TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 5.3 – திருவிளையாடற்புராணம்

5.3 திருவிளையாடற்புராணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 5.3 – திருவிளையாடற்புராணம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Thiruvilayadalpuranam

10th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • கேள்வியினான் – நூல் வல்லான்
  • கேண்மையினான் – நட்பினன்
  • தார் – மாலை
  • முடி – தலை
  • முனிவு – சினம்
  • அகத்து உவகை – மனமகிழ்ச்சி
  • தமர் – உறவினர்
  • நீபவனம் – கடம்பவனம்
  • மீனவன் – பாண்டிய மன்னன்
  • கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசுச் சின்னம்)
  • நுவன்ற – சொல்லிய
  • என்னா – அசைச்சொல்

இலக்கணக் குறிப்பு

  • கேள்வியினான் – வினையாலைணையும் பெயர்
  • காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
  • கழிந்த – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

தணிந்தது = தணி + த் (ந்) + த் + அ +து

  • தணி- பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – சாரியை
  • து – படர்க்கை வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • திருவிளையாடற்கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
  • இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க காணடம் என மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது.
  • பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.
  • 17-ம் நூற்றாண்டில் சேர்ந்தவர்
  • சிவபக்தி மிக்கவர்
  • வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ____________ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ____________

  1. அமைச்சர், மன்னன்
  2. அமைச்சர், இறைவன்
  3. இறைவன், மன்னன்
  4. மன்னன், இறைவன்

விடை : மன்னன், இறைவன்

குறு வினா

1. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்“

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

  • கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) – குலேசபாண்யடின்
  • காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்

2. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்ந்தான் = அமர்  + த் (ந்) + த் +ஆன்

  • அமர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

சிறு வினா

மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

  • குலேச பாண்டியன் தமிழ் புலமை வாய்ந்தவன்.
  • அவன் அவையில் புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை மன்னன் பொருட்படுத்தாமல் அவமதித்தான்.
  • இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் முறையிட்டார்
  • இறைவன் கடம்பவனம் கோயிலை விட்டு நீங்கி வைகை ஆற்றின் தெற்கே கோயில் உருவாக்கி அமர்ந்தார்.
  • இதையறிந்த  மன்னர் யான் என்ன தவறு செய்தேன்? ஏன் இங்கு அமர்நதீர்? என்று வருந்தினான்.
  • இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த தவறும் இல்லை என்றார்.
  • தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாரை அழைத்து மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தி, பணிந்து வணங்கி தம் தவறைப் பொறுத்தருள வேண்டினான்.

நெடு வினா

இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

மன்னனின் அவையில் இடைக்காடனார்:-

வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். இதைக் கேள்வியுற்ற இடைக்காடனார் குலேசனின் அவைக்கு சென்று தான் இயற்றிய கவிதையப் படித்தார்.

இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல்:-

வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். தமிழறியும் பெருமான், அடியார்க்கு நல்நிதி போன்றவன், பொருட்செல்வமும், கல்விச் செல்வமும் உடையவன் என்று கேட்டுணர்நது தாங்கள் முன் சுவை நிரப்பிய கவிதை பாடினார் இடைக்காடனார். பாண்டியன் சிறிதேனும் பாடலைப் பொருட்படுத்தாமல் புலவரின் புலமையை அவமதித்தான்.

இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல்:-

இறைவா! பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவான பார்வதியையும், பொருளின் வடிவான உம்மையும் அவமதித்தான் என்று சினத்துடன் இறைவனிடம் கூறினார்.

இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல்:-

இடைக்காடனாரின் வேண்டுகோளை ஏற்று வைகை ஆற்றின் தெற்கே கோயில் அமைத்து குடி கொண்டார் இறைவன். உடனே கபிலரும் மகிழ்ந்து இடைக்காடனாேராடு வெளியேறினார்.

இறைவனிடம் மன்னன் வேண்டுதல்:-

இதையறிந்த மன்னன் இறைவனிடம் என் படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் ஒழுக்கம் குறைந்தாேரா? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமம், துறவறமும் தத்தம் வழயில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார் குலசேகர பாண்டியன்.

இறைவனின் பதில்:-

“வயல் சூழ்ந்த கடம்ப வனத்தை விட்டு ஒருபோது நீங்க மாட்டோம்.” “இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை”  என்றார். “இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்” என்றார்.

பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல்:-

வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டான் குலேச பாண்டியன், மகிழ்ந்து, பரம்பொருளே! புண்ணியனே! சிறியவரின் குற்றம் பொறுப்பு பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.

மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல்:-

மன்னன் மாளிகை வாழை, சாமரை இவற்றாலன விதானமும் விளக்கும் உடையது. பூரண கும்பம் மாலை, கொடி இவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் குழு இடைக்காடனாரை மங்கலாமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர்த்தினர்

மன்னன் புலவரிடம் வேண்டுதல்:-

மன்னன் புலவர்களிடம், தான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்து கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அழுதம் போன்ற சொல்லால் எங்கள் சினம் தணிந்து விட்டது என்றார்.

கற்பவை கற்றபின்

1. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலத்தை நாடாகமாக்கி வகுப்பில் நடித்துக் காட்டுக

  • நாடகம் – இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
  • நாடகமாந்தர் – இடைக்காடனார், குலேசபாண்டியன், இறைவன் (சிவன்) கபிலர்
  • நிகழிடம் – பாண்டியநாடு
இடைக்காடனார் மன்னா, வாழ்க! நான் கபிலனின் நண்பன். நான் இயற்றிய பாடலை உங்கள் முன் பாட விரும்புகிறேன்.
குலேசபாண்டியன் (கர்வத்தோடு) பாடும். (இடைக்காடனார் பாடலைப் பாடுகிறார்)
இடைக்காடனார் (இறைவனிடம் முறையிடம்) இறைவா! என் பாடலை பொருட்படுத்தாமல் உம்மையும் பார்வதி தேவியையும் அவமதித்தான்.
இறைவன் கபிலருக்காகவும், இடைக்காடனாருக்கும் இந்தக் கோவிலை விட்டு செல்கிறேன் (இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல்)
குலேசபாண்டியன் இறைவனே! என்னால் என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? வேதங்களை பயின்றவர் நல்லொழுக்கத்தில் தவறினானா? தவழும் தருமமு் சுருங்கியதே? இல்லறம் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்.
இறைவன் இடைக்காடனார் பாடலை இகழந்த குற்றம் தவிர வேறு குற்றம் இல்லை. இடைக்காடனார் மீது கொண்ட அன்பால் இங்கு வந்தோம்.
குலேசபாண்டியன் பார்வதி தேவியை ஒரு பாகத்தில் கொண்ட பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்கும் பெருமையல்லவா? என் குற்றத்தை பொறுக்க (புலவர்களை ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர வைத்தல்)
குலேசபாண்டியன்
புலவர்களே என்னை மன்னியும். இடைக்காடனாருக்கு செய்த குற்றத்தை பொறுக்க
இடைக்காடனார் மற்றும் கபிலர் மன்னா! நீர் கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமா தீ தணிந்தது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கற்றோர் – வினையாலணையும் பெயர்
  • உணர்ந்த கபிலன் – பெயரச்சம்
  • தீம்தேன், நல்நிதி, பெருந்தகை – பண்புத்தொகைகள்
  • ஒழுகுதார் – வினைத்தொகை
  • மீனவன் – ஆகுபெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

தாழ்ந்தான் – தாழ் + த்(ந்) + த் + ஆன்

  • தாழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக.

1. கபிலரின் நண்பன் ______________

  1. பரஞ்சோதி முனிவர்
  2. இடைக்காடனார்
  3. குலேச பாண்டியன்
  4. ஒட்டக்கூத்தர்

விடை : இடைக்காடனார்

2. திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் ______________

  1. பரஞ்சோதி முனிவர்
  2. இடைக்காடனார்
  3. குலேச பாண்டியன்
  4. ஒட்டக்கூத்தர்

விடை : பரஞ்சோதி முனிவர்

3. திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ______________

  1. 96
  2. 86
  3. 74
  4. 64

விடை : 64

4. “தகடூர் எறிநத பெருஞ்சேரல்” இரும்பொறை யாருக்கு கவரி வீசினாள் ______________

  1. பரஞ்சோதி முனிவர்
  2. இடைக்காடனார்
  3. குலேச பாண்டியன்
  4. மோசிகீரனார்

விடை : மோசிகீரனார்

5. வேப்பமாலை அணிந்த மன்னன் ______________

  1. சேரன்
  2. சோழன்
  3. பாண்டியன்
  4. பல்லவன்

விடை : பாண்டியன்

6. மோசிகீரனார் முரசுக் கட்டலில் கண்ணயரக் காரணம் ______________

  1. குளிர்ந்த காற்று வீசியதால்
  2. நல்ல உறக்கம் வந்ததால்
  3. களைப்பு மிகுதியால்
  4. அரசன் இல்லாமையால்

விடை : களைப்பு மிகுதியால்

7. “மூரித் தீம் வழிந்து ஒழுகு தாரனைக் கண்டு” என்னும் தொடரில் தாரனை என்பது ______________ குறிக்கிறது

  1. சேரன்
  2. சோழன்
  3. பல்லவன்
  4. பாண்டியன்

விடை : பாண்டியன்

8. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் ______________

  1. தஞ்சாவூர்
  2. திருமறைக்காடு
  3. திருத்துறைப்பூண்டி
  4. திருவண்ணாமலை

விடை : திருமறைக்காடு

9. திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை ______________

  1. 2
  2. 3
  3. 4
  4. 10

விடை : 3

10. இடைக்காடனார் பிணக்கு தீரத்த படலம் இடம் பெறும் காண்டம் ______________

  1. மதுரைக்காண்டம்
  2. கூடற்காண்டம்
  3. திரு ஆல்வாய்க் காண்டம்
  4. யுத்த காண்டம்

விடை : திரு ஆல்வாய்க் காண்டம்

10. அரசரும் புலவருக்கு ______________ வீசுவா்

  1. கவண்
  2. கவரி
  3. கணையாழி
  4. கல்

விடை : கவரி

11. குலேச பாண்டியன் ______________ நாட்டை ஆட்சி புரிந்தான்

  1. பல்லவ
  2. பாண்டிய
  3. சேர
  4. சோழ

விடை : பாண்டிய

12. சொல்லின் வடிவமாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் ______________

  1. பார்வதி
  2. சரஸ்வதி
  3. லெட்சுமி
  4. துர்கை

விடை : பார்வதி

13. பரஞ்சோதி முனிவர் ______________ நூற்றாண்டைச் சேர்ந்தவர்

  1. 10
  2. 12
  3. 17
  4. 18

விடை : 17

14. பரஞ்சோதி முனிவர் ______________ மீது பக்தி மிக்கவர்

  1. பெருமாள்
  2. முருகன்
  3. நான்முகன
  4. சிவன்

விடை : சிவன்

15. கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர் ______________

  1. குலேசபாண்டியன்
  2. இறைவன்
  3. இடைக்காடனார்
  4. கபிலர்

விடை : இறைவன்

குறு வினா

1. “சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே” என்று யார் யாரிடம் கூறியது?

இடைக்காடனார் இறைவனிடம் கூறினார்

2. “நின்இடம் பிரியா இமையப் பாவை” என்று இவ்வடிகளில் சுட்டப்படுவர் யார்?

ஈசன் இடத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவியே இவ்வடிகளில் சுட்டப்படுகின்றார்.

3. “சொல் பொருளான உன்னையும் இகழந்தான்” பொருளானவன் யார்? இகழந்தவன் யார்?

  • பொருளானவன் – திருஆல்வாய் இறைவன் ஈசன்
  • இகழந்தவன் – குலேச பாண்டின்

4. “பிழைத்தனவோ யான் அறியேன் எந்நாய்” யார் யாரிடம் கூறியது?

குலேச பாண்டின் இறைவனிடம் (ஈசன்) கூறினார்.

5. திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களை கூறுக.

திருவிளையாடற் புராணம் மூன்று காண்டங்களை கொண்டது. அவை

  • மதுரைக் காண்டம்
  • கூடற்காண்டம்
  • திருவாலவாய் காண்டம்

6. திருவிளையாடற் புராணம் எத்தனை படலங்களை கொண்டது?

திருவிளையாடற் புராணம் 64 படலங்களை கொண்டது.

7. சொல் வடிவாய் நின்றவர் யார்?

சொல் வடிவாய் நின்றவர் – பார்வதிதேவி

8சொல் பொருளாய் விளங்கியவர் யார்?

சொல் பொருளாய் விளங்கியவர் – இறைவன் (ஈசன்)

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment