TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 5.4 – புதிய நம்பிக்கை

5.4 புதிய நம்பிக்கை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 5.4 – புதிய நம்பிக்கை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Puthiya Nambikkai

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

 • புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக் கொண்டே வருகிறது.
 • “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப் பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது.
 • உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்.
 • இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாக படைத்துள்ளார் கமலாலயன்.
 • இவரின் இயற்பெயர் வே.குணசேகரன்.
 • வயதுவந்தோர் கல்வி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

முன்னுரை:-

வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த வகையில் கல்வி அறிவற்ற, இருட்சமூகத்தில் ஒற்றைச் சுடராய் பிறந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றி, மேர் மெக்கலியோட் பெத்யூர் கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமை வாழ்க்கை:-

மேரி தன் தாய் தந்தையோடு பருத்திக் காட்டில் வேலை செய்யும் கல்வி அறிவற்ற உழைக்கும் குடும்பம், அச்சூழலிலும் மேரி தனக்கென்ற தனிபாதை வகுப்பாள். அது, எதுவாகினும் தான் முதலில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவாள்.

மேரிக்கு எற்பட்ட அவமானம்:-

மேரி ஓருநாள் தாயுடன் வில்சன் வீட்டிற்கு செல்கிறாள். அங்கு குழந்தைகள் விளையாடுவதை கண்டு வியப்புற்றாலும் அவள் கண்கள் அங்கு இருந்த புத்தகத்தின் மீதே சென்றது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்றபோது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி உன்னால் படிக்க முடியாது என்று கூறினாள். அந்த வார்த்தை அவள் மனதைக் கிழித்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறினாள்

மேரியின் ஏக்கம்:-

வில்சன் வீட்டில் நடந்த அவமானங்களை எண்ணி கண்ணீர் வடித்தத் தன் தந்தையிடம் நான் படிக்க வேண்டும். படித்தால்தான் இச்சமூகம் மதிக்கும் என்று கூறுகிறாள்.

தந்தையின் அறிவுரை:-

மேரி நாம் பள்ளி செல்ல முடியாது. நமக்கென்று தனியாகப் பள்ளிக்கூடம் இல்லை. வெளியூரில் பள்ளியில் வெள்ளைக்காரர்கள் படிக்கும் பள்ளிதான் இருக்கிறது. அதிலும் நம்மைச் சேர்க்கமாட்டார்கள் என்றான்

மேரியின் தன்னம்பிக்கை:-

பதினொரு வயது நிரம்பி மேரி வயல்காட்டிலிருந்து பருத்தி மூட்டையைச் சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தாள். அப்போது வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத பெண் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, நீ படிக்க வேண்டும்; உன் வேலைகளை முடித்தக் கொண்டு சீக்கிரம் வரவேண்டும் என்றனர். மேரிக்கு நா எழவில்லை. வாயடைத்து நின்று வாசிக்கப் புறப்பட்டாள்; படிக்கத் தொடங்கினாள்

புதிது புதிதாக கற்றாள். தன் பாதையை மெல்ல மெல்ல உயர்த்தினாள். இறுதி வகுப்பு படித்த சான்றிதழ் பெற்றாள்.

பட்டமளிப்பு விழா:-

தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்த மேரி, வில்சனின் இளைய மகள் என்னை அவதிக்கா விட்டால் இந்த ஊக்கம் கிடைத்திருக்காது. அச்சிறுமியின் செயல் எனக்கி நேராவிட்டால் இந்த விருது பெற இயலாது என்று எண்ணி பெருமிதம் அடைந்த மேரிக்கு எழுத படிக்கத் தெரியும் எனப் படடம் அளித்து சிறப்பித்தது.

மேற்படிப்பு:-

பட்டமளிப்பு விழாவின்போத வில்சன் தோளில் மேரியை அணைத்து “நீ என்ன செய்யப்போகிறாய்” என்றார். “மிஸ் நான் மேலும் படிக்க விரும்புகிறேன்” என்றார். ஆனால் அலைகடலில் அகப்பட்ட கப்பல் கரைசேர இயலாத நிலைபோல் இருந்தாள்.

புதியதோர் பயணம்:-

மீண்டும் தன் பணியினைப் பருத்திக்காட்டில் தொடங்கினார்கள். அப்போது மிஸ் வில்சன் அங்கு வந்து, வெள்ளைக்காரப் பெண்மணி ஒரு கருப்பின குழந்தையின் படிப்பிற்கா பணம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள். நீ மேற்படிப்பிற்காக டவுனக்கு போக வேண்டும் தயாராகு என்றார் மேரியிடம்.

ஊரே கூடுதல்:-

மேரி மேல்படிப்பிற்குச் செல்ல தொடர்வண்டி நிலையத்தில் ஊரே ஒன்று கூடியது. அனைவரும் குட்பை மேரி, குட்பை வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி விடை கொடுத்தனர்.

முடிவுரை:-

சாதாரணப் பெண்ணாக பிறந்து சாதனைப் பெண்ணாக மாறியது மேரியின் வாழ்வு. மேலும் சமுதாயத்தின் அறியாமை இருளைப் போக்க தோன்றிய மேரிஜென்னின் வாழ்வியில் நிகழ்வுகளைப் போல நாமும் அவமானங்களை வெகுமானமாக மாற்ற முயற்சிப்போம்.

’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’

என்பதனை உணர்வோம்! வெற்றி பெறுவோம்!!

கற்பவை கற்றபின்

1. கல்வி வாய்ப்பற்ற சூழலில் ஒன்றைச் சுடராக வந்து ஒளியேற்றினார் மேரி மேக்லியோட் பெத்யூர் அதுபோலத் தமிழகத்தில் கல்வி வாய்ப்பற்றவர்களின் வாழ்வில் முதற்சுடர் ஏற்றியவர்களுள் யாரேனும் ஒருவர் குறித்த செய்திகளைத் தொகுத்துச் சில படங்களுடன் குறும்புத்தகம் ஒன்றைக் குழுவாக உருவாக்குக

10th Standard - Puthiya Nambikkai - Ayodthidasar

இளமை:-

 • 20.05.1845-ல் கோவை அரசம்பாளையத்தில் பிறந்தார்.
 • இயற்பெயர் – காத்தவராயன்
 • தந்தை – கந்தசாமி
 • தன் ஆசிரியர் மீதுள்ள பற்றின் காரணமாக அவர் பெயராகிய அயோத்திதாசர் என்பதைத் தன் பெயராக மாற்றிக் கொண்டார்.

கல்விப் பணி:-

தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் அயோத்திதாசர் பிரம்ம ஞானசமை ஆல்காட் தொடர்பால், சென்னையில் முக்கியமான ஐந்த இடங்களில் பஞ்சமர் எனத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசப் பள்ளிகளை நிறுவி சிறந்த கல்வியினை வழங்கினார்.

சமூகப் பணி:-

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரும்பாடுபட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வசதியோடு கல்வி உதவித் தொகையும் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். கல்வியில் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலையும் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும் வழங்கச்செய்தார்.

படைப்புகள்:-

புத்தரது ஆதிவேதம், திருவாசக உரை, ஒருபைசாத் தமிழன் இதழ்

2. கல்விக்கண் திறந்தவர்களுக்கிடையல் கைவிடப் பெண்களுக்காக உழைத்த தமிழகதத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி பற்றிய ஒரு தொகுப்புபேட்டினை உருவாக்கி வகுப்பறையில் காட்சிப்படுத்துக

10th Standard - Puthiya Nambikkai - Muthulakshmi

இளமைப்பருவம்:-

 • புதுக்கோட்டை திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ல் பிறந்தார்.
 • பெற்றோர் ; நாராயணசாமி – சந்திராம்பாள்

சிறப்பு:-

 • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
 • சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

பெண்ணுரிமை முழக்கம்:-

1929-ல் அகில இந்திய பெண்கள் மாநாட்டில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று முழக்கம் செய்தார்.

சமூகப்பணி:-

 • தேவதாசி முறை ஒழிப்பு
 • இருதாரச் தடைச்சட்டம்
 • பெண்களக்கு சொத்துரிமைச் சட்டம்
 • குழந்தைத் திருமண தடைச் சட்டம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. “உனக்குப் படிக்கத் தெரியாது” என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரிமெக்லியோட் பெத்யூன் _____________ உருவாக்கிடக் காரணமானது.

 1. குப்பை கொட்டும் இடத்தில் ஒரு புள்ளியை
 2. தெருமுனையில் ஒரு கல்லூரியை
 3. மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை
 4. கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை

விடை : குப்பை கொட்டும் இடத்தில் ஒரு புள்ளியை

2. மேரிமெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த விதங்கள் _____________

i. சமையல் செய்து ii. தோட்டமிட்டு
iii.  பொது இடங்களில் பாட்டுப் பாடி iv. பிச்சையெடுத்து
 1. i, ii, iii சரி
 2. ii, iii, iv சரி
 3. iii மட்டும் சரி
 4. நான்கும் சரி

விடை : i, ii, iii சரி

3. அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெதயூன் _____________ சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்.

 1. உலகெங்கும் மூலை முடுக்குளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
 2. கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட
 3. மறுமணம் மறுக்கப்பட்ட
 4. உழைக்கும்

விடை : உலகெங்கும் மூலை முடுக்குளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட

4. மேரி மெக்லியோட் பெதயூன் என்னும் அமெரிக்க கல்வியாளரின், வாழ்க்கையை “உனக்க படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர் _____________

 1. அகிலன்
 2. கமலாலயன்
 3. கீதாலயன்
 4. ஜெயகாந்தன்

விடை : கமலாலயன்

5. கொற்கை அமைந்துள்ள மாவட்டம் _____________

 1. திருநெல்வேலி
 2. கன்னியாகுமரி
 3. மதுரை
 4. தூத்துக்குடி

விடை : தூத்துக்குடி

6. “கொற்கை கோமான் கொற்கையும் பெருந்துறை” என்று குறிப்பிடும் நூல் _____________

 1. அகநானூறு
 2. ஐங்குறுநூறு
 3. புறநானூறு
 4. நற்றிணை

விடை : ஐங்குறுநூறு

குறுவினா

கமலாலயன் குறிப்பு வரை

 • மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாக படைத்துள்ளார் கமலாலயன்.
 • இவரின் இயற்பெயர் வே.குணசேகரன்.
 • வயதுவந்தோர் கல்வி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment