TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 8.5 – செவ்வி

8.5 செவ்வி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 8.5 – செவ்வி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Seivi

11th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

நர்ந்தகி நடராஜனின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க

வேதனையில் சாதனை:-

திருநங்கையருக்கு இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி காட்டியவர் நர்த்தகி நடராஜ். அமெரிக்காவில் இரண்டு வார நிகழ்ச்சியை எதிர்பாரத்துச் சென்றவர். ஒருநாள் நிகழ்ச்சியாக மாற்ப்பட்டதை அறிந்து வேதனையுற்றார். எனினும் தம் கால் சதங்கை ஒலியை அரங்கில் நிறைந்தது காண்பவரை வியக்கவைத்து இரு மாதங்கள் தொடர்ந்து தம் ஆற்றலை வெளிப்படுத்திய நிகழ்வே அவர்தம் ஆற்றலை விளக்கப் போதுமான சான்று.

நாட்டியத்தில் ஈடுபாடு:-

பெண்மையை உணரத் தொடங்கிய குழந்தைப் பருவத்தில் திரைப்பட நடனங்கள் தன்னை ஈர்த்ததையும் ஆடத் தொடங்கிய பின் நாட்டியத்தின் உட்கூறுகளை அறிய முயற்சி செய்தது, ராக தாளத்துடன் நாட்டியத்திற்கான கருத்தை அறிமுகம் செய்து கொண்டது ஆகியவற்றை வெளிப்டுத்தியுள்ளார்.

நடனத்திற்கு கருதேர்வு:-

எதிர்கொள்ளும் பிரச்சனைக்காக மட்டுமன்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் மரபில் தோன்றிய தான் பரதத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், தமிழ் இலக்கியங்களில் அதன் இடத்தை தெரிந்து  நம் கலையை நாம் ஆடவேண்டும் என்ற உறுதியோடு சங்க இலக்கியம் தொடங்கி நவீன கவிதை வரை தக்கவற்றைத் தம் நடனத்தில் கருவாக எடுத்துக் கொண்டு விழிப்புணர்வை ஆயுதமாகக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உலகைக் கவரும் பரதம்:-

ஜப்பானின் ஒசாகா நகரில் திருவாசக தேவாரப் பண்களுக்குத் தாம் நிகழ்த்திய பரத அபிநயங்களைக் கண்டு கண்கலங்கி மெளனத்தோடு கரஒலி எழுப்பியுள்ளதைக் கூறி, பரதத்தை உலகின் எப்பகுதியினரும் முழுமையாக உள்வாங்கிப் புரிந்து கொள்வர் என்பதை விரித்துள்ளார்.

நம் பண்பாட்டைத் தேடவைத்தல்:-

நம் பண்பாடு, வாழ்வாங்கு வாழந்த் மரபு சார்ந்தது. அதை எப்பண்பாட்டாலும் புறக்கணிக்க முடியாது. நார்வேயில் திருக்குறளை மையப்படுத்தி நிகழ்த்திய நிகழ்ச்சி அம்மக்ளைத் திருக்குறளைத் தேடிக் கற்கத் தூண்டியது நம் பண்பாடுப் புலமை என விளக்கியுள்ளார்.

தமிழ்வழிக் கல்வி பயின்று, வழக்கறிஞராக எண்ணியவர். இன்று மேடையேறிப் பல்வேறு இலக்கிய மேடைகளில் பேசுவதையும், தமிழ் இலக்கியங்களை  வாசிப்பதையும், அவரை குறித்த ஆய்வு செய்வதையும் பணியாகக் கொண்டுள்ளதைக் தெளிவுபடுத்தினார்.

சோதனை வென்று சாதனை:-

நடனக்கலைக்கூடம் வாயிலாகப் பலர் தம்மை அம்மா என அழைப்பதை எண்ணிக் கருணையில் நெகிழ்வதை உணர்வதாகக் கூறியுள்ளார். நர்த்தகி நடராஜ் இன்றைய உலகில் பல உயரங்களைத் தொட்டு சாதனை படைத்து வருகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கிட்டப்பா நர்த்தகி நடராஜனுக்கு சூட்டிய பெயர் _________

  1. நடனப்புயல்
  2. நடன பேரொளி
  3. நாட்டிய பேரொளி
  4. நர்த்தகி

விடை : நர்த்தகி

2. நர்த்தகி நடராஜனின் தோழி _________

  1. சக்தி
  2. மாலா
  3. சரளா
  4. கலா

விடை : சக்தி

3. இன்று மட்டுமல்ல எல்லாக் காலகட்டத்திலும் திருநங்கையர் இருந்திருக்கின்றனர் என்பதற்கு சான்று தரும் நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. தொல்காப்பியம்
  3. நன்னூல்
  4. சீவகசிந்தாமணி

விடை : தொல்காப்பியம்

4. 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் __________

  1. சிலப்பதிகாரம்
  2. தொல்காப்பியம்
  3. நன்னூல்
  4. சீவகசிந்தாமணி

விடை : சிலப்பதிகாரம்

5. நர்த்தகி நடத்தும் அறக்கடையின் பெயர்

  1. அன்பு அறக்கட்டளை
  2. வெள்ளியம்பலம் அறக்கட்டளை
  3. அம்பலம் அறக்கட்டளை
  4. நேசம் அறக்கட்டைள

விடை : வெள்ளியம்பலம் அறக்கட்டளை

6. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்

  1. நர்த்தகி
  2. பிரித்திகா யாஷினி
  3. ஜேயிதா மோண்டல மாஹி
  4. தாரிகா பானு

விடை : பிரித்திகா யாஷினி

7. வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் “லோக் அதாலத்” நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் ___________

  1. ஜேயிதா மோண்டல மாஹி
  2. பிரித்திகா யாஷினி
  3. தாரிகா பானு
  4. நர்த்தகி

விடை : ஜேயிதா மோண்டல மாஹி

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment