TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 5.5 – தலைக்குளம்

5.5 தலைக்குளம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 5.5 – தலைக்குளம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Thalaikulam

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • தோப்பில் முகமது மீரான் எழுதிய ’ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை இது.
  • தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
  • இவர் தமிழிலும், மலையாளத்திலும் படைப்பவர்.
  • புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருபவர்.
  • இவர் எழுதிய ‘சாய்வு நாற்காலி’ எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
  • துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.

தெரிந்து தெளிவோம்

  • உம்மா – அம்மா
  • வாப்பா – அப்பா
  • ஏச்சு – திட்டுதல்
  • கடவு – படித்துறை
  • கன்னியார் கோணம் – ஒரு வயற்காட்டின் பெயர்
  • உப்பா – தாத்தா
  • பாவாத்து – துணி நெய்ய வேண்டிய நூலுக்குப் பசை கொடுப்பது
  • சுள்ளைக்கு உள்ளிருந்து – (செங்கல்) நெருப்புச் சுள்ளைக்கு உள்ளிருந்து
  • அடிபற்றி இருக்கும் – அடித்தரை தெரியும்படி இருக்கும்
  • வேசாடையாக – சற்றுக் கோபமாக
  • அமானிதம் பாதுகாக்கப்பட வேண்டிய விசயம்
  • ஏலாவிலிருந்து – பெரிய வயலில் இருந்து
  • முக்கால் மூண்டானி – ஒரு அளவு
  • புன்ன மூட்டடி – புன்னை மரத்தின் நிழல

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க. 

முன்னுரை:-

மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, புலம்பெயர்வு, தலைமுறை மாற்றம் இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் முகவரியை இழக்கின்றன

நகரத்தை நோக்கிச் செல்ல காரணம்:-

  • இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் கால மாற்றத்தாலும், பல்வேறு காரணங்களினாலும் கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
  • பெரும்பாலும் கிராமங்கள் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது.
  • அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை.
  • முறையான தொலைத்தொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காணப்டுவதில்லை.
  • இந்தியாவில் 57 மில்லியன் குழந்துைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே.
  • இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
  • நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சம வாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர்.
  • மிகச்சரியான உள்கட்டமைப்புடன் கூடிய தரமானக் கல்வி, போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நோக்கி இடம் பெயர்கின்றன.

அடிப்படை வசதியை நோக்கி நகர்வு:-

  • வறுமை கல்வியல் பின்னடைவு, குழந்தைத் தொழிலாளர் போன்றவை இன்னும் கிராமங்களில் காண முடிகிறது.
  • மின்சாரம், பேருந்து வசதி, தொழிற்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் நகர வாழ்க்கையை நாடுகின்றனர்.
  • சாதிப் பாகுபாடு இல்லாமல் தரமான கல்வியோடு தொழிற்கல்வி, போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் பயிலிகம், மின்னணு போன்ற நிறுவனங்கள் நகர்புறத்தில் மேலோங்கி வருவதால் கிராமங்களை மக்கள் வெறுக்கின்றனர்.
  • இன்று நகரம் என்பது கிராமத்தவிட பெரிய மனித குடியிருப்பு உள்ளதாக அமைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வங்கிகள், வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைகிறது.

முடிவுரை:-

இத்தகைய காரணங்களால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறம் நோக்கிச் செல்கின்றன. இதனால் கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து முகவரியற்று கதியின்றி அமைகிறது.

கற்பவை கற்றபின்…

1. நீங்கள் இருக்கும் ஊரைச் சிறப்புடன் வாழ ஏற்றதாய் மாற்ற மேற்கொள்ளும் வழிமுறைகளைத் தொகுக்க.

  • கழிவுநீர் வாய்க்கால் ஊரின் உள்ளே கழிவுநீர்த் தேங்காமல் செய்தல் வேண்டும்.
  • உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியினை மாதம் இருமுறை குளோரின் போட்டு சுத்தம் செய்தல் வேண்டும். காரணம் குடிக்கும் நீரால் தான் அனைத்து நோய்களும் உருவாகுவதால் கவனம் செலுத்த வேண்டும்.
  • வீட்டுக் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல், துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
  • தெருவில் இடம் இருப்பின் வேப்பங்கன்று, புன்கன் கன்று இவற்றை நட்டு பராமரிக்கலாம்.
  • ஆடு, மாடுகளைத் தெருவில் இரவு நேரங்களில் கட்டி அசுத்தம் செய்யக் கூடாது.
  • தேவை இல்லாமல் தெருக்குழாய்களில் தண்ணீரைத் திறந்து விடுதல் கூடாது.
  • தெருக்குழாய்களிலேயே குளிப்பது,  துணி துவைப்பது கூடாது.
  • சாலையோரங்களில், வெளியிடங்களில் மலம் கழிக்கக் கூடாது. எனெனில்  மலம் கழிப்பதால்தான் மிகத் தொற்று நோய்கள் பரவுகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பொது நலம் காக்கும் எண்ணம் இயல்பாக இருக்க வேண்டும்.
  • மேலும் தெருக்களில் எதையும் எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • சுத்தம் சோறு போடும் என்று எண்ண வேண்டும் – சுற்றுபுறமே சுகாதாரம்.

2. கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டினைப் பற்றியும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் பெரியோர்களிடம் அறிந்து வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.

மாணவர்களே வணக்கம், வாழ்த்துக்கள்

நாங்கள் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்திருக்கும் வீடு – சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி நான் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

  • பண்புடையவர்களால் தான் இன்னும் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சான்றோர் கூறுவர்.
  • நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பத போல நல்லவர்களால் தான் மழை பொழியும்.
  • உள்ளத்தால் (ஒருவன்) பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
  • மேற்கண்ட பொன் மொழிகளுக்கு ஏற்ப என் குடும்பத்தார், என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவர்கள்.
  • அன்புடையவர்கள், புறம் பேசாதவர்கள், பொய் பேசாதவர்கள், ஒப்புரவு உடையவர்கள், உண்டை விளம்பிகள் என எல்லா நற்குணங்கள் பெற்றவர்களாக வாழ்த்திருக்கிறார்கள்.
  • அவர்களின் வழித்தோன்றலாகிய எங்களை ஊரில் அன்புடன் நடத்துவர்.
  • உயிர்களிடத்து அன்பு வேணும் – என்னும் கொள்கையோட வாழ்ந்தால் ஊர் மக்களும் எங்கள் குடும்பத்தையே எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
  • வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை.

எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் பிறர் விரும்புமாறு நல்லதை செய்து நலமோடு வாழுங்கள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. தோப்பில் முகமது மீரான் எழுதிய கதை

  1. ஊரும்பேரும்
  2. தலைக்குளம்
  3. போரும்அமைதியும்
  4. கோடையும் வசந்தம்

விடை : தலைக்குளம்

2. 1997-ல் சாகித்திய அகாதெமி விருதினை பெற்ற “சாய்வு நாற்காலி” என்னும் புதினத்தினை எழுதியவர்

  1. புதுமைபித்தன்
  2. சண்முகசுந்தரம்
  3. ஜெயகாந்தன்
  4. தோப்பில் முகமது மீரான்

விடை : தோப்பில் முகமது மீரான்

3. பொருந்தியவற்றை எழுதுக

  1. உம்மா – அம்மா
  2. வாப்பா – திட்டுதல்
  3. ஏச்சு – அப்பா
  4. கடவு – படித்துறை

விடை : உம்மா – அம்மா

பொருத்துக

1. புதுமைபித்தன் அ. மலைவெடிப்பு
2. சண்முகசுந்தரம் ஆ. சூரிய வெப்பம்
3. ஜெயகாந்தன் இ. அஞ்சிய
4. தி.ஜானகிராமன் ஈ. விரைவு
5. தோப்பில் முகமது மீரான் உ. நெல்லைத் தமிழ்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – அ

குறு வினா

1. தோப்பில் முகமது மீரான் – குறிப்பு வரைக

  • 1944-ல் தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார்.
  • இவர் தமிழிலும், மலையாளத்திலும் படைப்பவர்
  • புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலகங்கியத் தளங்களிலும் இயங்கி வருபவர்.
  • இவர் 1997-ல் “சாய்வு நாற்காலி” என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினை பெற்றுள்ளார்.
  • இவரின் துறைமுகம், கூனன்தோப்பு ஆகிய படைப்புகள்  தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.
  • இவர் எழுதிய இப்பாடப் பகுதியிலுள்ள கதை “ஒரு குட்டித் தீவின் வரைபடம்” என்ற சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment