்

அ) அன்றைய தொழில் மய உலகின் கேடுகளை விமர்சனம் செய்வதாக இத்திரைப்படம் அமைந்தமையால் சாப்ளினுக்குப் பொதுவுடைமையாளர் என்னும் முத்திரை விழுந்தது.

ஆ) பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது

இ) இருந்தாலும் படம் வெற்றி பெற்றது.

  1. அ, ஆ சரி
  2. ஆ, இ சரி
  3. அ, இ சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

3. சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்த ஆண்டு

  1. 1940
  2. 1950
  3. 1952
  4. 1942

விடை : 1950

3. சார்லி சாப்பிளினுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்னும் வகையில்  வழங்கப்பட்ட விருது

  1. கோல்டன் குளோப்
  2. ஆஸ்கார்
  3. பிரவு டு ஆஃப் அமெரிக்கா
  4. கோல்டர் வேர்ல்டு

விடை : ஆஸ்கார்

4. மனைவியின் வைரமாலையை விற்று, பிரெஞ்சக்காரர் டுபான் என்பவரிடமிருந்த 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜெக்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கியவர்

  1. தியாேடர் பாஸ்கரன்
  2. அஜயன் பாலா
  3. சாமிக்கண்ணு வின்சென்ட்
  4. அம்ஷன் குமார்

விடை : சாமிக்கண்ணு வின்சென்ட்

5. சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று வறிவந்த விமர்சர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்

  1. தி கிரேட் டிக்டேட்டர்
  2. தி கிட்
  3. தி கோல்டு ரஷ்
  4. தி சர்க்கஸ்

விடை : தி கிரேட் டிக்டேட்டர்

6. “தி கிரேட் டிக்டேட்டர்” படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்திட சார்லி சாப்ளினால் உருவாக்கப்பட்ட பாத்திரம் ………..

  1. ஹென்றி
  2. ஹென்கோல்
  3. மீலி
  4. ஆடம்ஸ்

விடை : ஹென்கோல்

7. சார்லி சாப்ளினது “மார்டன் டைம்ஸ்” வெளியான ஆண்டு …..

  1. 1932
  2. 1934
  3. 1936
  4. 1938

விடை : 1936

பொருத்துக

1. LONG SHOT அ. மீ அண்மைக் காட்சித்துணிப்பு
2. MID SHOT ஆ. அண்மைக் காட்சித்துணிப்பு
3. CLOSEUP SHOT இ. நடுக்காட்சித்துணிப்பு
4. EXTREME CLOSEUP SHOT ஈ. சேய்மைக்காட்சித்துணிப்பு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறுவினா

1. திரைப்படம் என்றால் என்ன?

கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மைச் சூழ்ந்த பெருங்கனவே திரைப்படம் எனப்படும்.

2. திரைக்கதை – விளக்கு

  • படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைவது திரைக்கதை.
  • திரைக்கதைகள் பலமுறை எழுதி, பலமுறை படித்துப் பார்த்துத் திருத்தி உருவாக்குவது.
  • இத்தகைய உழைப்பு உள்ள திரைக்கதை மக்கள் மனதில் நிற்கும்.

3. முப்பரிமாணக்கலை என்றால் என்ன?

திரைப் படத்தில், நடிப்பவரை முன் பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடிப்பது முப்பரிமாணக் கலை என்கிறோம்.

4. சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

பேருந்தைப் பிடிக்க , சாலையைக் கடக்கும்போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவு செய்வது  சேய்மைக் காட்சித்துணிப்பு எனப்படும்

5. மீ அண்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

காலிலிருந்து செருப்பைக் கழற்றி வாசலில் விடும்போது, கண் கீழே குனிந்து செருப்பை மட்டும் பார்க்கிறது, இது மீ அண்மைக் காட்சித்துணிப்பு எனப்படும்

6. ஒற்றைக்கோணக் கலை என்றால் என்ன?

ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.

7. நேரேட்டர் என்றால் என்ன?

நேரேட்டர் என்பதன் பொருள் “கதை சொல்லி” என்பதாகும். திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கு திரைக்கு அருகே ஒருவர் ஒலி வாங்கியைப் பிடித்துக் கதை சொல்லுபவரை நேரேட்டர் என்பர். அவர் வந்து நின்றாலே அனைவரும் கைத்தட்டுவர்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment