TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 8.4 – யசோதர காவியம்

8.4 யசோதர காவியம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 8.4 – யசோதர காவியம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Yasodhara kaviyam

9th Std Tamil Text Book – Download

சாெல்லும் பாெருளும்

  • அறம் – நற்செயல்
  • வெகுளி – சினம்
  • ஞானம் – அறிவு
  • விரதம் – மேற்கொண்ட நன்னெறி

இலக்கணக் குறிப்பு

  • ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க – வியங்கோள் வினைமுற்றுகள்

பகுபத உறுப்பிலக்கணம்

காக்க – கா + க் +க

  • கா – பகுதி
  • க் – சந்தி
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

ஞானம் என்பதன் பொருள் யாது?

  1. தானம்
  2. தெளிவு
  3. சினம்
  4. அறிவு

விடை : அறிவு

நூல் வெளி

  • யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
  • வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.
  • இதன் ஆசிரியர் அறிய முடியவில்லை.
  • இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
  • யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றை கூறுகிறது.
  • இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.
  • பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.

குறு வினா

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன்  அவந்தி நாட்டு மன்னன் யசோதரன்

சிறு வினா

1. நாம் கடை பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?

  • நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.
  • நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
  • ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
  • இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.

2. யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெயியைத் திருக்குறளுடன் ஒப்பிடுக

திருக்குறள்:- “ஒல்லும் வகையால் அறவினை யோவதே
செல்லும்வா யெல்லாஞ் சிறப்பு”
யசோதர காவியம்:- நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
திருக்குறள்:- “ஒல்லும் வகையால் அறவினை யோவதே
பிறத்தல் அதனான் வரும்”
யசோதர காவியம்:- ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்
திருக்குறள்:- “எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
செல்லும்வா யெல்லாஞ் சிறப்பு”
யசோதர காவியம்:- இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைகள் காக்க வேண்டும்

3. பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக?

  • சூளாமணி
  • பெருங்கதை
  • மனோன்மணீயம்
  • புரட்சிக்காப்பியம்
  • இரட்சண்ய யாத்ரிகம்
  • கம்பராமாயணம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. யசோதர காவியம் ____________ காப்பியம்

  1. ஐம்பெரு
  2. ஐஞ்சிறு
  3. ஐங்குறு
  4. புராண

விடை : ஐஞ்சிறு

2. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் ____________

  1. கோவலன்
  2. சீவகன்
  3. யசோதரன்
  4. பாண்டியன்

விடை : யசோதரன்

3. வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல் ____________

  1. யசோதர காவியம்
  2. திருக்குறள்
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : யசோதர காவியம்

4. “”ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” – இவ்வடிகளில் அமைந்த நயம்

  1. எதுகை
  2. மோனை
  3. முரண்
  4. இயைபு

விடை : இயைபு

5. யசோதர காவியம் ____________ என்ற மன்னனின் வரலாற்றை கூறுகிறது.

  1. யசோதரன்
  2. கோவலன்
  3. சீவகன்
  4. பாண்டியன்

விடை : யசோதரன்

6. அவந்தி நாட்டு மன்னன் ____________ ஆவான்

  1. யசோதரன்
  2. கோவலன்
  3. சீவகன்
  4. பாண்டியன்

விடை ” யசோதரன்

7. பொருந்தா இணையை தேர்ந்தெடு

  1. அறம் – நற்செயல்
  2. வெகுளி – சினம்
  3. ஞானம் – அறிவு
  4. விரதம் – பயன்

விடை : விரதம் – பயன்

8. யசோதர காவியத்திலுள்ள சருக்கங்கள் ____________

  1. 20
  2. 15
  3. 10
  4. 5

விடை : 5

பொருத்துக

1. ஆக்குவது அ. வெகுளி
2. போக்குவது ஆ. விரதம்
3. நோக்குவது இ. அறம்
4. காக்குவது ஈ. ஞானம்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. இலக்கியங்கள் எதற்கு உதவுகின்றன?

இலக்கியங்கள் படித்து இன்புற மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்த உதவுகிறது

2. நாம் செய்யும் செயல் எப்படி இருக்க வேண்டும்?

நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.

3. நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் எதை நீக்க வேண்டும்?

நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

4. ஆராய வேண்டுமானல் எவற்றை ஆராய வேண்டும்.

ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.

5. எதனை போற்றிக் காக்க வேண்டும்?

இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment