8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 8.6 – மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
இலக்கணத் தேர்ச்சி கொள்
1. திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக?
நூல்களே, இதழ்களோ பிழைகளோடு வெளிவந்தால் படிப்பவர் கருத்துகளைத் தவறாக உணர்வர். எனவே எழுத்துப்பிழை, தொடர்பிழை, மயங்கொலிப்பிழை, ஒருமை பன்மைப் பிழை இல்லாமல் திருத்தமாக அச்சிட வேண்டும். அச்சுப்படி (மெய்ப்பு) திருத்துபவர், இப்பணியைச் செய்வதற்குரிய நெறிமுறைகளை திருத்தக் குறியீடுகளை தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்
அகப்படி திருத்துபவர் அறிந்திருக்கவேண்டிய குறியீடுகளை ஐந்து வகையாக பிரிப்பர்.
- பொதுவானவை
- நிறுத்தக்குறியீடுகள் தொடர்பாவை
- இடைவெளி தரவேண்டியவை
- இணைக்க வேண்டியவை
- எழுத்து வடிவம்
i. பொதுவானவை:-
குறியீடு | குறியீட்டுப்பொருள் |
Dt | அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக |
^ | சொல்லையோ எழுத்தையோ இந்த குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க |
[ | புதிய பத்தி (New Paragraph) தொடங்குக |
ii. நிறுத்தக் குறியீடுகள்:-
குறியீடு | குறியீட்டுப்பொருள் |
, / | கால் புள்ளியை சேர்க்கவும் |
; / | அரைப்புள்ளியை சேர்க்கவும் |
. / | முற்றுப்புள்ளியை சேர்க்கவும் |
? / | வினாக்குறியை இடவும் |
! / | வியப்புக்குறியை சேர்க்கவும் |
: / | முக்காற்புள்ளியை சேர்க்கவும் |
iii. இடைவெளி தரவேண்டியவை:-
குறியீடு | குறியீட்டுப்பொருள் |
சொற்களை அல்லது எழுத்துக்களைச் சேர்க்கவும் இடைவெளி வேண்டாம். | |
# | பத்திகளுக்கு இடையில், வரிகளுக்கு இடையில், சொற்களுக்கு இடையில் இடைவெளி தருக |
iv. இணைக்க வேண்டியவை:-
குறியீடு | குறியீட்டுப்பொருள் |
இடப்பக்கம் தள்ளவும் | |
வலப்பக்கம் தள்ளவும் | |
பத்திகளை இணைக்கவும் | |
ஒற்றை மேற்கொள்குறியீடு இடுக | |
இரட்டை மேற்கொள்குறியீடு இடுக |
v. எழுத்துவடிவம்:-
குறியீடு | குறியீட்டுப்பொருள் |
Unbold | கால் புள்ளியை சேர்க்கவும் |
Bold | பத்திகளுக்கு இடையில், வரிகளுக்கு இடையில், சொற்களுக்கு இடையில் இடைவெளி தருக |
Trs | சொற்கள், எழுத்துகளை இடம் மாற்றுக |
I.C. | எத்துருவைச் சிறியதாக்க |
நிறுத்தற் குறியீடுகளின் தமிழ்ப் பெயர்கள் |
||
Apostrophe | ‘ | காற்புள்ளி |
Semicolon | ; | அரைப்புள்ளி |
Colon | : | முக்காற்புள்ளி |
Colondash | : & | வரலாற்குக்குறி |
Double Brackets | { } | இரட்டைப் பிறைக்கோடு |
Dash | & | இடைக்கோடு |
Bar | / | வெட்டுக்கோடு |
Brackets | ( ) | பிறைக்கோடு |
Ditto Mark | “ | மேற்படிக்குறி |
Large Brackets | [ ] | பகர அடைப்பு |
2. ஏற்ற இடங்களில் அச்சுத் திருத்தக் குறியீடுகளை பயன்படுத்தும் முறையக் கீழ்கண்ட பத்தியின் மூலம் அறிக
கவிஞர் கண்ணதாசன், கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தத. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும், கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. கைத்தட்டல்கள் முடிந்துதும், கண்ணதாசன் சொன்னார், “இன்று நான் வாசித்த கவிதை, நான் எழுதியது அன்று. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர், நேற்று கவிதையை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே, நான் ஏதிய கவிதையை அவரை வாசிக்கும்போது, எந்தவித ஆரவாமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்த போது, பலத்த வரவேற்பு,. ஆக சொல்பன் யார் என்பதைத் தான் உலகம் பார்க்கிறதே ஒழியச் சொல்லும் பொருளை பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”
3. அச்சுப்படி திருத்துபவரின் பணிகள் யாவை?
- அச்சுப்படியில் ஒவ்வொரு வரியையும் படித்து, மூலப்படியில் உள்ளபடியே செய்திகள் அச்சாகி உள்ளனவா என கவனிக்க வேண்டும்.
- செய்தியின் உள்ளடக்ம், புள்ளி விவரங்கள், எளண்கள், அட்டவணைகள், முதலிய விடுபட்டுள்ளனவா என்பதை, மூலப்படியுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும்.
- அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ, உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது.
- பிழை எற்பட்ட சொல்லின் மீது திருத்தத்தை எழுதக்கூடாது. வலமாகவே இடமாகவோ ஓரத்தில் எழுத வேண்டும்.
- ஒரு வரியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிழைகள் இருந்தால், பிழைகளை குறிக்கும் கோடுகளை தெளிவாக காட்டல் வேண்டும்.
- பிழைகள் பல இருந்தால், அதை நீக்கித் தெளிவாக எழுத வேண்டும்.
- அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ண மையால் திருத்த வேண்டுமம்.
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
திரு.வி.கலியாணசுந்தரனார்
“பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை உற்று நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவர் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அரிக்கின்றன; எரிக்கின்றன; இந்நோய்களால் குருயோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டனும் ஒளியே அவர் நோய்குரிய மருந்து. அவ்வொளி வீச எழுங்கள்; எழுங்கள்” என்று இளமைவிருந்து நூலில் தமிழைனனக் கட்டுகுள் அடக்காமல் செழுமையுறச் செய்ய இளையஞர்களை அழைத்வர் திரு.வி.க.
திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார். வெஸ்லி பள்ளியில் படித்தபோது நா.கதிரைவேல் என்பவரிடம் தமிழ்ப்ப படித்தார். பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார். தமிழ்த்தென்றல் என்று அழைக்ப்படும் திரு.வி.க. பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்திறவு, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய நூல்களை எழுதினார். சிறந்த மேடைப்பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய இவர் தேசபக்கதன், நவசக்தி இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார்.தமிழ் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தொழிலாளர்களின் உரிமைக்கும், முன்னேற்த்திற்கும் பாடுபட்டார். சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இலக்கியப்பயிற்சியும், இசைப்பயிற்சியும் பெற்றவர்.
கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி
1. பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள் – ஒரே தொடாராக மாற்றுக
பொறுமையைப் பூண்டு அதன் ஆற்றலை உணர்ந்து உலகை நோக்குங்கள்
2. எவையேனும் இரண்டு முன்னிலைப் பன்மை வினைமுற்றுச் சொற்களைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக
நோக்குங்கள், உணருங்கள்
3. தமிழ்த்தென்றல் என்று திரு.வி.க அழைக்கப்படுகிறார் – இத்தொடரை செயவினைத் தொடராக மாற்றுக
திரு.வி.க தமிழ்த்தென்றல் என அழைக்கின்றனர்
4. ஞாயிற்றொளி – புணர்ச்சி விதி கூறுக
ஞாயிற்றொளி = ஞாயிறு + ஒளி
- “நெடிலோடு உயிர்தொடர்க் குற்றுகரங்கள் டறஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “ஞாயிற்று + ஒளி” என்றாயிற்று.
- “உயிரி வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “ஞாயிற்ற் + ஒளி” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “ஞாயிற்றொளி” என்றாயிற்று.
5. எண்ணும்மைத் தொடர்கள் இரண்டனை எடுத்து எழுதுக
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
- இந்தியாவும் விடுதலையும்
தமிழாக்கம் தருக
1. An eye for an eye only ends up making the whole world blind.
விடை : கண்ணுக்குக் கண் எனப் பழிவாங்கும் செயல், முடிவில் உலகம் முழுவதையுமே குருடாக்கிவிடும்.
2. You must be the change you wish to see in the world.
விடை : இந்த உலகத்தில் மாற்றத்தைக் காண விரும்பினால், நீ முதலில் மாற வேண்டும்.
3. The week can never forgive. Forgiveness is the attribute of the strong.
விடை : வலிமை இல்லாதவன் மறக்க மாட்டான். மறப்பது என்பது வலிமையானவரின் உயர்பண்பு.
4. Nobody can hurt me without my permission.
விடை : என் அனுமதி இல்லாமல் என்னை எவரும் வேதனைப்படுத்த முடியாது.
5. You must not lost faith in humanity. Humanity is an ocean, if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty. – Mahatma Gandhi
விடை : மனித இனத்திடம் நீ நம்பிக்கையை இழக்கக்கூடாது. மனித இனம் என்பது பெருங்கடல். அதில் சில துளிகள் அழுக்ககாக இருந்தால், கடலே அழுக்கடைந்து விடாது. – மகாத்மா காந்தி
இலக்கிய நயம் பாராட்டுக
இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதைய ஈன்ற
மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை
ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த
மண்பானையைத்தேடி அல்லலுற்றது.
பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன
கதைக்குள்ளிருந்து நீருற்று எதுவும் பீறிடவில்லை
ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி
அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக…
நீலவண்ண கடற்பரப்பில்
அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது
அதன் குஞ்ச பொரிப்பில்
ஆயுதமும் புல்லாங்குழலும் மறுகையுமாய்
அணங்கொருததி உதித்தெழுந்தாள்
வயல்வெளியெங்கும் சலசலத்து திரிந்த
மருதயாழின் ஓசை வழிந்தோட
கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்
பிரபஞ்சமே தன்னை புனைந்து கொண்டது
பாணனின் கோப்பை
இப்போது காலியாயிருந்து
தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்த பூவை
குழந்தைக்கு தந்து வலியில் மூழ்கிய
பச்சைத்தாவரத்தின் கண்களில்
ஒருதுளி ரத்தம் தேங்கியிருந்து
சங்கக் கவிதையின் எகுத்தொன்றைத்திறந்து
காக்கைப்பாடினி வெளியேவந்தாள்
ஆறாம்நிலத்தில் துளிர்ந்த அறிவியல்தமிழி நீயென
அருகே வந்தவள் முத்தம் தருகையில்
பறவைகள் தொலைந்துபோன பூமியில்
குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து
கணிப்பொறித்திரையில்
என் சின்னமகள்
ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்
ஆசிரியர் குறிப்பு:-
இந்தப் புதுக்கவிதையைப் பாடியுள்ளவர் ஹெச்.ஜி.ரசூல் ஆவார். இவர் இயற்கை, மொழி, இலக்கியம், தமிழ் பண்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி இதனைப் படைத்துள்ளார்.
பாடல் பொருள்:-
இரண்டாயிரம் ஆண்டுக்கால வாழ்வுடைய நீண்ட நெடிய கவிதையைப் பெற்றெடுத்த முதுமையான தாயைத் தேடிக் களைத்தேன். அது ஒரு காலத்தில் தன் தாகத்தை தணிக்கத் தண்ணீரைத் தேடி அலைந்த காக்கை, மண்பானையைக் கண்ட நீர் பருக அல்லல் உற்றது போல் உள்ளது. பாடப் புத்தகத்தில் படங்களைப் பார்ததுச் சொல்லிக் கொடுத்த கதைக்கு உள்ளிருந்து எந்த நீரூற்றும் பீறிட்டு எழவில்லை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து வகையான நிலங்களையும் பெயர்தெடுத்து வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க வழி இல்லை.
நீல வண்ணக் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அந்தப் பறவை முட்டை ஒன்றை இட்டது. அது குஞ்சு பொரித்துபோது, பெண் ஒருத்தி ஒருகையல் படைக்கருவியும் இன்னொரு கைளில் புல்லாங்குழலுமாகதத் தோன்றினாள்! வயல்வெளி எங்கும் மருதயாளின் ஓசை சலசலத்து வழிந்து ஓடியது! கால்களைச் சுழற்றி ஆடிய நாட்டிய நங்கை (விறலி)யின் கூத்தின் முன், இந்த பிரபஞ்சமே தன்னை அலங்கரித்துக் கொண்டது. பாடலிசைப்பவனின் கைக்கோப்பை கள்ளின்றி இப்போது காலியாக உள்ளது. அதோ தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்து எடுத்த பூவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, வலியிலி மூழ்கி துன்புறம் பசுமையான தாவரத்தின் கண்களில் இரத்தம் ஒருதுளியாக தேங்கி இருப்பதைப் பாரத்தாயா? சங்க இலக்கிய கவிதையிலிருந்து ஒன்றைத் திறந்து கொண்டு, காக்கைபாடினி அம்மை வெளிவந்தாள். என்னைக் கண்டு “ஆறாம் திணையில் துளிர்த்தெழுந்த அறிவியில் தமிழ் நீ” எனக் கூறியபடி அருகில் வந்து முத்தம் கொடுத்தாள். அப்போது பூமியில் பறவைகள் தொலைந்துபோய் இருந்தன. குளிர் ஊட்டப்பட்ட அறை ஒன்றுக்குள் உட்கார்ந்து கொண்டு, என் சிறி மகள் கணிப்பொறித் திரையில் ஒரு காக்கையின் படத்தை வரைந்து கொண்டிருந்தாள்.
பொருள்:-
இயற்கைவழி வாழ்ந்ததை மறந்து, இன்று மக்கள் அறிவியல் சாதனங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வெளியில் சிட்டுக் குருவிகளையும் காக்கைகளையும் காண முடியவில்லை. வசிக்கும் அறை குளிரூட்டப்பட்டிருக்கிறது. வாழ்வு முறைகள் அனைத்தும் மாறி இருக்கின்றன. பண்டைய இயற்கை வாழ்வை இலக்கியங்களில் இருந்துதான் காண முடிகிறது. அவற்றையாவது காப்போம் தாகம் தீர்க்க முயல்வோம் என்பதே மையப்பொருளாகும்
மொழியோடு விளையாடு
எண்ணங்களை எழுத்தாக்குக
ஆறறிவு படைத்த மனிதஇனம்
ஐயறிவு படைத்த விலங்கினம் நான்
நான் தோன்றிய காலம் முதல் இப்படியே வாழ்கிறேன்
நீ குளிரில் கம்பளிக் கோட்டும் குல்லாயும் அணிந்துள்ளாய்
உன் அறிவும் கம்பளிக் கோட்டும் குல்லாயும் அணிந்துள்ளாய்
நான் இன்றும் இயற்கையோடு பொருந்தியே வாழ்கிறேன்
என்ன அறிவு இருந்து என்ன பயன்?
இயற்கை வழி வாழ்வே நல்வாழ்வு என்று தெரிந்துகொள்!
நாய்தானே சொன்னது என்று நக்கல் செய்யாதே!
மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்றார் ஐயன் வள்ளுவர்!
குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம்
1. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளைக் கூறும் துறை (9)
விடை : பொருண்மொழிக் காஞ்சி
7. தேன் – மற்றொரு சொல் (4)
விடை : பிரசம்
15. புல்லின் இதழ்கள் – நூலாசிரியர் (4)
விடை : விட்மன்
16. கற்ற வித்தைகள் அரங்கேற்றும் இடம் (4)
விடை : மன்றம்
17. சி.சு. செல்லப்பா நடத்திய இதழ் (4)
விடை : எழுத்து
19. ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பக்தி இலக்கியம் (6)
விடை : திருவாசகம்
வலமிருந்து இடம்
6. யானை – வேறொரு சொல் (5)
விடை : அஞ்சனம்
9. வந்தவாசிக்கு அருகில் சமணப்பள்ளி இருந்த ஊர் (3)
விடை : வேடல்
12. உமறுப்புலவரை ஆதரித்தவர் (5)
விடை : சீதக்காதி
20. கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் (4)
விடை : அன்னம்
மேலிருந்து கீழ்
2. புதுமைபித்தனின் புகழ்பெற்ற சிறுகதை (4)
விடை : காஞ்சனை
3. பாரதி நடத்த விரும்பிய கருத்துபட இதழ் (6)
விடை : சித்திராவளி
4. இளையராஜா உருவாக்கிய இராகம் (5)
விடை : பஞ்சமுகி
5. நற்றிணை 153வது பாடலை இயற்றியவர் (6)
விடை : தனிமகனார்
6. அணுவைப்போலச் சிறுத்து நிற்கும் ஆற்றல் (3)
விடை : அணிமா
12. இந்தச் சொல்லின் திரிபே சீறா (3)
விடை : சீறத்
13. மகாபாரத்தில் கொடைவீரன் (4)
விடை : கர்ணண்
14. பாரதிதாசன் நடத்திய இதழ் (3)
விடை : குயில்
கிழிருந்து மேல்
7. தவறு – வேறொரு சொல் (2)
விடை : பிழை
8. தருமு சிவராம் என்னும் புனைபெயரிலும் எழுதியவர் (4)
விடை : பிரமிள்
9. மூங்கில் – மற்றொரு செல் (2)
விடை : வேய்
10. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் (3)
விடை : திருவாதவூர்
11. ஐங்குறுநூறு பாடும் மலர்களில் ஒன்று (2)
விடை : காயா
18. மலை என்றும் சொல்லாம் (2)
விடை : வரை
19. பத்தாம் திருமுறை (7)
விடை : திருமந்திரம்
நிற்க அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்
- நாங்கூழ்ப்புழு – Earthworm
- முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)
- விழிப்புணர்வு – Awareness
- உலகமயமாக்கல் – Globalisation
- கடவுச்சீட்டு – Passport
- பொருள் முதல் வாதம் – Materialism
அறிவை விரிவு செய்
- மனைவியின் கடிதம் – இரவீந்திரநாத தாகூரின் சிறுகதைகள் – மொ.பெ – த. நா. குமாரசுவாமி
- ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் – கவிஞர் இன்குலாப்
- நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…