TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 1.5 – தொடர் இலக்கணம்

1.5 தொடர் இலக்கணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 1.5 – தொடர் இலக்கணம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Thodar Illakanam

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

பலவுள் தெரிக.

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

குழு – 1 குழு – 2 குழு – 3 குழு – 4
நாவாய் மரம் துறை தன்வினை
……………. ……………. ……………. …………….
தோணி மர விருத்தம் காரணவினை
  1. 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை
  2. 1- தாழிசை, 2- மானு, 3- பிறவினை, 4- வங்கம்
  3. 1- பிறவினை, 2- தாழிசை, 3- மானு, 4- வங்கம்
  4. 1- மானு, 2- பிறவினை, 3- வங்கம், 4- தாழிசை

விடை : 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை

குறு வினா

1. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  • உண் – சான்று : கோவலன் கொலையுண்டான்.
  • ஆயிற்று – சான்று : வீடு கட்டியாயிற்று

2. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

  • வீணையோடு வந்தாள் – வேற்றுமைத்தொடர்,
  • கிளியே பேசு – விளித்தொடர்

சிறு வினா

தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

தன் வினை:-

வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

சான்று : பந்து உருண்டது

பிற வினை:-

வினையின் பயன் எழுவாயை அன்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிறவினை எனப்படும்.

சான்று : பந்தை உருட்டினான்

காரண வினை:-

எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் , வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரண வினை எனப்படும்

சான்று : பந்தை உருட்டவைத்தான்

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. எழுவாயை என்றால் என்ன?

சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல்லையே எழுவாய் என்கிறோம்.

2. பயனிலை என்றால் என்ன?

ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம். வினைச்சொல்லே பயனிலை ஆகும்.

3. தோன்றா எழுவாய் என்பது என்ன?

வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது ‘தோன்றா எழுவாய்’ எனப்படும்.

4. பெயர்ப் பயனிலை என்றால் என்ன?

தொடரில் பெயர்ச்சொல் பயனிலையாக வருவது பெயர்ப் பயனிலை எனப்படும்.

5. வினாப் பயனிலை என்றால் என்ன?

தொடரில் வினாச்சொல் பயனிலையாக வருவது வினாப் பயனிலை எனப்படும்.

கற்றவை கற்றபின்

தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.

  • பதவியை விட்டு நீக்குவித்தான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர் – இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.

  • மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக.

  • உண்ணும் தமிழ்த்தேனே

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.

  • திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக.

  • நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான்.

சொற்களைத் தொடர்களாக மாற்றுக.

அ) மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.

  • தன்வினை : மொழி  பெயர்த்தாள்
  • பிறவினை : மொழி பெயர்ப்பித்தாள்

ஆ) பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

  • செய்வினை : பதிவு செய்தான்
  • செயப்பாட்டு வினை : பதிவு செய்யப்பட்டது

இ) பயன்படுத்து –பிற வினை, காரண வினைத் தொடர்களாக.

  • பிற வினை : பயன்படுத்துவித்தாள்
  • காரண வினை : பயன்படுத்தினாளா

ஈ) இயங்கு – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

  • செய்வினை : இயங்கினாள்
  • செயப்பாட்டு வினை : இயக்கப்பட்டாள்

பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.

(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களை , நம்மை, வாழ்வியல் அறிவை)

அ) தமிழ் ____________ கொண்டுள்ளது.

  • செவ்விலக்கியங்களை

ஆ) நாம் ____________ வாங்கவேண்டும்.

  • தமிழிலக்கிய நூல்களை

இ) புத்தகங்கள் ____________  கொடுக்கின்றன.

  • வாழ்வியல் அறிவை

ஈ) நல்ல நூல்கள் ____________ நல்வழிப்படுத்துகின்றன.

  • நம்மை

பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)

அ) எல்லோருக்கும் ________ வணக்கம்.

  • இனிய

ஆ) அவன் ________ நண்பனாக இருக்கிறான்.

  • நல்ல

இ) ________ ஓவியமாக வரைந்து வா.

  • பெரிய

ஈ) ________ விலங்கிடம் பழகாதே.

  • கொடிய

பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

அ) ஊர்தி ________சென்றது.

  • மெதுவாக

ஆ) காலம் ________ ஓடுகிறது.

  • வேகமாக

இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை ________ காட்டுகிறது.

  • அழகாக

ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் ________ காட்டு.

  • பொதுவாக

தொடர்களை மாற்றி எழுதுக.

அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக)

விடை : நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா?

ஆ) பாடினான். (எழுவாய்த் தொடராக)

விடை : அவன் பாடினான்

இ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக)

விடை : இசையோடு அமையும் பாடல்

ஈ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக)

விடை : நீ இதைச் செய்

வேர்ச்சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

அ) தா (உடன்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)

  • உடன்பாட்டுவினைத் தொடர் : தந்தேன்
  • பிறவினைத் தொடர் : தருவித்தேன்

ஆ) கேள் (வினாத் தொடர்)

வினாத் தொடர் : யார் கேட்பவர்?

இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர்)

  • செய்தித் தொடர் : பாரி நெல்லிக்கனி கொடுத்தான்
  • கட்டளைத் தொடர் : ஏழைக்குப் பொருளைக் கொடு

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)

  • செய்வினைத் தொடர் : பார்த்தான்
  • செயப்பாட்டுவினைத் தொடர் : பார்க்கப்பட்டான்
  • பிறவினைத் தொடர் : பார்க்கச் செய்தான்

சிந்தனை வினா

அ) கீழ்கண்ட சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.

1. அவை யாவும் இருக்கின்றன. (தவறு)

விளக்கம் : அவை – பன்மை, யாவும் – ஒருமை

2. அவை யாவையும் இருக்கின்றன. (சரி)

விளக்கம் : அவை – பன்மை, யாவையும் – பன்மை

3. அவை யாவும் எடுங்கள். (தவறு)

விளக்கம் : (இதற்கு அவை யாவும் எடு என்பதே சரி)

அவை – பன்மை, யாவும் – ஒருமை, எடு – ஒருமை

4. அவை யாவையும் எடுங்கள். (தவறு)

விளக்கம் : (இதற்கு அவை யாவையும் எடு என்பதே சரி)

அவை – பன்மை, யாவையும் – பன்மை, எடு – ஒருமை

5. அவை யாவற்றையும் எடுங்கள் (சரி)

விளக்கம் : அவை – பன்மை, யாவற்றையும் – பன்மை

ஆ) புதிய வார இதழ் ஒன்று வெளிவரப் போகிறது. அதற்காக நாளிதழில் விளம்பரம் தருவதற்குச் சொற்றொடர்களை வடிவமைத்து எழுதுக.

“அருவி” புதிய வார இதழ் வெளியீடு – நாளிதழ் விளம்பரம்

அருவி- வார இதழ்

(தமிழக இதழ்கள் வரலாற்றில் புதுத் திருப்பம்

தமிழ் இலக்கிய முன்னோடிகளின்

கட்டுரைகள், கவிதைகள், பேட்டி, விளையாட்டுச் செய்திகள், விளம்பரங்கள்

முகவர்கள் அணுகவும் : 93434 29240

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, மதுரை, திருச்சி சென்னை

பதிப்புகள், படைப்புகள், துணுக்குள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆசிரியர், அருவி வார இதழ், 7, எஸ்.என் ஹைரோடு,திருநெல்வேலி – 627 001.

இ) சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதைப் பதிவு செய்க.

சொற்றொடர் வகைகளை அறிந்தால் தான் பிழையின்றி பேசுவதற்கும் மரபு மாறாமல் எழுதுவதற்கும் பயன்படுகின்றன.

வகைகள் பயன்பாடு
வா – ஒரு சொல் தொடர் வா – கட்டளைத் தொடராக
வந்தான் –  வினைமுற்றுத் தொடர் வந்த – பள்ளிக்கு வந்த மாணவன்
வரச்சொன்னான் – வினையெச்ச தொடர் வந்து – பள்ளிக்கு வந்து சென்ற மாணவன்
வாவா – அடுக்குத்தொடர் வரச்சொன்னான் – அவன் தான் வரச் சொன்னான்
வந்த மாணவன் – பெயரச்ச தொடர் வருக வருக என வரேவற்றான்

ஈ) வந்திருப்பவர்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்திலிருந்து நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் மொழி மரபை இத்தொடரில் பேணுகிறோமா?

விடை :- வந்திருப்பவர் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்தின் நேரடியான தமிழ் மொழி பெயர்ப்பு. இதைக் கேட்டுக் கொள்கிறோம் – என்ற தொடரில் எழுதுவது தான் சிறந்தது. இதே போன்று வருகையைத் தர முடியாது. ஆனாலும் அழைப்பிதழ்களிலும் மேடை நாகரிகம் கருதி “வருைக தர வேண்டுகிறோம்” என்னு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். நம்மொழி மரபைப் பேணவில்லை. மொழி நடைமுறையைப் பின்பற்றகிறோம்.

மொழியை ஆள்வோம்!

படித்துச் சுவைக்க

விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
பிறகுநான் வீணையாய்ப் போனேன்; – சிறகுநான்
சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!
நின்னால் விமானமானேன் நான்!

தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்
வருவாய் எனநீ வருவாய்; – ஒருவாய்
உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று!

– கவிஞர் வாலி

மொழிபெயர்க்க.

  • Linguistics – மொழி ஆராய்ச்சி
  • Philologist – மொழியியற் புலமை
  • Phonologist – ஒலிச்சின்ன வல்லுநர்
  • Literature – இலக்கியம்
  • Polyglot – பன்மொழியாரளர்கள்
  • Phonetics – ஒலிப்பியல்

பொருத்தமான வினைமுற்றாக மாற்றி எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ____________ (திகழ்)

  • திகழ்கிறது

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ____________  (கலந்துகொள்)

  • கலந்துகொள்வாள்

3. உலகில் மூவாயிரம் மொழிகள் ____________ (பேசு)

  • பேசப்படுகின்றன

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ____________ (செல்)

  • சென்றனர்

5. தவறுகளைத் ____________ (திருத்து)

  • திருத்துவேன்

வடிவம் மாற்றுக.

பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம்பெறும் அறிவிப்பாக மாற்றுக.

மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த ”உள்ளங்கையில் உலகம்” என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் (கின்னஸ் சாதனை படைத்த) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.

அறிவிப்பு

நூல்வெளியீட்டுவிழா

  • பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.,
  • புகழினியன்
இடம் வெள்ளி விழா அரங்கம்
அரசு மேனிலைப் பள்ளி, மருதூர்
நாள் திருவள்ளுவர் ஆண்டு 2049
ஆனி மாதம் 7-ம் நாள் (21.06.2018)
முன்னிலை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.,
திருமிகு. மலரவன், அவர்கள்
தலைமை பள்ளித் தலைமை ஆசிரியர்
திருமிகு. முஸ்தபா M.A., M.Ed., அவர்கள்
வரவேற்புரை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.,
புகழினியன்
சிறப்புரை கின்னஸ் சாதனை படைத்த முன்னாள் மாணவர்
கவிஞர். இன்சுவை
நூல் வெளியீடு பூங்குழலி படைத்த “உள்ளங்கை உலகம்”
நன்றியுரை ரா.அன்பரசன்,
பள்ளி மாணவர் தலைவர்

அனைவரும் வருக! அமுதச் சுவை பருக!

தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி ____________

  • சிலைமேல் எழுத்து

2. சித்திரமும் கைப்பழக்கம் ____________

  • செந்தமிழும் நாப்பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு ____________

  • சொல்லாடாதே

4. கற்றோர்க்குச் சென்ற ____________

  • இடமெல்லாம் சிறப்பு

கடிதம் எழுதுக.

உங்களின் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின், “கால்முளைத்த கதைகள்” என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

நண்பனுக்குக் கடிதம்

7/507 வடக்குத்தெரு
வெங்கடேஸ்வரபுரம்

நாள் : 12.10.2022

அன்புள்ள நண்பனுக்கு…

உன் உயிர் நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் நலம். அதுபோல நீயும் உன் குடும்பமும் நலமா? என் பிறந்த நாளுக்கு அனுப்பிய வாழ்த்த மடலும், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் “கால்முளைத்த கதைகள்” என்னும் நூலும் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.

பல கதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. விலங்குகளின் வாழ்க்கை முறையும், அவை எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அவை அதிலிருந்து எவ்வாற மீண்டெழுகின்றது. மனிதர்கள் தரும் பிரச்சனைகளில் இருந்து எப்படி விலங்குகளை எவ்வாற பாதுகாக்கலாம் என்பதை இக்கதைகள் விளக்கி நிற்கின்றது. நீதிகள் பல இக்கதைகளில் பொதிந்துள்ளத. நீயும் இப்புத்தகத்தை படித்தப் பார். உன்னுள்ளும் மாற்றம் ஏற்படும். மற்வை நேரில்

இப்படிக்கு
அ.சங்கர லிங்கம்

உறைமேல் முகவரி

பெறுநர்

சே.சார்லஸ்
23, காமராஜர் நகர்
மதுரை – 5

நயம் பாராட்டுக

விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத்தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில், புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

– ம.இலெ. தங்கப்பா

திரண்ட கருத்து

வானம், கடல், மலை, அருவி, புல்வெளி, வயல், விலங்கு, பறவை என அனைத்திலும் தெரிகின்ற மனதில் தெவிட்டாத பாட்டே! தூய்மை ஊற்றே! அழெகன்னும் ஒழுங்கே! உண்மையே! மக்கள் மனதில் குடியிருக்க வேண்டுகிறேன்.

மோனை நயம்

செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்

எ.கா.

  • விரிகின்ற – விண்ணோங்கு
  • தெரிகின்ற – தெவிட்டாத
  • அழகு – அகத்திலும்

எதுகைத்தொடை

செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்

எ.கா.

  • பொழிகின்ற – பொழிலில்
  • புல்வெளியில் – நல்வயலில்

சுவை நயம்

நாட்டுப் புறச் சிந்து இராகத்தில் இப்பாடலைப் பாடலாம்

சுவை நயம்

இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்றுள்ளது

அணி நயம்

இயற்கை அழகை கவினுற நம் கண்முன்னே இயல்பாகக் காட்டுவதால் இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.

உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.

கிராம கமிட்டி மேனிலைப் பள்ளி
தென்காசி – 627 854உலகத் தாய்மொழி நாள் விழா

நாள் : 15.10.2022 நிகழிடம் : பள்ளிக் கலையரங்கம்
இறைவணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை ச.சிற்பி, இலக்கிய மன்றச் செயலாளர்
தலைமையுரை தலைமையாசிரியர்
சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்புரை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்
நன்றியுரை தமிழ்ச்செல்வன், 9ஆம் வகுப்பு மாணவர்
நாட்டுப்பண் மாணவ, மாணவியர்

அனைவரும் வருக! தமிழமுது பருக!!

மொழியோடு விளையாடு

அகராதியில் காண்க.

1. நயவாமை

  • விரும்பாமை

2. கிளத்தல்

  • சிறப்பித்து கூறுதல்
  • புலப்படக் கூறுதல்

3. கேழ்பு

  • உவமை
  • ஒளி
  • நிறம்

4. செம்மல்

  • தலைவன்
  • தலைமை
  • இறைவன்
  • சிவன்

5. புரிசை

  • மதில்
  • அரண்
  • அரணம்
  • இஞ்சி

வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க

வா
இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்
நான் வந்தேன் வருகிறேன் வருவேன்
நாங்கள் வந்தோம் வருகிறோம் வருவோம்
நீ வந்தாய் வருகிறாய் வருவாய்
நீங்கள் வந்தீர்கள் வருகிறீர்கள் வருவீர்கள்
அவன் வந்தான் வருகிறான் வருவான்
அவள் வந்தாள் வருகிறாள் வருவாள்
அவர் வந்தார் வருகிறார் வருவார்
அவர்கள் வந்தார்கள் வருகிறார்கள் வருவார்கள்
அது வந்த வருகிறது வரும்
அவை வந்தன வருகின்றன வரும்

தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச் சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.

வேர்ச்சொல் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்
தா தந்தான் தருகிறான் தருவான்
காண் கண்டான் காண்கிறான் காண்பான்
பெறு பெற்றேன் பெறுகிறேன் பெறுவேன்
நீந்து நீந்தினாள் நீந்துகிறாள் நீந்துவாள்
பாடு பாடினாள் பாடுகிறாள் பாடுவாள்
கொடு கொடுத்தார் கொடுக்கிறார் கொடுப்பார்

அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க.

(திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை)

திடலில்

  1. நான் திடலில் ஓடினேன் (தன்வினை).
  2. திடலில் மிதிவண்டியை ஓட்டினேன் (பிறவினை)
  3. நான் நண்பர்களைத் திடலில் ஓடச்செய்தேன் (காரணவினை).
எழுவாய்/பெயர் வினை அடி தன்வினை பிறவினை
நான் ஓடு நான் திடலில் ஓடினேன். நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன்.
காவியா வரை காவியா வேகமாக படம் வரைந்தாள். காவியா வேகமா படம் வரைவித்தாள்
கவிதை நனை நான் கவிதை மழையில் நனைந்தேன். நான் கவிதை மழையில் நனைவித்தேன்.
இலை அசை செடியில் இலை வேகமாக அசைந்தது. செடியில் இலை வேகமாக அசைவித்தது.
மழை சேர் மழை மண்ணைச் சேர்ந்தது. மழை மண்ணைச் சேர்பித்தது.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

9th Standard - Thodar Illakanam - Katchiyai Kandu Kavinura Eluthuga

கூட்டுக்குடும்பமாய் வாழந்து வந்த நீ!
உன் பிள்ளைகள் சுதந்திரமாய் வாழ…
நீ தனிக்குடித்தனம் போகப் பறக்கிறாயோ!
தனிமை கொடிது என்பதை நினைத்து
ஒரு நிமிடம் யோசனை செய் நிற்கிறாயோ?

தமிழ் எண்கள் அறிவோம்.

1 2 3 4 5 6 7 8 9 10
க உ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௧௦/ ௰

தமிழ் எண்களில் எழுதுக.

  1. பன்னிரண்டு – கஉ
  2. பதின்மூன்று – க௩
  3. நாற்பத்து மூன்று – ௪௩
  4. எழுபத்தெட்டு – ௭௮
  5. தொண்ணூறு – ௯௦

நிற்க அதற்குத் தக…

உங்களுடைய நாட்குறிப்பில் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்துக.

திங்கள் வருத்தம் தெரிவிக்கிறேன், பொறுத்துக் கொள்ளவும் ஆகிய சொற்றொடர்களை இன்று இரண்டு முறை வகுப்பில் பயன்படுத்தினேன்.  இதனால் புதிய நண்பர் கிடைத்தார்.
செவ்வாய் நண்பனுக்கு ஏற்பட்ட பாடம் சம்மந்தமான வினாக்களுக்கு பதிலுரைத்தேன். நண்பன் என்னை பாராட்டினார்
புதன் சாலையை கடக்க முயன்ற கண் தெரியாத நபருக்கு உதவி செய்தேன். இதனால் அக்கபகத்தில் உள்ளவர்கள் எனக்கு பாராட்டு தெரிவித்தனர்
வியாழன் நான் பேருந்தில் பயணம் செய்தபோது கிடந்த பணப்பையை எடுத்த உரியவரிடம் ஒப்படைத்தேன். இதனால் அவர்கள் குடும்பத்தினர் பாராட்டினர்
வெள்ளி வீட்டிற்குத் தேவையான பொருள்களை நானாக முன்வந்து வாங்கிக் கொடுத்தேன். அம்மா பாராட்டினார்.
சனி தெருவில் உள்ள முதியோர்களுக்கு உணவளித்தேன். அவர் என்னை மனமுவந்து ஆசீர்வதித்தார்
ஞாயிறு சாலையோரங்களில் மரம் நட்டேன். ஊர் மக்கள் என்னை பாராட்டினர்

கலைச்சொல் அறிவோம்

  • உருபன் – Morpheme
  • ஒப்பிலக்கணம் – Comparative Grammar
  • ஒலியன் – Phoneme
  • பேரகராதி – Lexicon

அறிவை விரிவு செய்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்
  • மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் – மணவை முஸ்தபா
  • தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ் – என். சொக்கன்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment